கொஞ்ச காலமாகவே கோயில்களில் முதியோருக்காக நல்ல வசதிகள் செய்துதரப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரு படத்தில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்தபடி கோவிலில் சாமி கும்பிடுகிறார். பேருந்துப் பயணத்தின்போதும் தொடர்மின்வண்டிப் பயணத்தின்போதும் முதியவர்கள் அமர்ந்து பயணம் செய்ய இளையோர் வழிவிட வேண்டுமென்னும் சட்டம் அல்லது ஏற்பாடு சிங்கப்பூரில் இருக்கிறது.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
முதியோர்க்கு வழிதந்து உதவுங்கள்
காவலிற் சிறந்த மாமணிகள்.
எப்படி இவர்கள் மேடை? காவல்மாமணிகள் என்ற பட்டம் வழங்கவேண்டும்.
வியாழன், 16 செப்டம்பர், 2021
சிங்கப்பூர் கோவிட்நிலவரம்
[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 17]
செப்டம்பர் 16, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 77 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 98.2 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை; 1.6 விழுக்காட்டினருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 0.0 விழுக்காட்டினர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 15 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 82 விழுக்காட்டினர் முழுமையாக/இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
go.gov.sg/moh160921