இன்று இலட்சோப இலட்சம் என்னும் தொடரைத் தெரிந்துகொள்வோம்.
இலட்சோப இலட்சம் என்ற சொற்புணர்வில், வடமொழிச் சந்திகளுக்கான இலக்கணம் உள்ளது என்று கூறுவர். இதை அமைத்துச் சொன்னவன் பாணகுலத்தைச் சேர்ந்த பாணினி என்ற இலக்கண ஆசிரியன்.
பாணர் என்போரில் பலர் பிற்காலத்தில் பார்ப்பனர் ஆய்விட்டனர் என்பதும் ஆய்வுக்குரியதாகும் ஐந்துவகை நிலங்களிலும் பரவலாக வாழ்ந்து, ( குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப்படுபவை ) சிறந்த காரணத்தினால், பரமாணர் என்ற சொல்லே, பிராமணர் என்றானது என்ற கருத்தும் உள்ளது. பர - பரவலான வாழ்க்கை; மாண் - சிறப்பு. அர் - மக்கள் குறிக்கும் விகுதி. ). பிரம்மன் என்ற கடவுளை வணங்கியோர் என்பதுமுண்டு. பிரம்மன் என்பதும் பரமன் என்பதும் கடவுளைக் குறிக்கும் சொற்கள். மொழி தோன்றிய காலத்திலிருந்து பயன்பாடு கண்ட அத்தனை சொற்களையும் காப்பாற்றிவிட்டவன் எவனும் இல்லை..
பாணர்கள் அல்லது "பாடிவாழ்ந்தோர்" பாடியவையாக வேதங்களில் பலபாடல்கள் உள்ளன, இவை பாணர்களுடையவையாகலாம். இவர்கள் இரந்துண்டு வாழ்தலே கடைப்பிடித்தவர்கள். இவர்கள் பிற்காலத்தில் வலிமை பெற்று அரசுகளும் அமைந்தனர்.
இவர்கள் நடமாடும் பூசாரிகளாகவும் செயல்பட்டிருப்பர். இவர்கள் வீடுவீடாகச் செல்வோர் ஆதலின், ஆக்கித் தின்னும் வசதி இல்லாதவர்கள். யார்வீட்டிலும் சென்று சமையல் கட்டினை மேற்கொண்டு ஆட்சிசெலுத்தினால் சண்டைகள் வரும். இதையெல்லாம் அறிந்தே, ஆக்கியதை வாங்கிச் சாப்பிடுபவனே அமைந்த வாழ்க்கை உடையோன் என்பது விதியாயிற்று. இறைவன் அப்படி அமைத்தான் என்று அறியவேண்டும்.
இப்போதெல்லாம் ஒரு பொத்தானைத் திருகியவுடன் எரிவாயு வெளிப்பட்டு நெருப்புப்பற்றிக் கொள்கிறது. சொல் அமைந்த காலத்தில் பிள்ளைகளை அனுப்பி ஒருகல் தொலைவோ அதற்கு மேலாகவே விறகுபொறுக்கி வந்துதான் பலமுறை ஊதி நெருப்புப் பற்றவைக்கவேண்டும். விறகு வேண்டுமென்று வீதியில் போராடினால் ஆடிக்கொண்டிருக்கலாமே தவிர, எதுவும் நடைபெறாது. நடமாடித் திரியும் இடத்திலே வாங்கிச் சாப்பிடுவது ( பிச்சை எடுத்துக்கொள்வது ) வசதி.. நீங்கள் இன்னோரிடத்தில் அப்படி மாட்டிக்கொண்டால் உங்களுக்கும் அதுவே விதி. எல்லாரும் வரட்டு கவுரவமும் ஆணவமும் இன்றி வாழ்ந்தனர். இதனால்தான் பகிர்ந்து தின்னவேண்டுமென்பது அழுத்திச் சொல்லப்பட்டது.
கா+ உரவு + அம் - கவுரவம். தன் பெருமையை அமைத்துக்கொண்டு செயல்படும் தன்மை. உரு + அ +வு - உரவு. மனத்துள் கொள்ளும் தன் உரு ஆகிய எண்ணம்.
எண்ணழுத்திக் (டிஜிட்டல்) கருவிகள் இல்லாத காலம்.
இனி இலட்சோப என்பது.
இலட்ச --- எண்ணிக்கை.
ஓர்ப -( இலட்சங்களாக) எண்ணுதல் - இங்கு ஓர்ப என்பது ஓப என இடைக்குறைந்தது. வினைச்சொல்: ஓர்தல். ஓர்ப - வினைமுற்று. செய்ப, செய்வர் என்னும் முற்றுக்கள் காண.
மீண்டும் இலட்சம் என்ற சொல்.
இங்கு இல் என்பது இருத்தலைக்குறிப்பது. "குளத்தில் இருப்பது " என்பது பொருளிருப்பைக் குறிக்கும். ( தண்ணீர்)
அடுத்த > அடுச்ச.> அட்ச. இல் + அடுச்ச . இலட்ச. ( பொருள் சேர்ந்த இடம், சேர்ந்த பொருள் . இல் என்பதற்கு வீடு எனினும் பொருள் வரும். த - ச போலி.
இடத்தில் சேர்த்து வைத்த பெரும் பொருள் என்பது இதன் பொருள்.
இவ்வாறுதான் இலட்சம் என்ற சொல் ஆக்கம் பெற்று நடப்புக்கு வந்தது.
அட்சரம் என்பதும் இவ்வாறு வந்ததே. எழுத்துக்கள் ஒலிமுறைப்படி, அடுத்தடுத்து வைக்கப்பட்டன. அடு - அடுத்தடுத்து, சரி - சரியான முறையில், அம் - அமைக்கப்பட்டது.
தரு > சரு > சரம். ( அடுத்து அடுத்துத் தரப்படுதல் . ) தரப்படுதல் என்றால் யாராலும் எடுத்துத் தரப்படுதல் வேண்டியதில்லை. அதுதானே அவ்வாறாயினும் விந்தை நிகழ்வாயினும் வேறுபாடில்லை. கடல்தரு செல்வம், கடல் உம்மைத் தேடி வந்து தரவேண்டும் என்று நினையாதீர். கடல்பஃறாரம் - அறியவேண்டும்.
அட்ச என்ற சொல்வடிவை மேலே விளக்கினோம்.
அமைவில் இலட்சமாக ஓர்ந்ததே இலட்சோப என்று வருகின்றது.
Later grammarians would isolate "oba" or a conjunctive piece according with it to form other words. We have not gone into this matter.
பாணினி தமிழன்.
அறிக மகிழ.
மெய்ப்பு பின்னர்.