ஞாயிறு, 19 ஜூன், 2016

நவ்யா நய்யா names.

நல்   -  இது  நன்மை  என்று பொருள்படும் அடிச்சொல்.

நல்  என்பது ந  என்று மட்டும் வரின் அது கடைக்குறை எனப்படும்.

ந என்பது பின் பெயர்களுக்கு முன்  ஒரு முன்னொட்டாக வரும் .

ந + பின்னை  = நப்பின்னை   ( நப்பின்னையார் )

ந + செள்ளை  = நச்செள்ளை   (  நச்செள்ளையார் )

பழமை   காரணமாக    பொருள் கேடுறுமாதலின் ,  அது பழுது எனப்பட்டது.   இதற்கு மாறானது   நல்லது, பழுதற்றது.  பழுதில்லாதது  பழையதல்லாதது   ஆகவே புதியது.  

எனவே  நல்லது என்பதில் இயற்கையாகவே புதுமைக் கருத்துத் தோன்றியது.

நல்  >  ந >   ந +  அம்  =  நவம்  .   நல்லது.   புதுமை. :

ந +  அம்  =  நயம் . (நன்று )

ஆய்  >    ஆயா  >  ஆயாள் (  அம்மா )
ஆய்  >  ஆயி .

ஆயா என்பது முதற்குறைந்து   - யா   ஆகும்.

ஆயாவை  யா  என்றும் விளித்தல்  உண்டு.

ந +  யா =   நவ்யா    :   நல்ல  அம்மா ,   நல்ல ஆயா ,  புதிய  பெண் .  புதுமைப் பெண் .

ந + யா  =  நய்யா .  அதே பொருள் .

வகர யகர உடம்படு மெய்கள் .

நவ்யா   நய்யா என்ற பெயர்கள் வழங்கும்  -  சில இடங்களில் . 




அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.

htps://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_17.html

மேற்கண்ட இடுகையிலிருந்து நாம் தொடர்கிறோம்.  நாம் சுவைத்துக் கொண்டிருப்பது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியத்தில் உள்ள சத்திநாதனார் என்னும் புலவர் இயற்றிய ஒரு பாடலை.

சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையளெம் அணங்கி யோளே.

இஃது பாங்கன் பால் ஒரு தலைமகன் கூறியதைக் கொண்ட பாடல்.

இதன் பொருளை முதலில் அறிவது நல்லது.

வெள் அரவின் ‍  =  வெள்ளைப் பாம்பின்;   சிறு அவ் வரிக் குருளை =
அழகிய வரிகளை உடைய ஒரு சிறிய  குட்டியானது ;  கான யானை = காட்டகத்தே உள்ள ஒரு பெரிய யானையை;   அணங்கியாங்கு ‍  பிடித்துக்கொண்டு கடித்துத் துன்புறுத்தியது  போல; இளையள் ‍  சிறு அகவையினள்; முளைவாள் ‍=  முளைத்து ஒளியுடன் விளங்கும்; எயிற்றள் ‍ =  பற்களை உடையவள். அதாவது: பல்லழகி;
வளையுடைக் கையள் =  வளையல்கள் அணிந்த கையை உடையவள்;
எம் =  எம்மை; அணங்கியோளே =  வருத்தியவள் ஆவாள்.
என்றபடி.

அவள்தன் ஈர்க்கும் இளமையும்  அழகிய பளிச்சிடும் பல்வரிசையும்,
கைவளைகள் எழுப்பும் ஒலியும் தம்மை வருத்தித் தாக்குவனவாகி,
த‌ம் ஆண்மை அவளுக்கு அடிமைப்பட்டதனால் "தந்நிலை தடுமாறித் திரிகின்றேம்"  என்கிறான் தலைவன்  பாங்கனிடம். 

 அவள் நிறம் வெண்மை. அவன் வயதிற் சிறியவள். அவள் வரிகளை
உடைய குட்டிப்பாம்பு.  வீரிய்த்தில் யாம் காட்டு யானை ஆயினும் அவள் கடிக்கு ஆளாயினேன். வரிகள் அவள் அழகினை உறுதிப்படுத்தும் குறிப்பு. வீழ்ச்சி எமதே என்கிறான்.

அவன் வீழ்ந்தபின், அவள் தேடி வரவில்லை போலும்.  மேலும்
வந்து சந்திக்கவில்லை போலும்.

வெள்ளைப் பெண்ணிடம் ஒரு சந்திப்பில் கெட்டான் அவன்.
அவன் பரிதவிப்பைப் காட்டுகிறது இப்பாடல்.

குட்டிப்பாம்புபோலும் ஒருத்தியிடம் தன் கட்டிளமை இழந்தவன் கதை இது. 

அவள் அலையவில்லை; அவன் அலைகிறான்.



வெள்ளி, 17 ஜூன், 2016

பால் பால்யம்

இப்போது பால் என்பதற்கும் பால்யம் என்பதற்கும் உள்ள தொடர்பினைச் சற்று சிந்திப்போம்.

பால் என்பது பாகம் அல்லது ஒன்றன் பகுதி என்று பொருள்படுகிறது. எனவேதான்  திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற பகுப்புகள் உள்ளன. இவை நூல் பகுப்புகள்.  நூலின்   உள்ளமைப்புகளுக்கு அத்தியாயம் என்ற பெயரும் உள்ளது.  ஓர் அத்தியாயம் முடிந்து, இன்னோர் அத்தியாயம் தொடங்குகிறது.  இதை உணர்ந்துகொண்ட பாணப் புலவனாகிய பாணினி ஓர் அத்தியாயம் அற்று இனொனோர் அத்தியாயம் இயைகிறது என்று அறிந்துகொண்டான்,  அறியவே அற்று > அத்து,  இயை  : இன்னொன்று தொடங்குபடி  ஆயம் :  ஆயது,  ஆனது என்று மூன்று சிறு சொற்களை இணைத்து அத்தியாயம் என்ற சொல்லைப் படைத்தான். இது ஓர் அழகிய சொல். ஆக இச்சொல்லின் அமைப்பிலிருந்தும் தமிழே மூல மொழி என்பது அறிந்துகொள்ளலாம், வேலை போய்விடுமே என்று பயந்து சில பேராசிரியர்கள் இதைச் சொல்லமாட்டார்கள்.  பாண்>  பாணன்;  பாண்> பாணினி, இவன் பாணர் பரம்பரையினன், அறிஞன்.

நூலின் பகுதி பால் என்றோம்,  அதுபோலவே  ஆன் என்னும் பசுவின்
உடலூற்றின் பகுதியே  பால் என்பதும் ஆகும்.  பால் ஆனின்  உடலினின்று பிரிந்து வருவது அன்றோ?

சொல்லமைப்புப்  பொருள் :  பகுதி = பால். பகு + அல் = பால்;  முதனிலை நீண்டு  குகரம் கெட்டது .   பகுதி = பாதி  என்பதிலும் முதனிலை  நீண்டது;   குகரம்  மறைந்தது.    திகரம்  இயல்பாய்  நின்றது.

பகு + அ  =  ப அ  >  பா .
ப அ = ப் அ அ =  ப் ஆ = பா ,  .Got  it  ?   This is quite  basic.

( We have to explain for those who do not comprehend at once.  Pl bear with us ).

பால் பெரும்பாலும் குழந்தைகட்கு உணவாகிறது,  குடித்த பால் கொடும்பில் இருக்கிறது என்பார்கள். பால் குடிக்கும் வயது என்பார்கள்.\\இக்கருத்திலிருந்தே பால்யம் என்ற சொல் அமைந்தது. பால்  இ  அம்  > பாலியம் >  பால்ய .   பாலன், பாலா என்பவெல்லாம் இதிலிருந்தே பெறப்பட்டவை.

 உறு என்ற சொல்லினின்று உறவு வந்ததுபோலுமே  பெறு என்ற சொல்லிலிருந்து  பெறவு என்ற ஒரு சொல்லை அமைத்தோமானால் பாலன் பாலா என்பன போன்றவற்றை நாம் பெறவுகள் என்று குறிக்கலாம்.

Author's edit  note:
Error (typo) :   உடலின்று   corrected to -   உடலினின்று.
Problem detected on the computer we are using now . Cursor jumps to unintended  locations. Types in unwanted places in the draft.  This is being looked into.