By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 1 நவம்பர், 2020
மயிர் என்பது
வெள்ளி, 30 அக்டோபர், 2020
யானைக்குட்டி
இரண்டு வயது யானைக்குட்டி
புரண்டு விழுந்து சண்டைபோடும்
பிறந்த தாயும் தந்தை யென்றும்
சுரந்த அன்பு காணவில்லை.
அன்னை வந்து அணைத்த போதும்
அஞ்சுதலில் முட்டும் கோபம்
பின்னை வந்து மனிதர் பாலும்
பீடையாகிப் போனதாமோ!
பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்
குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது. விலங்குக் குணம்
மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்
எழுப்பும் கேள்வியாகும்.
பிறந்த - தான் பிள்ளையாய்ப் பிறந்த
அஞ்ச்சுதல் இல் - அச்சமில்லாமல்
சுரந்த - பிள்ளையிடம் ஏற்பட்ட
மனிதர்பாலும் - மனிதரிடத்தும்
பீடை - நோய்.
மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.
ஒன்றைப் பிறருக்கு - அது வேண்டியோருக்கு - அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும். இது குழைவையும் குறிக்கும். " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.
அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள். இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.
அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.
அளிச்செயல் பாத்திரம்
அச்செய பாத்திரம்
இங்கு ளி என்ற எழுத்துக் குறைவுண்டது. லகர ஒற்றிறுதியும் கெட்டது.
இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்
திருத்தம்.
இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:
இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு. (டு இழப்பு)
சகக்களத்தி > சக்களத்தி. ( க இழப்பு)
பகுக்குடுக்கை > பக்குடுக்கை (கு இழப்பு)
சறுக்கரம் > சக்கரம் ( று இழப்பு)
மக + கள் = மக்கள்.
இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.
அருட்செயல் > அட்செய > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.
மற்றோர் மாற்று விளக்கம்:
அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html