ஏகம் என்ற சொல்லுக்கு ஒன்று என்பது பொருள்.
தசம் என்பது பத்து என்ற பொருளுடையது.
தசம் + இ > தச + இ > தசி: ( என்றால் பத்தை உடைய(து) .
ஏகம் என்பது பொருளுருவாக்கம் பெறுவதை, இப்படி உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு மனிதனின் உயிரும், தான் ஒன்றாகவே உடலை விட்டு நீங்குகிறது. இது கண்ணால் அறியமுடிகிறதா என்பது பற்றிக் கூற இயலாது.. இந்த உயிரை ஒன்றாக்கி வைத்திருந்தது உடலே ஆகும். ஈருயிர்கள் வெவ்வேறாக நீங்கினவா, ஒன்றாகச் சென்றனவா என்பது அறிய முடியாதவை. ஏகுதல் என்பதிலிருந்து இரண்டின்மையை உணர்ந்துகொள்கிறோம். ஏனை உலகப் பொருள்கள் இரண்டாகவிருக்கும். எனவே சமஸ்கிருதம் என்னும் இறையியல் மொழி, இதிலிருந்து ஏகுதல் என்ற அடியைக் கொண்டு, "ஏகம்" - ஒன்று என்று பொருள்தரு சொல்லைப் படைத்தது.
ஏகம்: -
இது ஒரு காரண இடுகுறி எண்ணுப் பெயர்.
தசைத்தல் என்பதும் உடலில் பருமன் ஏறுதல் என்பதிலிருந்து அறியப்பட்டே, தசை > தசை + அம்> தசம் என்றபடி உணரப்பட்டது. தசையும் பற்றுதல் என்ற தன்மை உடையதே. பல் -பற்று. பலவான தன்மை குறித்த ஓர் எண் ஆகும். ஒன்பது என்பதன் பின், பல ஆனது பத்து. ( அதிகமானது). தசம் என்ற சொல்லினமைப்பிலும் பண்டை மக்கள் இவ்வாறே சிந்தித்தமை அறிகிறோம். பருமனாக இருக்கும் ஒரு மனிதன், தசைப்பற்று உடையவன் என்பதிலிருந்து, தசை, பற்று (பத்து) என்பவை பலவானதன்மைக்கு ஏற்ற நிலைக்களன் என்பதை உணரலாம். ஆதிமனிதன் எண்ண அறியாதவன். அவன் எண்ணிக்கையை, " அதிகமானது, பலவானது, கூடிவிட்டது" என்பவற்றிலிருந்து அறிந்துகொண்டே பின் எண்ணிக்கையை அறிந்து அமைதி அடைந்தான். எடுத்துக்காட்டாக, ஒன்று இருந்தது, அதனுடன் இன்னொன்று இருந்தது, ஆகவே ஒன்றாய் இருந்தது> இவை ஒன்றாய் இருந்தன > இரு > இரு+ அண்டு> அண்டி இன்னொன்று ஒன்றுடன் இருந்தது, இரு+ அண்டு> இரண்டு என்பதற்கு வந்து சேர்ந்தது என்று பொருள்.. குழப்பமே தெளிவின் தாய் கலங்கியதே நிலை நின்றபின் தெளிநீராகிறது. உணர்ந்துகொள்ளுங்கள்.
பல்> பல் + து > பற்று . இதில் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது.. பத்து என்பது பலவாகிய ஒன்று. அந்த ஒருமை விகுதி 'து' அங்கு உள்ளது. பலவாகியது (பல). ஒன்றானது (து). பின்னர்தன் தெளிந்து பத்து என்ற எண்ணுப்பெயர் உண்டாயிற்று.
ஆதிமனிதன், குழம்பி மீண்டவன். ஓர் இடத்தைக் கூட்டும் போது தூசி. அதையெல்லாம் ஒருவாறு அடக்கிவிட்டால் அப்புறம்தான்--- தூய்மை. தெளிவு.
சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி. தமிழுடன் இணையாய் வளர்ந்தது.
பத்தில் ஒன்று சேர்ந்து பதினொன்றாகி, பதினோராம் நாள் என்பதே : ஏகாதசி.
பொருள் "ஒன்றுடன் பத்து" என்பது. அதாவது பதினொன்று.
ஒன்பது என்பது பத்தில் ஒன்று குறைந்தது என்று பொருள் என்பர். வேறொரு சொல் இருந்து வழக்கிறந்தது என்பது, அ றிஞர் பிறர் கூறியது.
எடுத்துக்காட்டுகள்:
நவம் என்பது " குறைந்தது" . நவைத்தல் - குறைத்த.ல். அதாவது, பத்தாகிய முழுமையில் குறைந்தது.
நவமை - some shortage. a defect.
ஆயிரம் - ஆ = ஆக, இரு = பெரிய, அம் - எண்ணிக்கை; விகுதி. அமைவுப் பொருள்.
சமஸ்கிருதம் என்பது இந்திய மொழி. பூசாரிகள் தொழுகைகட்கு ஏற்படுத்திக்கொண்டது.. தமிழைச் சார்ந்து எழுந்தது. வால்மிகி- முன் சிறந்தோராய் இருந்தோர் இன்று தாழ்ந்துவிட்டவர்களின் குழுவில் தோன்றிய ஆதிப்புலவன். பாணினி - பாணர்களிடைத் தோன்றிய இலக்கணப் புலவன். வேதவியாசன் - மீனவரிடைத் தோன்றிய ஆதிப்புலவன். பரதவர் - மீனவர். இந்தியா என்பது மீனவ நாகரிகமும் மலைவாழ்நர் நாகரிகமும் செழித்திருந்த ஒரு கண்டம். பண்டை மக்களிடை பழைய வேதங்களை மக்கட்குப் போதித்தவரகள் ஒரு கூட்டத்தார் இருந்தனர். கடல்நாகரிகம், ஆற்று நாகரிகம், மலைநாகரிகம் எல்லாம் கலந்ததே பாரதநாடு. இவற்றுள் அடிப்படை : பரதவ - மீனவர் நாகரிகம். (மீனாட்சி). ஆர் என்பது உயர்வு குறிக்கும் ஒர் தமிழ்ச்சொல். அர் என்பதும் அது. ஆரியர் (ஆர்+இ+ அர்) என்பவர்கள் வெள்ளைக் காரர்கள் அல்லர். ஆர் விகுதிக்கு உரிமை உடையவர்கள். ஆசிரியர் என்ற சொல், சி குறைந்து, ஆரியர் என்றுமாகும். வாத்தியா(ய)ர் என்பது வேறுபுலங்களில் "பாத்" என்று பட்டப்பெயராய் வழங்குவதும் ஒப்பிடுக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக