ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

க்ஷமித்தலும் அமிழ்த்தலும் ( சமித்தல் )

அமிழ்த்தல்.

மனத்தை வருத் துகின்ற எதையும்‌  குளிர்ந்த  நீருக்குள் போட்டு  அமிழ்த் திவிட  வேண் டும்.  சூடேறிவிட்ட உள்ளத்தைக் குளிர்விக்க வேண்டும்.
அடுத்தது   -   வருத்தம் மேலெழக்கூடாது.  அப்போ து தான்   எதையும் பொறுத்தல்  முற்றுப்பொறும். இவ்வாறு நினைத்தனர் முன்னாளில்.

மன்னிப்பைக் குறிக்கும் பல்வேறு கருத்துக்களும் மொழியில் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் திடப்பொருள்களைக் கையாளும் அவனறிந்த வகைகளிலிருந்தே மேலெழுந்து கண்காணாத மனவுணர்ச்சிகளை உணர்த்த முன் வந்தன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.

பொறுத்தல்  என்பது, ஒரு பளுவான பொருளைச் சுமந்து  செல்லுதலையே குறித்தது. பண்டைத் தமிழர் " சிவிகையைப் பொறுத்தல்"  -  அதாவது பல்லக்கைத் தூக்கிச் செல்லுதல் என்றனர்.  ஒரு கடினமான மனவுணர்வினையும் அவ்வாறே திடப்பொருள்போல் பாவித்து,   " பொறுத்தருள்" என்றனர்.

வேண்டாத பொருளை நீருக்குள் அமிழ்த்தி அப்புறப் படுத்துதலும் அன்னதே ஆகும்.

அமிழ்த்தல் >  அமித்தல் >  க்ஷமித்தல் ( ஒரு குற்றம் அல்லது தெற்றினை மன்னித்தல்.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாவது:

அமணர் >  சமணர்

என்பதனால்  அறிந்துகொள்க.  இவ்வாறு திரிந்த சொற்கள் பல.  இன்னொன்று அடுதல் ( சமைத்தல் )  >  (சடுதல் ) >  சடு + இ=   சட்டி.

திரிந்து பொருள் மாறாதது போலி.  சில நுண்பொருள் மாற்றம் அடைவன.

இருவருக்கிடையில் மனம் வேறுபாடுமாறு நடக்கும் நிகழ்வினால் நட்புறவு வீழ்ச்சி அடையும்.  அந்த உறவினை மீண்டும் எழுமாறு செய்தலே மன்னித்தல்.

மன்னுதல் =  நிலைபெறுதல்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே.
மன்னுலகம்
மன்னுயிர்.

மன்னன் -  நிலைத்த தொடர்குடியிலிருந்து  ஆட்சி ஏற்றிருப்பவன்.

மன்னித்தல் ( அதாவது மன்னுவித்தல் ) -  மீண்டும் நிலைபெறச் செய்தல்.
மன்னித்தல் - நிலைபெறச் செய்தல்.

மன்னு -  தன்வினை

(மன்னு>)  மன்னி > மன்னுவி  இவை  பிறவினைகள்.

மன் -  மன்னுதல்  வினைச்சொல்.

மன்னு + இ   இதில் உடம்படு மெய் வரவில்லை.


மன்னு + வ் + இ.   இதில் வ் என்பது வகர உடம்படு மெய்.

அசைஇ, நிறீஇ  முதலிய பழங்கால வினைகளிலும்  இ வருதல் கண்டுகொள்க.

di-perchaya-i   என்று மலாய் மொழியிலும்கூட இவ்வாறு வரல் உணர்க.

க்ஷமித்தல் என்பது தமிழில் வழங்கவில்லை.

சமித்தல் உளது.

சமித்தல்-  சகித்தல்  ம- க போலி எனினுமாம்.
தம் > சம் ஒன்றுசேர்தல் உட்பொருள் எனினுமாகும்.,  சம் . சமி.  சம் > சமை.
சமனித்தல் > சமித்தல் திரிபு எனினுமாம்.சமனித்தல் > சமானித்தல்.

சமித்தல் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் விளக்குறும் சொல்.
 

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் சரிசெய்யப்பெறும்.



வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பகீரதன் முயற்சியின் நடைமுறைப் பொருத்தங்கள்

பகீரதன் என்பவன் கங்கையை  வானிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தான்.
மக்கள் யாவரும் போதுமான நீர்பெற்று மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதே நோக்கம்.மக்கள்பால் அவன் கொண்ட பரிவே அதற்குக் காரணம்.

இவன் ஒரு  பார்த்திபன்.  பாரிலே மிக்கத் திட்பம் உடையமன்னன்.

பார் + திட்பம்  >  பார் + திட்பன்
இது இடைக்குறைந்து டகர ஒற்று (ட்) மறைந்துவிட்டால்
இதுவே பார்த்திபன் ஆகிவிடுகிறது.  த் என்பது புணர்ச்சியில் விளைந்தது.

திட்பம் :  மனவுறுதி. செயலில் விடாமுயற்சியும் கெ ட் டி த் தன்மை யும்.


எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்

என்பதும் உண்மையே ஆகுமன்றோ?

யாரைப் பார்த்திபன் எனல் வேண்டு மெனின்  பாரில் திட்பம் உடையனாகி
எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனையே.

உண்மையில் " பகிரதன் "  ஒரு பகிர் + அது + அன். அவன் முயன்று முடித்த ஒன்றை மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்.

இனிப் "பகீரதன்" என்பது:

பகு+ ஈர் + அது + அன் >  பகுத்து, மக்களை ஈர்த்து, அது ( அவன் பெற்றதை),  அன்:  அளித்தவன்.  இது ஒரு காரணப்பெயர். இதன் காரணங்கள் தமிழ் மொழியிற்றான் அமைந்து கிடக்கின்றன.

இது  அது  அல்லது   து என்னும் இடைநிலை பெற்று அமைந்த சொற்கள் பல.
எ-டு:
கணி + து + அம் = கணிதம்
பரு + அது + அம் = பருவதம் (மலை).
சுர + ஒண்( மை  ) + இது  + அம் = சுரோணிதம்.
"ஊறு சுரோணிதம் மீது கலந்து"
----- பட்டினத்தார்

வினைச்சொற்கள்: கணித்தல், பருத்தல்,
சுரத்தல்

சிலர் பகீரதன் அல்லது‌ பகிரதன்
என்று ஒருவன் இருந்ததில்லை என்று
நினைக்கலாம்.. அவன்      இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. சொல்லை ஆய்வது தான் எம் வேலை.
இருந்தானா இல்லையா என்பதன்று.

Dear reader:   This post has been hacked by mischief makers.
We have partly restored it.
Some errors resulting from their intrusion have been rectified.
Dear intruder ,  if you do not like the contents please give your reasons or give your own etymology
in the comments column. It is OK for us.
Thank you intruder.

வியாழன், 9 ஏப்ரல், 2020

இமை நிமையாகி நிமிடம்

மணிநேரத்தை அளக்க வேறு கருவிகளில்லாமையால் மனிதன் பல்வேறு முறைகளில் முற்பட்டு அலுத்துவிட்ட நிலையில் கடிகாரத்தைக் கண்டுபிடித்தான்.  அதன்பின் அவனுக்கு காலச்செலவு அறியும் கட்டம் நீங்கியது.  கட்டமாவது கடினநிலை. ( கடு+ அம் = கட்டம் ).

கருவியற்ற நிலையில் அவன் தன் உறுப்புகளை வைத்தே எதையும் அளந்தான்.  ஒரு பொருள் நான்கு  அடி தள்ளி இருக்கிறதென்றால்  அதை நான்கு அடியென்றே சொன்னான்.  முழங்கை அளவினை முழம் என்றே சொன்னான்.

அவன்றன் கை நீள்வதும் முடங்குவதும் ( அதாவது மடங்குவதும் ) உடையதாய் இருந்தது. இது வசதி தந்தபடியால், முடங்கும் கையை  முழம் கை > முழங்கை என்றான்.  

முடு > முடுக்கு  ( > மடக்கு)  [  மேற்செலவின்மை]
முடு >   > முடம்   ;
முடம் >  முழம்.

தொடர்புகளை ஆய்க:   விழு> < விடு.;   பாடு > பாடை> பாழை  (< பாஷை).
பேசு > பேசை > பாசை (  < பாஷை).

இவற்றைப் பின்னொருகால் விளக்குவோம்.

கைகால்களைக் கொண்டு அளவிட அறிந்தவன்,  கண்ணைக் கொண்டும் அளந்தான்.    கண் இமைக்கும் பொழுதைக் கணமென்றான். ( கணம் >  க்ஷணம்). கண்ணால் அளந்த நேரம் என்பதை க்ஷண என்பது மறைவு செய்கிறது.  இதுபோலும் தடைக்கருத்துகளில் மகிழத் தலைப்பட்டான்.

கண்ணை மட்டுமோ கண்ணின் இமையையும் அவன் விடவில்லை.  இமைப்பொழுது என்றான்.  இமை இட்டு நேரத்தை அளந்து மகிழ்ந்தான்.
இறைவனைப் பாடுகையில் இமைப்போதும் நினை நீங்கேன் என்றான்.

இமைப்பது தொடர்ந்து நடைபெறுவதுதான்,  ஆனால் நிற்பதும் மூடுவதும் உடையது  அது.  இமைத்தல் என்பது சிறப்பாகக் கண் மூடுதலைக் குறிப்பதாக அறிந்தான்,  நின்றும் மூடியும் நின்றும் மூடியும் நடைபெற்றதனால்,

நில் + இமை >  நி(ல்)  + { இ} மை >  நிமை என்றசொல்  உருவானது.

இதைச் சுருக்கமாக,  நிமைத்தல் என்றான்.   இமை> நிமை என்று குறித்தான்,

புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க (திருப்புகழ். 497). என்பது எடுத்துக்காட்டு.

அன்றியும்  பிறழ்பிரிப்பாகவும் கருத இடமுண்டு.   கண் + இமை > கண்ணிமை > நிமை எனக்காண்க.  ( 00ணிமை).  இது இருபிறப்பி எனலாம்.

இமைத்தல் > நிமைத்தல்.  இமைத்தல் =  நிமைத்தல்.

இமைத்தலாவது  இமை இடுதல். இமை இடுதாலவது நிமை இடுதல்.  எனவே
நிமை + இடு + அம் =  நிமிடம் ஆனது. (  ஆக்கக்குறுக்கம்:  நிம் + இட் + அம்).
இடைவடிவங்களைப் புணரியலில் காட்டுவதில்லை. கருவுருக்கள் இவை,

நிமிடம் நிமிஷம் ஆனது மெருகு.

நிமை> நிமையம் என்பது நிமிடத்திற்கு மாற்றுப்புனைவு ஆகும்,

தட்டச்சு மறுபார்வை பின்.
நேரம் கிட்டுமாயின் கவின்பாடு,


மகுடமுகி ( கொரனாவைரஸ்)

வீட்டை நீங்கிச் சேறலின்றேல்
நோய்கள் தூரமே
கூட்டம் கூடிப் போதலின்றேல்
தொல்லை தீருமே.


சேறல் == செல்லுதல்,.  வழிநடை போதல்

வீட்டுப்பேச்சுக்கு  " வீட்டை விட்டுப் போகாவிட்டால் நோய்கள்
தூரமே, கூட்டம் கூடி ஆட்டம் வேண்டாம், தொல்லை தீருமே"
என்று மாற்றிக்கொள்ளலாம். செய்தி அதுவே.