By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 27 ஆகஸ்ட், 2020
நோய்த்தடை பின்பற்றவில்லையோ
புதன், 26 ஆகஸ்ட், 2020
அசித்தல் - அயில்தல் ( உண்ணுதல் ) தொடர்பு,
பாயசம் என்'ற சொல்லில் அசம் என்ற இறுதி முன்
இடுகையில் விளக்கம் கண்டது. அசம் அசித்தல்
என்ற வினையினின்'று விளைந்ததென்றும்
அறிவுறுத்தப்பெற்றது.
இன்று அசித்தல் என்ற சொல் தோன்றிய விதம்
காண்போம்.
அயில்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்தரும்
பண்டைத் தமிழ்ச் சொல் அயில்தல் என்பது ஒரு
சுட்டடி வினைச்சொல்.
அயில்தல் என்பதில் அயில் அயி என்று
கடைக்குறைந்தது. கடைக்குறைதல் என்றால்
சொல்லின் கடைசி எழுத்து - கெடுதல் அல்லது
விழுதல். அவ்வாறு குறைந்து அயி என்று
நின்ற இப்பழஞ் சொல், அசி என்று திரிபுற்று
தல் என்ற் தொழிற்பெயர் விகுதி ஏற்று,
அசித்தல் ஆயிற்று. ஒரு வினைச்சொல்,
கடைக்குறைந்து, திரிந்து பின் தல் விகுதி
ஏற்று மறுபடியும் வினையாதலுக்கு நீங்கள்
ஓர் உதாரணம் தேடுங்கள். ஒருமாதம்
எடுத்துக்கொள்ளுங்கள்.
கிட்டியவுடன் பின்னூட்டம் இடவும்.
அயில்தல் என்ற வினைக்கு வாக்கியங்கள்:
பால் அயிலுற்ற பின்னர் அவன் நன்கு
உறங்கினான்.ஒரு பருக்கை பாக்கியின்றி
சோறு முமுதும் அயின்றுவிட்டான்.
அயில் > அயி ( இது கடைக்குறை).
அயி > அசி ( இது ய- ச வகைத் திரிபு)
இன்னோர் எடுத்துக்காட்டு: வாயில் > வாசல்.
யகரம் சகரம் ஆனதுடன், ஆங்கு இகரம் அகரம்
ஆகவும் ஆயிற்று. யி - ச இது இருமடித் திரிபு.
அயி என்பதுடன் அம் சேர, அது அசிம் என்று
வருதல் தமிழியல்பு அன்று. இகரம் கெட்டே அம்
ஏறுமென்பதறிக.
அயிலுதல் - அயில் என்ற வினை அமைந்த
விதத்தை வேறொரு சமையத்தில் காண்போம்.
மெய்ப்பு பின்
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020
பாயசம்
பாயசம் என்பது ஓர் இனிப்புக்கஞ்சி போன்றது. இது
பெரும்பாலும் பாசிப்பயறு வேகவைத்து, தேங்காய்ப்பால்
சர்க்கரை, சவையரிசி (ஜவ்வரிசி) என்பன சேர்த்துக்
காய்ச்சப்படுவது. இப்போது வேறு பொருள்கள்
சேர்த்தும் காய்ச்சப்படுவதுண்டு. எ-டு: பால்பாயசம்.
பாயசம் என்ற சொல்லில் இரண்டு உறுப்புகள்
உள்ளன. அவை: 1. பயறு ( பாசிப்பயறு அல்லது
பாசிப்பருப்பு. பச்சைப்பயறு என்போரும் உள்ளனர்.)
2. அசித்தல்(உண்ணுதல் ) > அசி+ அம் = .
பயறு + அச + அம் > பய + அச + அம் = பாயசம்.
பயறு என்பதில் றுகரம் கெட்டது அல்லது
வெட்டுண்டது. பய என்பதன் மூலமும் பை > பைம்மை,
என்பதே. பொருள் பச்சை.[ இதற்கு இளமை என்ற
பொருளும் உள்ளது. எடுத்துக்காட்டு: பையன்.
பாயி என்ற மலாய்ச்சொல், பாய் என்ற ஆங்கிலச்
சொல், பயல் என்ற தமிழ்ச்சொல் - எல்லாம்
ஆய்வு செய்யுங்கள். இப்போது இவற்றைத்
தவிர்ப்போம்.]
பயறு என்பதன் சொல்லமைப்புப்பொருள் -
பச்சையானது, முளைக்காதது (at the time)
என்பதுதான். பாசிப்பயறு முளைக்க
வைக்கலாம்.
பய + அச + அம் = பாயசம் என்பதில் முதனிலை
நீண்டது. பய + இ = பாசி என்பதிலும்
அங்ஙனமே நீண்டு, ய - ச என்றபடி திரிந்தது.
இளமைக்காலத்திலே பயிர்போல் வளர்வது
தான் பாசம். பச்சையான அன்பு. முதிர்ச்சியில்
நிலைக்குமா என்பது ஐயத்துக்குரியது. சில
உடன்பிறப்புகளிடை நிலைக்கும். சிலர் சண்டை
போட்டுக்கொண்டு எதிரிகளாய்விடுவர்.
அதனால்தான் பாசமலர் என்றனர். மலர்
காய்வதும் உதிர்வதும் உலக இயற்கை.
முதன்முதல் பாயசம் காய்ச்சிய மக்கள்
பெரிதும் பச்சைப்பயற்றையே பயன்படுத்தினர்
என்பது இவ்வாய்விலிருந்து தெரிகிறது. பிற்பாடு
பால்பாயசம், அரிப்பாயசம், கோதுமைப்பாயசம்,
மாவிழைப்பாயசம்( சேமியாப்பாயசம்) என்று
பொருளுக்கும் திறனுக்கும் ஏற்ப சமையல்கலை
முன்னேற்றம் கண்டது. கண்டபோதும் பாயசம்
என்ற பெயர் நிலைத்தது.
சீலை என்பது சீரை என்பதில் நின்று திரிந்தது.
சீரை என்றால் மரப்பட்டை. மனிதன் காட்டானாக
இருந்தகாலத்தில் மரப்பட்டைக் கோவணம்
அணிந்தான். பின் துணி நெய்யக் கற்றுக்கொண்ட
போதும் சீலை என்ற சொல்லையே பயன்படுத்தி,
பின் சேலை ஆக்கிக்கொண்டான். அதுபோல
பிற பல.
அறிக மகிழ்க.