உலகெங்கிலும் பலவித நம்பிக்கைகளும் அவற்றுள் ஒன்றுக்கொன்று இணக்கமின்மையும் புரிதலின்மையும் ஆண்டாண்டாகவே இருந்துள்ளன. இதன்காரணமாக. போர்களின்போது இடிக்கப்பட்டு அழிந்த கோவில்கள் பல. சண்டைபோட்டுக்கொள்ளுதல் என்பது விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என்று எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. மனிதன் என்பவன் இதற்கு விதிவிலக்கன்று.
ஆகவே மனிதன் மற்ற உயிரினங்களைவிட மேலானவன், மாற்சாரியங்களை வென்றவன் என்று கூறிவிடமுடியாது.
மனிதன் பல விலங்கியல்புகளின் உறைவிடம்தான்.
புத்தர்போல் பல பெரியவர்கள் அவற்றை வென்று மேலெழுந்திருக்கலாம்.
பாரசீகப் படைகளுக்கும் 'கிரேக்க'ப் படைகளுக்கும் நடந்த ஒரு போரில், ஏதன்ஸ் நகரத்துப் பெருங் கோயிலொன்று ( அதினா தேவியின் கோயில் ) அழிக்கப்பட்டது.(ஏறத்தாழ கி.மு. 480 வாக்கில்). அது இன்று சுற்றுலாக்காரர்கள் பார்த்துப் பெருமிக்கும் ஓர் இடிபாடாக மாறியுள்ளது அல்லது மாற்றுப்பிறவி மேற்கொண்டுள்ளது. பாரசீகர்களுக்கு அதினாமேல் நம்பிக்கை இல்லை.
விலங்குகளுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை எனலாமா? மெத்தையைக் கடித்து உதறிவிட்ட ஒரு வளர்ப்பு நாய்க்குட்டியை அதன் இயமான் அடித்துவிட்டான். அது அடியை வாங்கிக்கொண்டு ஒரு கட்டிலுக்குக் கீழே போய் படுத்துவிட்டது. சற்றுநேரம் கழித்து, அதன் இயமான் அதற்கு த் தட்டில் உணவிட்டு அழைத்தான். அது அவன் மீண்டும் அடிக்கமாட்டன் என்று நம்பி வந்து சாப்பிட்டது எனலாம்.
அவன் நஞ்சைப் பரிமாறவில்லை என்று நம்பித்தானே அது உணவைச் சாப்பிடுகிறது? ( இன்னும் சரியான உதாரணமாக) அல்லது மீண்டும் உதைக்கமாட்டான் என்று நம்பித்தானே வந்து சாப்பிடுகிறது? எதாவது இருக்கட்டும். எனவே அதற்கும் நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் அதன் நம்பிக்கைகள் வேறு வகையின ஆகும். அதன் நம்பிக்கைகள் உயிர்வாழ்வு, உணவு பற்றியவை. மனிதனின் நம்பிக்கைகள் இந்த எல்லையைக் கடந்தவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
( அதினாவின் பெயரை பின்னொரு நாள் பார்க்கலாம்.)
இதை மறக்கலாகாது, மீண்டும் வருக.