சனி, 25 செப்டம்பர், 2021

உலகின் மாறுபாடுகள்.

 உலகின் மாறுபட்ட நிலைகளை ஏனென்று அறிய இயல்வில்லை.  அதைச் சிந்துத்து இந்த வரிகள் தாமே வந்தவை.  அதை ஒருபக்கம் எழுதிவைத்தோம்.


நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -    நீர் இருக்குமிடத்துக்குப் பரவுவோர்.  கூடுவோர்.   இவர்களைக் குறிக்கும்.  பரவுதற் கருத்து. ( நீரை நிரந்துகொள்வோர்).  

பொழிவு:  மழை.



இதைத் தொடர்ந்து சிந்தித்துப் பின்னூட்டம் இடுங்கள். உரையாடுவோம்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஆத்திகம் - வரையறவு defining...

  ஆத்திகம்* என்ற சொல்லுக்குப் பல்வேறு வரையறவுகளை( definition) க் கூறி " ~~* என்றால் என்ன?"  என்று விளக்கப் பலர் முற்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு வரையறவும் எந்தக் கோணத்திலிருந்து யாருக்காக யாரால் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டே,  அது சொல்லமைப்பில்  பொருந்துகிறதா என்று முடிவு செய்யவேண்டும். மதுரையிலிருந்து மானா மதுரைக்குப் பல வண்டிகள் போகின்றன.  எனினும் நீங்கள் அங்கு போகவேண்டின், அவ்வண்டிகளுள் ஒன்றுதான் உங்களுக்கு அமையும். எல்லா வண்டிகளும் உங்களுக்குப் பொருந்தாமை போலவேதான். ஆனால் எந்த வண்டியும் பிசகுபடுவதில்லை. எல்லாம் நல்ல வண்டிகள் தாமே!  அதுபோலவே   நாம் எங்காவது எச்சொல்லுக்கும் வரையறவு முன்வைத்திருந்தால்,  அது பெரும்பாலும் சொல்லமைப்பு என்பதைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது என்பது நேயர்கள் நன்கு அறிந்ததே ஆகும்.  சிவஞானபோத உரையில்  கூறியிருந்தாலலும்  அது இங்கு இதற்கு விதிவிலக்காகலாம்.

இவற்றையும் வாசித்தறிந்து கொள்ளுங்கள்:

ஆத்திகம்   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_24.html

ஆஸ்திகம் https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

இனி இன்னொரு வகையிலும் இது விரித்துரைக்கப்படலாம்.

அகத்து   ( அகம் + து )  என்பது அகத்து என்று வந்து பின் ஆத்து என்று திரியும். எடுத்துக்காட்டு:  அகத்துக்காரி >  ஆத்துக்காரி.    அகத்திலே >  ஆத்திலே.  (வீட்டிலே).

இங்கு + அம் என்பது,  இகு+ அம் > இகம் என்று குறுகும்.  இதன் பொருள்: இங்குள்ளது, இவ்வுலகம்.  இது வேறு வகைகளில் பொருளுரைக்கப் படுவதுமுண்டு.  அதனை ஈண்டு கவனித்தல் வேண்டியதில்லை.  பழைய இடுகைகளில் அவற்றைக் கண்டுகொள்க.

ஆத்திகம் எனின்,  அகத்து இறைப்பற்று எண்ணங்களையும் நிகழ்வுகளையும் எவ்வாறு இங்கு முறைப்படுத்தி அமைத்துக்கொள்வது என்பதைப் பற்றிய நெறிமுறைகள் என்றும் கூறி விளக்கலாம்.  அவ்வாறு விளக்கினும் அழகாகவே வருகின்றது.  

அகத்து >  ஆத்து.

இங்கு அம் >  இகு அம் > இகம்.

எனவே,  ஆத்து இகம் > ஆத்திகம்

இது ஒரு பல்பிறப்பிச் சொல்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.

சில விளக்கங்கள் சிற்றளவில் இணைக்கப்பட்டன. 



The Covid situation Singapore

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


செப்டம்பர் 23, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 163 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 97.9%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.8%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 22 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%


செப்டம்பர் 23 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 1,504 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh230921 




[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 24]


வீட்டில் குணமடைதல் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 😷   


அண்மையில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு, வீட்டில் குணமடைதல் வழக்கமான பராமரிப்பு முறையாக உள்ளது . 


🔗 பரவலான கேள்விகள்: go.gov.sg/faq-24Sep-tl


1️⃣ யார் தகுதிபெறலாம்? 

2️⃣ PCR பரிசோதனையின் முடிவில் கிருமித்தொற்று இருப்பது உறுதி எனத் தெரியவந்துள்ளது. ஆனால், யாரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. நான் என்ன செய்வது?

3️⃣ வீட்டில் குணமடைதலின்போது எனக்கு அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

4️⃣ நானும் என் குடும்பத்தினரும் வெளியே செல்ல முடியாதெனில் மளிகைப் பொருட்களையோ மருந்துகளையோ எவ்வாறு பெறுவது?

5️⃣ உணவு பெறுதல், துணிமணி மாற்றுதல் ஆகியவற்றுக்கான தேவை ஏற்பட்டால் என் குடும்பத்தை நான் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?


📱 ஆக அண்மைத் தகவல்களைப் பெற, Gov.sg வாட்ஸ்ஆப் தகவல் இயலியைப் பயன்படுத்தவும்


🔹 சுகாதார அபாய எச்சரிக்கை ➡️ “631” எனப் பதில் அனுப்பவும்

🔹 வீட்டில் குணமடைதல், தடைக்காப்பு நெறிமுறை ➡️ “66” எனப் பதில் அனுப்பவும்