திங்கள், 10 ஜனவரி, 2022

கபாலி என்ற பதம்.

 இன்று கபாலி என்ற சொல்லைச் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

கபாலி என்ற சொல்லின்பின் சமய வரலாறுகளும் பிறதொடர்புகளும் இருத்தல் கூடும். அவற்றைப் பற்றிப் பின்னர் "ஆர அமர"ச்  சிந்திக்கலாம்.    ஆர - நிறைய.  அமர -  in a settled manner or taking time and with due attention.  ஆர்தல் - நிறைதல்.

கபாலம் என்பது தலையைக் குறிக்கிறது.

மனித உடலில் கடுமை அல்லது கெட்டித் தன்மை வாய்ந்த பகுதி கபாலம்.  மற்ற உயிரினங்களிலும் இவ்வாறே பொருள்கொள்ளலாம்.  சில உயிரினங்கள், எ-டு: புழு, பூச்சி முதலியவற்றில் தலை விலங்குத் தலைபோல் கெட்டித் தன்மை இல்லாததாய் இருக்கலாம்.  இஃது இருக்கட்டும்.

கடுமைக்  கருத்து.  (கடு)

பான்மை அல்லது பகுதியாய் இருத்தல் கருத்து.  (பால்)

கடு  + பால் + அம்.

கடுபாலம்.

கடுபாலம் >  கபாலம்.  ( உடலின் கடினமான பகுதி, அல்லது பல்தொடர்புகளும் உள்ள பகுதி. )   A complex  organ or part of the body.

இப்போது வல்லின எழுத்துக்கள் இடைக்குறையில் மறையும் என்பது கூறினோம்.  பழைய இடுகைகள் காண்க.

அண்மையில் வெளியிட்ட இடுகை:

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_9.html 

உங்களுக்கு ஓர் எ-டு:

தடுத்தல் வினைச்சொல்.

தடு > தடுக்கை. (கை விகுதி பெற்ற சொல்).

தடுக்கை > ( இடைக்குறைந்து)  > தக்கை.

உள்ளீட்டினை வெளிவராமல் பாதுகாப்பது "தக்கை"  ( தடுக்கைதான், வேறென்ன?)

எனவே,  கபாலம் என்பது உடலின் கடினமான பகுதி என்பதையே   பொருளாகக் கொண்டுள்ள சொல்.  இலக்கணப் படி:  இடைக்குறை.

கபாலம் > கபாலி :  கபாலம் உடைமை அல்லது கபாலம் பயன்படுத்துநர்.

அடிச்சொல்: கள் - கடு.

கள் > காள் > காழ் > காழ்த்தல்  ( கடுமை அடைதல்).

கள் > கடு > கடுமை.  கடு> கடி.

கள் > கடு> கடி+ இன் + அம் > கடினம்.

காழ்+ பாலம் >  காபாலம் ( முதனிலை குறுகி) > கபாலம்  ( எனினுமது).

குறுகுதலுக்கு எ-டு:   தாவு > தாவு+ அம் > தவம்.  ( இல்லற நிலையினின்று துறவுக்கு மாறுதல் என்ற கருத்து).  இதற்கு வேறு திரிபு விளக்கங்களும் உள.

இவற்றினுள் பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை.  எப்படிச் சொன்னாலும்  மூலச்சொல் ஒன்றானால் பெரிதுபடுத்தப்பட மாட்டாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கம்பி, கப்பி என்பவை [ தென்மொழி, சமத்கிருத]

 தமிழ்மொழியின் சொற்களில் கடை, இடை, முதலெனக் குறைந்து விட்டாலும் முழுச்சொற்கள் போல் வழங்கிய சொற்கள் பலவாகும்.  இவற்றை யாம் கணக்கெடுக்கவில்லை என்றாலும்,  இங்கு ஆய்ந்து வெளிபடுத்தியுள்ள பலவான சொற்களிலிருந்து நாம் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது.  இயன்மொழியாகிய தமிழில் இயற்சொற்களே மிகுதி என்று யாம் நினைக்கின்றோம்.  எண்ணிக்கை செய்து பார்க்கவில்லை.

கம்பி என்ற சொல்லும் இடைக்குறையே எனினும் இது தெரிவிக்கப்படுவதில்லை. கம்பிகள் பெரும்பாலும் கடியவை.  அதாவது வெகுதிட்பம் உடையவை, இவற்றை வளைக்க இயலும் என்றாலும்!

கடு எனபதே அடிச்சொல் ஆகும்.

கடு > க ( கடைக்குறை) >  க + பி  (விகுதி) >  கம்பி என்று காட்டலாம்.

கடு > க > கப்பி   ( இது சாலையைக் கெட்டிப்பதற்காக இடப்படும் கடுங்குழைவு ).  இதை இட்டு உண்டாக்கிய சாலை: கப்பிச்சாலை.

இதனைப் பின்வருமாறும் காட்டலாம்:

கடு > கடும்பி >  கம்பி.

கடு > கடுப்பி > கப்பி.

வல்லெழுத்துக்கள் மறைவுறும் என்பது முன்னர் இடுகைகளில் கூறப்பட்டுள்ளது.

பீடு > பீடு+ மன் (அன்) > பீடுமன் >பீமன்.  பின்னர் வீமன்.

(பீடுடைய மன்னன்).

அடங்கு > அடங்கு+ அம் > அடங்கம் > அங்கம்.

உள்ளுறுப்புகள் அடங்கிய வெளி மேனி அல்லது உடல்.

கடத்தல் ( கடல் கடத்தல்) >  கடப்பு + அல் > கடப்பல் > கப்பல்.

இங்கும் வல்லொலி மறைந்தது.

விழு+ பீடு+ அண் + அன் > விபீடணன் > ( விபீஷணன் ).

(விழுமிய பீடுடைய மன்னன்).

கப்பி என்பது ஓர் இருபிறப்பி.  சல்லிக்கற்கள் சாலையில் மேற்பகுதியை மூடிக்கொள்வதால் கப்பி  ( கப்புதல் > கப்பி) எனினுமாம்.

சமத்கிருதமென்பது,  வால்மிகி முனிவர் முதலில் கவி இயற்றிய மொழி. பின்னர் வியாசன் என்ற மீனவர்.  பாணினி என்போன் ஒரு பாணப்புலவன்.

பிராமணர் கவி இயற்றிய மொழி தமிழ்.  தொல்காப்பியர் பிராமணர்.  அகத்தியனாரும் பிராமணர் என்பர்.  சமத்கிருதம் தென்னாட்டில் உருவான மொழி என்பர். அதன் செல்வத்தில் பங்குகொள்ளவே மேல்நாட்டினர் அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 7 ஜனவரி, 2022

தவளை - தவணை - முதனிலைக் குறுக்கம்.

 முதனிலை அல்லது முதலெழுத்துக் குறுகி அமைந்த தொழிற்பெயர்கள் பல உள்ளன. நாம் சில காட்டியுள்ளோம் - பழைய இடுகைகளில்.

தாவு > தவளை

இங்கு,  தாவு என்பது தவ என்று குறுகியதால், முதனிலை குறுகித் திரிபடைந்தது என்பது அறிக.

இதுவேபோல், தவணை என்பதும் குறுகியே அமைந்தது என்பதும் அறிக.

தாவு + அணை.

தாவித் தாவிச் செல்வது போலும் ஒரு கட்டண முறை.

முன் இடுகைகள் இங்கு உள்ளன. Pl click and read for wider discussion.

https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_6.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.