கரித்தல் என்ற இறுதியாய் முடியும் பல சொற்கள் உள்ளன. இவ்வாறு முடியும் சொற்களில் ~கரித்தல் என்பது ஓர் துணைவினையாய் முடிவதாகும். 1* இதைக் கொஞ்சம் விவரிக்கலாம் ( "விரி- வரிக்கலாம்").
உப்புக் கரித்தல் - இங்கு கரித்தல் என்பது துணைவினையன்று. பொருண்முடிபு காட்டுவதால்.
சேகரித்தல் - இதில் கரித்தல் என்பது ஒரு துணைவினை. கரித்தல் என்பது " வர" என்று பொருள்படும். "கரித்தல்" எனற்பாலது, ஆதலின் ஒரு துணைவினை.
சேகரித்தல் என்பதில் சே என்பது சேர் என்பதன் கடைக்குறை.
அருகுதல் என்பது குறைதல் என்னும் பொருள் உடையது. இன்று செப்புக்காசுகள் அருகியே உலகில் வழக்கத்தில் உள்ளன. இவ்வாக்கியத்தில் அருகி என்பது மிகக்குறைந்து என்ற பொருளைத் தரும்.
அரு என்ற உரிச்சொல், அருகு(தல்), அரி(த்தல்) என்று வினைச்சொற்களாகும்.
அருகுதல் என்பதில் போல, அரித்தல் என்பதிலும் குறைதல் என்பதே அடிப்படைப் பொருள். ஏனெனில் நீங்கள் ஓர் ஆற்றங்கரையில் உட்கார்ந்துகொண்டு, எதிரில் நீரில் உள்ள செடிகொடிகளை அரித்தெடுக்கும்போது, கைக்கெட்டிய தூரம் வரை உள்ள அவற்றை உங்களுக்கு வேண்டிய அளவு அருகில் (கிட்டக்) கொண்டுவந்துகொள்கிறீர்கள்.
அப்படிக் கொணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்கிறீர்கள். இதனைக் காண்பவர், கொடிகளை அரித்து எடுத்தார் என்பர். விரலால் எடுத்திருக்கலாம். அல்லது ஓர் இரும்பு வரட்டியால் எடுத்துமிருக்கலாம். ஒரு முனைவளை குச்சியால் எடுத்து இருக்கலாம். எப்படியோ காரியம் ஆயிற்று.
மீண்டும் சொல்வது அரு > அரி > அரித்தல் ( அருகிற் கொணர்தல்) என்பதே.
எனவே, சேகரித்தல் என்பது சேர்+ கு+ அரித்தல் > சேகரித்தல் ஆகி உருவான சொல்.
கு என்பது சொல்லாக்க இடைநிலை. சேர்தலிடம் குறிக்கும்.
சீர்கரித்தல் என்பது சீர்மிகும்படியாகவும் வருமாறும் தன்னிடத்து அடைவுகொள்ளுதல்.
சீர்கரித்தல் > சீகரித்தல் > ( ஸ்ரீகரித்தல்) [ என்றும் வழங்கும்].
தமிழில் அருகியும் ஏனை இனமொழிகளில் மிக்கும் வழங்கும்.
குறிப்புகள்
1* ~கரித்தல் என்று முடியும் சொற்கள் சில:
அலங்கரித்தல்
கொக்கரித்தல்
சங்கரித்தல்
அபகரித்தல்
பரிகரித்தல்
கடைக்குறை:
சீர் > சீ. சீர் + தனம். > சீதனம். சீர்> ஸ்ரீ. ஸ்ரீதனம்.
சீர் கொண்டுவந்தால் உடன்பிறப்பு. (சகோதரி.) பழமொழி.
இவற்றுள் அறிந்தன பின்னூட்டமிட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சீகரித்தல் - சில அகராதிகளில் இது கிட்டுவதன்று.
மெய்ப்பு ( பின்னர்.)