திங்கள், 9 மே, 2022

நம் நந்தகோபனைக் கண்டனையோ? [கிருஷ்ண பகவான்]

 கோப்பன் என்ற சொல் இப்போது பேச்சு மொழியில் வழங்குவதில்லை. அது அயற்சொல் போல் செவிகளை வந்து எட்டினாலும், பழைய தமிழ்நூல்களில் இன்னும் கிட்டுவதே யாகும்.

இந்தச் சொல்லின் பொருள்,   போக்கிரிப்பையன் என்பதுதான்.  கண்ணபிரானும் தம் சிறுவயதில் சேட்டைகள் பல செய்தவரென்பர்.

பலரும் செய்யும் சேட்டைகளில் சில கெடுதலானவை. ஆனால் கண்ணன் செய்தனவாகச் சொல்லப்படும் சேட்டைகள் கோபியரிடைப் பின்னர் ஓர் இன்ப அதிர்வினை விளைத்தவை.  அறியாப் பருவத்தில் கொஞ்சம் வெண்ணெயை வழித்துத் தின்றது.

கோபத்தை உண்டாக்கினாலும் நல்லவனாகப் போற்றப்பட்டவன்.  ஆகவே "நல்ல போக்கிரி".

நன்+ த  கோப்பன்.  (பொருளை மேலே கவனித்துக்கொள்ளுங்கள்).

நந்தகோப்பன் >  நந்த கோபன்   ஆயிற்று.

கோப்பன் > கோபன்  இஃது இடைக்குறை.

நந்த   இது உண்மையில் நன்றான என்பதன் திரிபு.    நன் த > நந்த என்றது பிந்தி

முந்தி  என்பன போலும் ஓர் புணர்ச்சி.

இச்சொற்கள் பலவாறு உரைக்கத் தக்கவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.




ஞாயிறு, 8 மே, 2022

கோபமும் சிவப்பு நிறமும் தொடர்புடைய கருத்துகளும்.

 இவை விளக்கி உணர்த்தற்கு எளிதான கருத்துகள்தாம்  என்றாலும் ஒரு சுருக்கமான வரைவாக்கி முன்வைத்தலுக்கே முதலிடம் தருதல் வேண்டும். அதை இங்கு எவ்வாறு நிறைவேற்றலாம் என்று  எண்ணியவாறே தொடங்குகிறோம்.

கோபம் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று இலங்கைப் பெரும்புலவர் ஞானப்பிரகாச அடிகளார்  முடிவு செய்தார். இவர் எழுதிய ஒரு நூற்படி  ( 1 copy of his treatise )  நிறைதமிழ்ப் புலவர் மறைமலையடிகளிடம் இருந்ததாகத்  தெரிகிறது. உங்களிடம் அது இருக்குமானால் அந்நூலையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

கோபம் மிகுதியானால் மனிதனின் முகம்,  கூம்பிவிடும்.  கோபம்  கொண்டமுகம் சிவந்துவிடுதலும் இயற்கையாகும். 

கோம்பு என்பது சினக்குறிப்பும்  ஆகும்.

கூம்பு என்பதும் கோம்பு என்பதும் தமிழில் தொடர்புடைய சொற்கள். இதற்கு மாறாக  கோபமின்மையில் முகமலர்ச்சியைக் கவிஞரும் எழுத்தாளரும் குறிப்பிடுவர்.  மக்களும் அவ்வாறே குறிப்பர்.

கூம்பு(தல்) >  கோம்பு(தல்) >  ......

கோம்புதல் என்றால் சினத்தல். 

கோம்பு + அம் =  கோம்பம் , இவ்வமைப்பு  இடையில் ஓர் மெய்யெழுத்தை இழந்து  கோபம் என்று அமைந்தது,   இது இலக்கணத்தில் இடைக்குறையாகும்.

இன்னோர் இடுகையில் இவ்விடைக்குறைகள் எவ்வாறு தமிழை வளமாக்கி உள்ளன எனற்பால அமைப்பைக் கொஞ்சம் விரிவாகக் கவனிக்கலாம்.

இனி, முதனிலை குறுகிச் சொற்கள் அமைதலும் இங்கு வேறு இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது.   கூம்பு(தல்) >  கூம்பு > கூம்பு + அம் > கும்பம்.

இன்னொன்று:  கூடு(தல்) > குடு+ பு  >  குடும்பு + அம் >  குடும்பம்.  இங்கு கூடு என்ற வினை குடு என்று குறுகியவாறு,  பு என்ற இடைநிலையையும் அம் என்ற இறுதியையும் பெற்று  தொழிற்பெயராயிற்று.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.    மிகுதி > விகுதி. இன்னொரு திரிபு இதுபோன்றது:  மிஞ்சு> விஞ்சு.

சொல்லாற்றலில் இந்தப் பொழிவு செய்தவர் பிறரை விஞ்சிவிட்டார் என்ற வாக்கியத்தினைக் கவனித்துக்கொள்ளவும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


வெள்ளி, 6 மே, 2022

உலோகம் என்ற சொல்லுக்கு இன்னொரு காரணம்.

 உலோகம் என்பது இருபிறப்பி என்பதை உணர்ந்துகொள்ளச் சொல்லில் உள்ளமைந்த காரணங்கள் இருக்கின்றன.  இது கடினமன்று.

அதிலொரு காரணம்.  இரும்பை உலையில் இட்டு உருக்கி எடுப்பர். அதன்பின் அது அடிக்கப்பட்டு வேண்டிய உருவினை அடைவிப்பர். அதன்பின்னரே அது   இறுதியுருவிலும் பயன்பாட்டிலும் ஓங்குவதாகும்.   ஓங்குதலாவது, இங்கு இறுதிநிலை பெறுவது.

உலை + ஓங்கு + அம் =   உலை ஓகு அம்  > உல் ஓகு அம் =  உலோகம் ஆகும்.

இன்னோர் ஆய்வும்  இதை ஒட்டியதே.  அதனை இங்கு வாசிக்கலாம்.

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_15.html

அயம், அயில் என்பன அது அயலிலிருந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.  இந்த இரும்படிக்கும் இடங்கள் குடியிருக்கும் வீடுகட்கு அருகிலில்லாமல்  அயலில் வைக்கப்பட்டிருந்தன என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.  இந்த அயற்கருத்துக்கு அதுவும் ஒருகாரணமாக,  அல்லது அதுவே ஒரு காரணமாக இருந்திருத்தலும் கூடும். எவ்வாறாயினும் அயன்மைக் கருத்து உள்ளடங்கிய சொல் இதுவாகும் என்பதில் ஐயமில்லை. இரும்பைக் கண்டு வியந்தது ஒரு காரணமாக இருக்கும்.  ஐ -  வியப்பு.   ஐ >  ஐ+ அம் > ( ஐகாரக் குறுக்கமாகி )  அ+ அம் > அயம் எனலும் பொருந்தும்.  இரும்பு புடமிட்டுச் செய்யப்படும் சித்த மருந்து " அயச்செந்தூரம்"  ஆனது.

இரும்புக்கு இறைப்பற்று வழிகளில் வேலையில்லை ஆதலால்,  இச்சொல்லுக்கு பூசாரிகளிடம் வேலையில்லை.

அடித்து  ( அடிச்சு)  உருவு தரபட்ட தன்மையால்,   அடிச்சு>  அச்சு என்ற அமைந்தது இடைக்குறை ஆகும்.

ஓகு+ அம் >  ஓகம் என்பது போலும் அமைப்புகள் முன் பழைய இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. இவைபோல்வன இவண் மீண்டும் விளக்கப்படவில்லை

உலை என்ற சொல்லின் ஐ விகுதி, ஓங்கு என்பதில் ங்,  கு என்பதில் இறுதி  உ இவை ஒழிக்கப்பட்டாலே சொல் அமைப்புறும். சொல்லமைப்பாளர்கள் இவற்றை வைத்துக்கொண்டு மாரட்டிப்பதில்லை என்பதைப் பலமுறை கூறியுள்ளோம்.  மூலம் அல்லது சொல்லடிகளே இருத்திக்கொள்ளப்பெறும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்