சமீபம் என்ற சொல்லை நாம் முன் கவனித்திருக்கிறோமா? அஃது இங்கு இன்னும் உள்ளது.
சமீபம் என்ற சொல், சிற்றூர் வழக்கிலும் உள்ளது. நேரகாலத்தால் ஒன்று அணிமையில் இருப்பதும் இடத்தொலைவினால் ஒன்று அருகினில் இருப்பதும் என்பவற்றில் சமீபம் என்பது இருவகையாகும். இதுதவிர, கிட்ட எட்ட என்ற பேச்சுமொழிச் சொற்களும் இருந்து நம் பேச்சுத் தமிழை மிக்க வளம்பொருந்திய மொழியாக்குகிறது.
மனித வாழ்வில் எப்படித் தொலைவு ஒரு பொருண்மையுள்ள கருத்தாகத் தோன்றி உதவுகிறது? வாழைப்பழம் உண்ண விரும்பும் மனிதன், அக் கனிதரு மரம் அருகில் உள்ளதா என்று அறிய விரும்புவான். கிட்ட இருக்கிறது, போய் எடுத்துவருகிறேன் என்று கிளம்பிடுவது இயல்பாக நடைபெறுவது. கிட்ட - கிடைத்திடும் தொலைவு . ஒன்றை முயற்சி மேற்கொண்டுதான் அதை எட்டிப் பிடிக்கவேண்டிய நிலை இருக்குமானால் எட்ட என்ற சிறு எச்சவினை, இதை நன்றாகக் குறிக்கின்றது.
தம் என்பதே சம் என்பதன் மூலம். தம் என்பது பன்மை. மகர ஒற்று அடிநாளில் பன்மைப் பொருள் தந்தது. சீனமொழியிலும் அஃது பன்மை காட்டுவதுண்டு. அப்போது மகரத்தோடு அன் கலந்து முடியும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக