வெள்ளி, 6 ஜனவரி, 2023

ஏகாதசி - எப்படிப் பொருள்கொள்வது? ஏகம், நவம், தசம் சொல்தோன்றுதல்.

ஏகம் என்ற சொல்லுக்கு  ஒன்று என்பது பொருள்.

தசம் என்பது  பத்து என்ற பொருளுடையது.

தசம் + இ >  தச + இ  >  தசி: (   என்றால் பத்தை உடைய(து) .


ஏகம் என்பது பொருளுருவாக்கம் பெறுவதை,  இப்படி உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் உயிரும்,  தான் ஒன்றாகவே உடலை விட்டு நீங்குகிறது.  இது கண்ணால் அறியமுடிகிறதா என்பது பற்றிக் கூற இயலாது..  இந்த உயிரை ஒன்றாக்கி வைத்திருந்தது உடலே ஆகும். ஈருயிர்கள் வெவ்வேறாக நீங்கினவா, ஒன்றாகச் சென்றனவா என்பது   அறிய முடியாதவை.  ஏகுதல் என்பதிலிருந்து இரண்டின்மையை உணர்ந்துகொள்கிறோம்.  ஏனை உலகப் பொருள்கள் இரண்டாகவிருக்கும்.   எனவே சமஸ்கிருதம் என்னும் இறையியல் மொழி,  இதிலிருந்து   ஏகுதல்  என்ற அடியைக் கொண்டு, "ஏகம்"  - ஒன்று என்று பொருள்தரு சொல்லைப்  படைத்தது.  

ஏகம்: -

இது ஒரு காரண இடுகுறி  எண்ணுப் பெயர்.

தசைத்தல் என்பதும்  உடலில்  பருமன் ஏறுதல் என்பதிலிருந்து அறியப்பட்டே,  தசை >  தசை + அம்> தசம் என்றபடி உணரப்பட்டது.  தசையும்  பற்றுதல் என்ற தன்மை உடையதே.   பல் -பற்று.  பலவான தன்மை குறித்த ஓர் எண் ஆகும்.  ஒன்பது என்பதன் பின்,  பல  ஆனது  பத்து.  ( அதிகமானது).   தசம் என்ற சொல்லினமைப்பிலும்  பண்டை மக்கள் இவ்வாறே சிந்தித்தமை அறிகிறோம். பருமனாக இருக்கும் ஒரு மனிதன், தசைப்பற்று உடையவன் என்பதிலிருந்து,  தசை, பற்று (பத்து)   என்பவை  பலவானதன்மைக்கு ஏற்ற நிலைக்களன் என்பதை உணரலாம்.   ஆதிமனிதன் எண்ண அறியாதவன். அவன் எண்ணிக்கையை,  " அதிகமானது, பலவானது, கூடிவிட்டது"  என்பவற்றிலிருந்து அறிந்துகொண்டே  பின் எண்ணிக்கையை அறிந்து அமைதி அடைந்தான்.   எடுத்துக்காட்டாக,  ஒன்று இருந்தது,  அதனுடன் இன்னொன்று இருந்தது,  ஆகவே ஒன்றாய் இருந்தது>  இவை ஒன்றாய் இருந்தன > இரு > இரு+ அண்டு> அண்டி இன்னொன்று ஒன்றுடன் இருந்தது, இரு+ அண்டு>  இரண்டு  என்பதற்கு வந்து சேர்ந்தது  என்று பொருள்..  குழப்பமே தெளிவின் தாய்   கலங்கியதே நிலை நின்றபின் தெளிநீராகிறது.  உணர்ந்துகொள்ளுங்கள்.

பல்>  பல் + து > பற்று .   இதில் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது.. பத்து என்பது பலவாகிய ஒன்று. அந்த ஒருமை விகுதி  'து' அங்கு உள்ளது.  பலவாகியது  (பல). ஒன்றானது  (து).  பின்னர்தன் தெளிந்து பத்து என்ற எண்ணுப்பெயர் உண்டாயிற்று.

ஆதிமனிதன்,  குழம்பி மீண்டவன்.  ஓர் இடத்தைக் கூட்டும் போது தூசி.  அதையெல்லாம் ஒருவாறு அடக்கிவிட்டால் அப்புறம்தான்--- தூய்மை. தெளிவு.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி.  தமிழுடன் இணையாய் வளர்ந்தது.

பத்தில் ஒன்று சேர்ந்து பதினொன்றாகி,  பதினோராம் நாள் என்பதே :  ஏகாதசி.

பொருள் "ஒன்றுடன் பத்து" என்பது.   அதாவது பதினொன்று.

ஒன்பது என்பது  பத்தில் ஒன்று குறைந்தது என்று பொருள் என்பர்.  வேறொரு சொல்   இருந்து வழக்கிறந்தது என்பது,   அ றிஞர் பிறர் கூறியது.   

எடுத்துக்காட்டுகள்: 

நவம் என்பது " குறைந்தது"  . நவைத்தல் -  குறைத்த.ல்.    அதாவது,   பத்தாகிய முழுமையில் குறைந்தது.

நவமை -  some shortage.  a defect.

ஆயிரம் -  ஆ = ஆக,  இரு =  பெரிய,  அம் -  எண்ணிக்கை;  விகுதி. அமைவுப் பொருள்.

சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி. பூசாரிகள் தொழுகைகட்கு ஏற்படுத்திக்கொண்டது..   தமிழைச் சார்ந்து எழுந்தது.  வால்மிகி-  முன் சிறந்தோராய் இருந்தோர் இன்று தாழ்ந்துவிட்டவர்களின் குழுவில்  தோன்றிய ஆதிப்புலவன்.   பாணினி -  பாணர்களிடைத் தோன்றிய இலக்கணப் புலவன்.   வேதவியாசன் -  மீனவரிடைத் தோன்றிய ஆதிப்புலவன்.   பரதவர் -  மீனவர்.  இந்தியா என்பது மீனவ நாகரிகமும் மலைவாழ்நர் நாகரிகமும் செழித்திருந்த ஒரு கண்டம்.  பண்டை மக்களிடை பழைய வேதங்களை   மக்கட்குப் போதித்தவரகள் ஒரு கூட்டத்தார் இருந்தனர்.   கடல்நாகரிகம்,  ஆற்று நாகரிகம், மலைநாகரிகம் எல்லாம் கலந்ததே பாரதநாடு.    இவற்றுள் அடிப்படை :  பரதவ - மீனவர் நாகரிகம்.  (மீனாட்சி).  ஆர்  என்பது உயர்வு  குறிக்கும் ஒர் தமிழ்ச்சொல்.  அர் என்பதும் அது. ஆரியர்  (ஆர்+இ+ அர்)  என்பவர்கள் வெள்ளைக் காரர்கள் அல்லர்.  ஆர் விகுதிக்கு உரிமை உடையவர்கள்.  ஆசிரியர் என்ற சொல்,  சி  குறைந்து,  ஆரியர் என்றுமாகும்.  வாத்தியா(ய)ர் என்பது வேறுபுலங்களில் "பாத்"  என்று பட்டப்பெயராய் வழங்குவதும்  ஒப்பிடுக.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இலட்சோப இலட்சம்

 இன்று இலட்சோப இலட்சம் என்னும் தொடரைத் தெரிந்துகொள்வோம்.

இலட்சோப  இலட்சம்  என்ற சொற்புணர்வில்,  வடமொழிச் சந்திகளுக்கான இலக்கணம் உள்ளது என்று கூறுவர்.  இதை அமைத்துச் சொன்னவன் பாணகுலத்தைச் சேர்ந்த  பாணினி என்ற இலக்கண ஆசிரியன். 

பாணர் என்போரில் பலர் பிற்காலத்தில் பார்ப்பனர் ஆய்விட்டனர் என்பதும் ஆய்வுக்குரியதாகும்  ஐந்துவகை  நிலங்களிலும்   பரவலாக வாழ்ந்து, (  குறிஞ்சி, முல்லை,  மருதம், நெய்தல், பாலை எனப்படுபவை )  சிறந்த காரணத்தினால்,  பரமாணர் என்ற சொல்லே,  பிராமணர் என்றானது என்ற கருத்தும் உள்ளது.   பர - பரவலான வாழ்க்கை;  மாண் -  சிறப்பு.  அர் -  மக்கள் குறிக்கும் விகுதி. ).  பிரம்மன் என்ற கடவுளை வணங்கியோர் என்பதுமுண்டு.  பிரம்மன் என்பதும் பரமன் என்பதும் கடவுளைக் குறிக்கும் சொற்கள். மொழி தோன்றிய காலத்திலிருந்து பயன்பாடு கண்ட அத்தனை சொற்களையும் காப்பாற்றிவிட்டவன் எவனும் இல்லை..

பாணர்கள் அல்லது "பாடிவாழ்ந்தோர்"  பாடியவையாக    வேதங்களில் பலபாடல்கள் உள்ளன,  இவை பாணர்களுடையவையாகலாம். இவர்கள் இரந்துண்டு வாழ்தலே கடைப்பிடித்தவர்கள்.  இவர்கள் பிற்காலத்தில் வலிமை பெற்று அரசுகளும் அமைந்தனர்.

  இவர்கள் நடமாடும் பூசாரிகளாகவும் செயல்பட்டிருப்பர். இவர்கள் வீடுவீடாகச் செல்வோர்  ஆதலின்,   ஆக்கித் தின்னும் வசதி இல்லாதவர்கள். யார்வீட்டிலும் சென்று  சமையல் கட்டினை மேற்கொண்டு ஆட்சிசெலுத்தினால் சண்டைகள் வரும். இதையெல்லாம் அறிந்தே,  ஆக்கியதை வாங்கிச் சாப்பிடுபவனே அமைந்த வாழ்க்கை உடையோன் என்பது  விதியாயிற்று. இறைவன் அப்படி அமைத்தான் என்று அறியவேண்டும்.

இப்போதெல்லாம் ஒரு பொத்தானைத் திருகியவுடன் எரிவாயு வெளிப்பட்டு நெருப்புப்பற்றிக் கொள்கிறது. சொல் அமைந்த காலத்தில் பிள்ளைகளை அனுப்பி  ஒருகல் தொலைவோ அதற்கு மேலாகவே விறகுபொறுக்கி வந்துதான் பலமுறை ஊதி நெருப்புப் பற்றவைக்கவேண்டும்.  விறகு வேண்டுமென்று  வீதியில் போராடினால் ஆடிக்கொண்டிருக்கலாமே தவிர,  எதுவும் நடைபெறாது.  நடமாடித் திரியும் இடத்திலே வாங்கிச் சாப்பிடுவது  ( பிச்சை எடுத்துக்கொள்வது ) வசதி..  நீங்கள் இன்னோரிடத்தில் அப்படி மாட்டிக்கொண்டால் உங்களுக்கும் அதுவே விதி.  எல்லாரும் வரட்டு கவுரவமும் ஆணவமும் இன்றி வாழ்ந்தனர். இதனால்தான் பகிர்ந்து தின்னவேண்டுமென்பது அழுத்திச் சொல்லப்பட்டது.

கா+ உரவு + அம் -  கவுரவம்.  தன் பெருமையை அமைத்துக்கொண்டு செயல்படும் தன்மை.    உரு + அ +வு -  உரவு.  மனத்துள் கொள்ளும் தன் உரு  ஆகிய எண்ணம்.

எண்ணழுத்திக்  (டிஜிட்டல்)  கருவிகள் இல்லாத காலம்.

இனி இலட்சோப  என்பது.

இலட்ச  --- எண்ணிக்கை.

ஓர்ப  -(   இலட்சங்களாக) எண்ணுதல் -    இங்கு ஓர்ப என்பது ஓப என இடைக்குறைந்தது.  வினைச்சொல்: ஓர்தல்.  ஓர்ப -  வினைமுற்று.  செய்ப, செய்வர் என்னும் முற்றுக்கள் காண.

மீண்டும் இலட்சம் என்ற சொல்.

இங்கு  இல் என்பது இருத்தலைக்குறிப்பது.    "குளத்தில் இருப்பது "  என்பது பொருளிருப்பைக் குறிக்கும்.  ( தண்ணீர்)

அடுத்த >  அடுச்ச.>  அட்ச.     இல் + அடுச்ச .  இலட்ச.  ( பொருள் சேர்ந்த இடம்,  சேர்ந்த பொருள் .   இல் என்பதற்கு வீடு எனினும் பொருள் வரும்.  த -  ச போலி.

இடத்தில் சேர்த்து வைத்த பெரும் பொருள் என்பது இதன் பொருள்.

இவ்வாறுதான் இலட்சம் என்ற சொல் ஆக்கம் பெற்று நடப்புக்கு வந்தது.

அட்சரம் என்பதும் இவ்வாறு வந்ததே.  எழுத்துக்கள் ஒலிமுறைப்படி,  அடுத்தடுத்து வைக்கப்பட்டன.    அடு - அடுத்தடுத்து,   சரி  -   சரியான முறையில்,  அம் -  அமைக்கப்பட்டது. 

தரு > சரு > சரம்.    ( அடுத்து அடுத்துத் தரப்படுதல் . )  தரப்படுதல் என்றால் யாராலும்   எடுத்துத் தரப்படுதல் வேண்டியதில்லை. அதுதானே அவ்வாறாயினும் விந்தை நிகழ்வாயினும்  வேறுபாடில்லை.   கடல்தரு செல்வம்,  கடல் உம்மைத் தேடி வந்து தரவேண்டும் என்று நினையாதீர். கடல்பஃறாரம்  -   அறியவேண்டும்.

அட்ச என்ற சொல்வடிவை மேலே விளக்கினோம்.

அமைவில் இலட்சமாக ஓர்ந்ததே இலட்சோப என்று வருகின்றது.

Later grammarians would   isolate "oba" or a conjunctive piece according with it to form other words.  We have not gone into this matter.

பாணினி தமிழன்.

அறிக மகிழ.

மெய்ப்பு  பின்னர்.

புதன், 21 டிசம்பர், 2022

எதேச்சை

 இன்று பேச்சில் வரும் "எதேச்சை(யாக)"   என்ற சொல்லை அறிவோம்.

இதில் வரும் " இச்சை " என்ற சொல்,  இங்கு விளக்கப் பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_88.html

இதில் வரும் இ என்பது ஓர் சுட்டடிச் சொல்.  இங்கு என்பது இதன் சொல்லமைப்புப்  பொருள்.  இதன் பொருண்மை யாதெனின், இங்குள்ள ஒன்றன்மேல் மனத்தை இட்டு,  அதன்மேல் கவிந்திருத்தல் என்பதாகும். மனத்தொடர்பு உட்படுத்தாத  விடத்து  ,  இங்கு வைத்தல் என்பது இதன் பொருள்.

இ >  இ+ சை >  இச்சை.   சை என்பது தொழிற்பெயர் விகுதி.

இ என்பதிலிருந்து அமைந்த  வினைச்சொல்தான்,   இ > இடுதல் என்பது.

இச்சை என்பது  இ >  இ+ சை ( விகுதி )  .>  இச்சை.

இதனை:  இடுதல்:  இடு+ சை >  இடுச்சை > (  இடைக்குறைந்து  "இச்சை"  என்றும் காட்டலாம்.).

இதில் வேறுபாடு ஒன்றுமில்லை. ஒன்றைச் சுட்டடியிலிருந்து விளக்கினோம்.  மற்றொன்றை வினைச்சொல்லிலிருந்து விளக்கினோம்..   இடு என்ற சொல்லில் டு என்பது வினையாக்க விகுதி.   அ > அடு என்பதிலும் டு விகுதியே ஆகும்.  

இன்னோர் எடுத்துக்காட்டு:

ப என்ற ஓரெழுத்துச் சொல்லின் பொருள், ஒன்று நிலத்துடன் படர்வாக இருத்தல் (lying flat)  என்பதாம்.   படிந்திருக்கக் காணப்படுவது.   ஒரு மனிதன் படுத்திருக்கையில் நிலத்துடன் படிந்துள்ளான்.  ப>  பலகை என்பதில்,  மரம் அல்லது அதனால் அமைந்து நிலத்துடன் படிவான வகையில் இருப்பதைக் குறிக்கிறது.  பலகை என்பது பரப்புடைய  வெட்டப்பட்ட மரமாதலின்   :  பர > பரகை > பலகை என்று அறியப்படுதல் எளிமையான வழி. மற்றும் ல- ர அல்லது மாற்றீட்டுத்  திரிபு என்பது தெளிவு. நிலத்தைச் சமன்படுத்தல், "பரம்படித்தல்"  எனப்படுதலும் காண்க.  பர> பரம்பு.  பு விகுதி.  

இவற்றால்,  எப்படியாவது இட்டவண்ணம் ஒன்றைச் செய்தல், " எதேச்சை" யாகச் செய்தல் எனப்பட்டதன் பொருத்தத்தை அறியலாம். 

எதாவது ஒருவழியில் "எடுத்துச்செய்தல்" எனினும்  ஒக்கும். எதாவது ஒருவழியில் "எடுத்துக்கொள்ளுதல்."   எது+ எடுச்சை  > எதேச்சை..

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்