வெள்ளி, 10 செப்டம்பர், 2021

நெய்தல் நிலம் - நெய்தல் என்பதன் பொருள்.

 

இன்று நெய்தல் என்ற சொல்லைக் கவனிப்போம்.

நெய் என்பது வெண்ணெய் என்படை உருக்கிக் கிடைப்பதாகும்.  இச்சொல்லின் அடிப்படைப் பொருள் உருகி ஒன்றாவது, கலப்பது, பிணைப்பது என்பனவாகும்.

நெய் > நெயவு > நெசவு  இதில் பஞ்சுநூல் கலந்து  துணி செய்யப்படுகிறது. கலப்பு, கலந்து ஒன்றாவது என்பது அடிப்படை.

நைதல் என்பதில் பொருள் நசுக்கப்பட்டு ஒன்றாவது அடிப்படைப் பொருள். இங்கு உருவம் அழிந்து வேறுரு உண்டாவதைக் குறிக்கிறது.

நெய் > நெய் + அம் >  நேயம்.  இது உள்ளங்கள் ஒன்று கலந்து நட்பு ஏற்படுவது குறிக்கப்படுகிறது.  இங்கு முதனிலை நீண்டு சொல் அமைந்துள்ளது.

நெய்தல் என்பது ஒரு திணையின் பெயராகவும் உள்ளது.  நெய்தல் நிலம் என்பதும் காண்க.  இந்நிலத்தில் கடல் பகுதியும் நிலப்பகுதியும் கலக்கிறது அல்லது இணைகிறது.

எனவே நெய்தல் - கடலும் நிலமும் கூடுமிடம் என்ற பொருள் தெளிவாகிறது.

நெரு என்னும் அடிச்சொல்லும் நெய் என்னும் அடிச்சொல்லும் தொடர்புடையன.  

( நெர்)  -  நெய்.     நெர் >  நெரு.      (  ஒப்பு:  விர் > விய்.)

நெர் > நெரு > நெருங்கு. > நெருங்குதல்.

இதனோடு ஒப்பு நோக்குக:

விர் >  விரி > விரிதல்,  விரிவு.

விர்  >  விய். > வியன்.

விரி > விரிசல்.      விய் > விசு > விசும்பு.  

விசு > விசு + ஆல் + அம் =  விசாலம்.

விர் > விருத்தம் ( ஒரு பாடல்)  விரிவான பாடல் 

அடிச்சொல்லை அல்லது மூலத்தைக் காட்டாமல் விரி> விரித்தம்> விருத்தம் எனினும் இழுக்காது என்பதறிக.  இகரம் உகரமாம் இடனுமாருண்டே.

மேலும் ஒப்பறிக:

மர் >  மய்

https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html


அறிக மகிழ்க.


மெய்ப்பு  பின்னர்.

[  தமிழ் மென்பொருள் சரியாக வேலை செய்யவில்லை.  அதனால் இந்த இடுகை சுருக்கமாகவே எழுதப்படுகிறது ]

புதன், 8 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்டை எதிர்த்துப் "போர்"

 [Sent by Gov.sg – 8 Sep]

இன்றை நிலவரம்

As of 7 Sep 12pm, there are 30 persons infected with COVID-19 who are seriously ill. 24 require oxygen supplementation and 6 are in ICU. 


As of 7 Sep 12pm, there are 328 new locally transmitted cases.


81% of our total population have completed the full regimen*.


_*Received both doses or 1 dose for recovered individuals_


go.gov.sg/moh070921

-----------------------------------

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 7]


*கொவிட்-19 பரவலை மெதுவடையச் செய்தல்*


🧪 *கூடுதல் பரிசோதனைகள்*

🔹 கட்டாயமாக்கப்பட்ட விரைவான, எளிமையான (திட்டமிடப்பட்ட வழக்க அடிப்படையில்) பரிசோதனை முறை: செப்டம்பர் 13 முதல், வாரம் ஒரு முறை என அதிகரிக்கப்படும்

➡️ கிருமிப்பரவல் அபாயம் அதிகம் உள்ள சூழல்களில் இருக்கும் அதிகமான ஊழியர்களை உள்ளடக்கும் (எ.கா. பேரங்காடிகள், விநியோக & டாக்ஸி ஓட்டுநர்கள்)

🔹 மற்ற துறைகளில், 2 மாதங்களுக்கு வாரந்தோறும் பரிசோதனை செய்ய, முதலாளிகளுக்கு ART பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும்


💼 *வேலையிடங்களில்*

❌ செப்டம்பர் 8 முதல், சமூக ஒன்றுகூடல்கள் கூடாது

➡️  ≥1 ஊழியருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர் வேலையிடம் சென்றிருந்தால், 14-நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அமல்படுத்தவேண்டும்

 

*சுகாதார அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டோர்* 

➡️  14 நாட்களுக்குச் சமூகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும்


*சமூக ஒன்றுகூடல்கள்*

🔹 அனைவரும் அத்தியாவசியமற்ற சமூக நடவடிக்கைகளை அடுத்த 2 வாரத்திற்குக் குறைத்துக்கொள்ளவேண்டும்

🔹 நாள் ஒன்றுக்கு ஓர் ஒன்றுகூடல் எனக் குறைத்துக்கொள்ளவும்


go.gov.sg/mohpr060921


முன்‌ வந்த செய்தி: ( ஒப்பிடுவதற்கு)

[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 5]


செப்டம்பர் 4, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 27 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 22 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


செப்டம்பர் 4, நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில், சமூக அளவில் 253 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 


நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*.


_*இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர், அல்லது குணமடைந்து, பின்னர் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்_


go.gov.sg/moh040921

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வசீகரித்தல் வசீகரம்.

 இன்று வசீகரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்

இந்த ஆய்வைச் சுருக்கமாகவே முடித்துவிடலாம்.

வசம் என்ற சொல்லை நாம் முன்னரே அறிந்துள்ளோம்.  இதன் முன்வடிவம் வயம் என்பது.

ஓர் ஈயைப் பிடித்துத் தேனுக்குள் விட்டால், ஈ உடனே தேனின் வயமாகி விடுகிறது.  எதை எங்கு இடுகின்றோமோ  அது அவ்விடத்து வசமாகி விடுகிறதென்பதே உண்மை.  ஓர் ஆடவனைப் பிடித்து ஒரு பெண்ணிடத்துத் தந்தால்,  அவ்வாடவன் அப்பெண்ணினால் ஏற்றுக்கொள்ளப் படுவானாயின்,  அவன் அவள் வயப்பட்டு  விடுகிறான். சிலர் அப்புறம் அப்பா அம்மாவைக் கூட மறந்துவிட்டு, அவளே கதி என்று கிடந்துவிடுகிறார்கள். கதி என்று கிடத்தலினாலேதான் பதி என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது.  அவன் பெண்ணிடத்திலும் அவள் வீட்டாரிடத்திலும் பதிந்து கிடப்பதனால் "பதி" ஆகி, அவ்வீட்டிலே தன்னைப் பதிந்துகொள்வதனால் அவன் ஆங்குப் பதிகின்றான் என்று சொல்கிறோம்.  பதி பின் வதியாக,  வதி வசியானது.  ( த- ச போலி).

வை :  வைத்தல்.  

வை > வய் > வயம் > வசம்.

ஆண் ஈர்க்கப்பட்டதால்,   வச +  ஈர்.

ஈர்க்கப்பட்டு,  அருகில் சென்று விடுகிறான்.

வச + ஈர் + கு +  அரு. + இ.

ஈர் என்பது இகரச் சுட்டில் வந்த சொல்.  இ என்பதில் மீண்டும் இகரச் சுட்டு வந்து இங்கு என்பதை உணர்த்துகிறது. 

தல் என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால்,  வசீர்கரி+ தல் > வசீ(ர்)கரித்தல் ஆகிறது.  இங்கு ர் இடைக்குறை.  ரகர ஒற்று பல சொற்களில் இடைக்குறையாகும். இன்னோர் எ-டு>  சேர்(த்தல்) > சேர்+ மி > சேமி என்பதுபோலுமே ஆகும்.   மி என்பது ஒரு வினையாக்க விகுதி.  வினையில் இன்னொரு வினை தோன்றிற்று. இதை இப்போது விரிக்கவில்லை.

இவ்வாறு,  வசீகரம் என்பது ஈர்க்கப்பட்டு வசமாவது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.