புதன், 26 ஏப்ரல், 2017

கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?

கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?
நச்சரிக்கப் பட்டத   னாலோதான் === மெச்சவென்று
சொன்னார்பார் எந்திரங்கள் சோடையென்று! இல்லையெனில்
வென்றார்யார் எம்மை   என!

கெச்சரிவால் -  தில்லி  முதல்வர் ;
எந்திரங்கள்  -  வாக்கு  எந்திரங்கள்.

இந்தப் பாடல், அண்மையில் நடந்த டில்லி நகரவைத் தேர்தல்கள்
பற்றியது. அதில் கெச்சிரிவால் (கெஜ்ஜிரிவால்) கட்சி தோற்றது.
இதற்குக் காரணம், வாக்கு இயந்திரங்களே; அவை சரியாகக்
கணிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் கெச்சிரிவால்! இவர்
சொல்வதை நிறுவ இவரிடம் ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகவும்
தெரியவில்லை.(தெரிவிக்கவில்லை).

Owvayaar statue in Governor Palace. பாட்டிஒளவை

பாட்டிஒளவை வாழ்ந்தகாலம் பாரில்நாமும் இல்லை,
பலநூற்று நல்லாண்டு பாய்ந்துகால ஆற்றில்
மீட்டலின்றி ஓடியபின் மெல்லநாமு தித்தோம்!
மீண்டுபாட்டி மேனிதோன்ற மேடைபோடு வோமா ?
மூட்டமிட்டார் சென்னையாளும் மூப்பில்காட்சி ஆள்நர்;
மூதறிவோர் போற்றுவித்ய சாகரென்னும் பேரோர்!
ஓட்டமுற்ற வண்டிபோலும் ஈட்டம்கூட்டி னார்கள்;
ஒப்பில்சிலை மனைமுகத்து நிற்பவழி நேர்ந்தே.


மூட்டம்  -  தொடக்கம்  (   மூட்டுதல் )
ஆள்நர்  -   ஆளுநர்  (   governor )
 (
ஈட்டம் = வலிமை;
கூட்டினார்கள் ‍=  சேர்த்தார்கள்;
நிற்ப = நிற்க.   to  install.
நேர்ந்தே = திட்டமிட்டே. (   having   undertaken.)



செவ்வாய், 25 ஏப்ரல், 2017

When "U" (oo) changes to "A"

உகரத்தில் தொடங்கிய பல சொற்கள், பின்னாளில் அகரத் தொடக்கமாகிவிட்டன. எது முந்தி? என்று முடிவு செய்வதற்கு, சொல்லின் தொடக்க நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

அம்மா என்ற சொல், உம்மா என்றும் தமிழரல்லாத வேறு மொழியினரிடையே
வழங்குகிறது. "அம்" என்ற அடிச்சொல். சீன மொழியில் வயதில் மூத்த‌ பாட்டிபோன்ற மதிப்பிற்குரியரை உணர்த்துகிறது. தமிழ் சீனம் முதலிய மொழிகளில் சொல் "அம்" என்றே தொடங்குவதால், அம் என்பதே மூலச்சொல்
என்று முடிக்கலாம்.

தமிழில் "அம்மை" என்பதே இலக்கிய வடிவம் எனினும், விளிவடிவில் ( அழைக்கும் போது) அம்மா என்று ஆகாரம் பெற்று முடிகிறது. சீனமொழிச் சொல்லும் " அம்‍~" என்றே ஒலிக்கப்பெறுகிறது. அம்மாவைக் குறிக்க மலாய்
மொழியில் "ஈபு" என்ற ஒரு சொல்லும் உள்ளது. இது உரிய இடத்தில் "தலைமை" என்றும் பொருள்படும். பெண்கள் தலைமை தாங்கிய ஒரு காலத்தை இவ்வழக்கு நன்கு குறிக்கிறது.

உடங்கு என்பதிலும் அடங்கு என்பதிலும் உள்ள ஒற்றுமையையும் அறிந்துகொள்ளுங்கள்.

உடங்கு: கூடிநிற்றல்.
அடங்கு: இதுவும் ஒன்றில் இன்னொன்று கூடி உள்பதிவு ஆவதைக் குறிக்கக்கூடும். சொல் பயன்பா ட்டைப் பொறுத்து இப்பொருள் போதரும்.

அம்மை என்பது உம்மை என்றும் திரிந்து பொருள் மாறாமைபோல் இதுவும் கொள்ளப்படும் இடனும் உண்டு என்பதறிக.

உகல் என்பது கழலுதலைக் குறிக்கும். அகல் என்பது ஓரளவு பொருள் ஒற்றுமை உடையது. இரண்டும் அகலுதற் கருத்தினவாகும்.

உகளுதல் என்பது தாவுதல்; அகலுதல் என்பது நீங்குதற் பொதுக்கருத்து.

இவற்றை நன்கு ஆராய்ந்து, கருத்தொருமை வெளிப்படும் சொற்களையும் கருத்தணிமை வெளிப்படும் சொற்களையும் பட்டிய லிட்டுக்கொள்ளுங்கள்.