சனி, 4 ஜூன், 2016

எசமான் தமிழா?

இய என்ற தமிழ் அடிச் சொல்லிலிருந்து சொற்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுட் சில:

இய  >   இயங்கு.   ( கு வினையாக்க விகுதி )

இய >   இயவுள்    (  =  கடவுள் )
இய >    இயங்கி   (motor,   modern   word
இய  >  இயக்ககம்   ( directorate    modern word)
இய >  இயக்கம்
இய >   இயக்குநர்   ( இயக்குனர் என்றும் எழுதப்படுகிறது  )
இய > இயல் > இயற்று.>  இயற்றுதல் .
இய > இயல்பு

இப்படிப் பல          (above .....)

இப்போது  எசமான்  என்ற சொல்:



இய  >   இயமகன்

இய >    இயமான்

மகன் என்பது  மான் என்று திரியும்.

எ-டு :  பெருமகன்  >  பெருமான்

இயமான்  >  இயமானன் .  (அன் விகுதி )

யகரம் சகரம்  ஆகும்.

இ என்பது  எ என்றும் திரியும்.

இயமான் >   எசமான்

இயமானன்  >  எசமானன்

இயமான்  என்பது வழக்கொழிந்தது /\

மகன் என்பதிலிருந்து திரிந்த  மான் இறுதி சொல்லில் தோன்றியபின்  அன் விகுதி  தேவைப் படாது.  எனினும்  வந்துள்ளது.   ஆண்பால்  குறிக்கிறது.

எசமான் -   எசமானி/  (பெண்பால் )

எசமான்  >  எஜமான் !!

எனவே  மான் என்பது வெறும்  இடை நிலையாகப் பயன்பட்டுப்  பொருளிழந்தது .

செய்கின்றான்  என்பதில் இன்று என்பது  கின்று  ஆகி  தன்  பொருள் கெட்டதுபோல.   இன்று என்பதே நிகழ்காலம் ,

பேச்சு வழக்கில்  செய்றான் என்று வந்து  கி  ஒழிந்தது.

சமஸ்கிருத மொழியில்  இஷ்  என்ற அடிச்சொல் உள்ளது.  இது ஈஷ்வர்  என்பதிலிருந்து  பெறப்பட்டது.   எஜமான் என்ற வடிவத்தைக் காண முடியவில்லை பழைய அகரவரிசைகளில் தேடிப்பாருங்கள் .



will edit later.  edit not available..




வெள்ளி, 3 ஜூன், 2016

சொல் அமைப்புத் தந்திரம்

பண்டைக்  காலத்தில் சொல் அமைத்தவர்கள்  பல வழிகளைக் கையாண்டார்கள்.   அவற்றுள் ஒன்று:

முதலில் அமைத்தற்குரிய சொல்லின்  கருத்தை ஒரு வாக்கியமாக எழுதிக்கொள்ளவேண்டும்.

இதற்கு "முகாந்திரம் "    என்பதையே  எடுத்துக்கொள்வோம்.

வாக்கியம் :    முகம் ஆகும்  திறம்.

1.   ஆகும்  என்பது  ஆம் என்று குறையும்.

      எனவே முகம்  ஆம்  திறம்./

2.  பின்  முகம்  என்பது  முக  என்று  மகர ஒற்றை இழக்கும்,

     எனவே  முக  ஆம்  திறம் . ஆகிறது.

3.  இப்போது சொல்  துண்டுகள் புணர்த்தப் படுகின்றன .
 
      எவனே  முகாந்திறம்  ஆகிறது.

4. இனி  திறம் என்பதை வெறும் பின்னொட்டு  ஆக்கவேண்டும். இதற்கு  றகரத்தை  ரகரம்  ஆக்குக.

    எனவே  இப்போது  "முகாந்திரம் "  ஆகிறது.

திறம் என்பது திரம்  ஆக்கப்பட்டு, வெறும் பின்னொட்டு ஆகிவிட்டால்,  சொல்லின் அடிப்படைகளை நன்கு மறைத்துவிடலாம்.  ஒவ்வொரு சொல்லுக்கும்  அதன் வரலாற்றை  அதைப் பயன்படுத்துவோன்  தெரிந்திருக்க வேண்டியதில்லை . சொற்களின்    வரலாறுகளை நினைவுபடுத்திக்கொண்டிருந்தால்  ஒருவேளை  பயன்பாட்டில்  மனத் தடையுணர்ச்சி  ஏற்படலாம்.

எ-டு :   வேதம் என்ற சொல்.வித்  ( விடய அறிவு )    என்பதிலிருந்து வந்தது என்று  கொண்டால், அது  இறைப்பற்று  சார்ந்த நூல் அன்று என்று எண்ணத் தோன்றுமே..அது தவறன்றோ ? இதை அற்றம் ஏற்படின் விளக்குவோம்.
   

    

முகாந்தரம்

முகாந்தரம் என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.

முகம் என்பது வெளியுலகால் அறியப்படுவது ,   முகமற்றது  அறிதற்கு  இயலாத ஒன்றெனலாம் .

மனிதன்  ஏனை  விலங்குகட்கு  முகம் இருந்து  அறிதற்கு உதவுவது போலவே,  பொருள்கட்கும் விடயங்கட்கும் முகம் போன்ற ஒரு தெளிவு தரும் அமைப்பு வேண்டும்.  இஃது இருந்தாலே சான்று இருப்பதாகக் கருதப்படும்.

"அவனைக் குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை': என்று இச்சொல் வாக்கியத்தில் வருதலைக் காண்கிறோம்.

இப்போது அணுக்கமாகக் காண்போம்.

முகம் +  ஆகும் + தரம்,
முக +   ஆம்  +  தரம்,
முகாந்தரம் .

பொருள் :   காரணம்,  சான்று,   ஏது,  ஞாயம்,   மூலம்..

சொல்லை விரித்து  எழுதினால்   "முகம் ஆகும் தரம் "  ஆகும் .


முகாந்திரம்  எனினும்  ஆகும்.    திறம் >  திரம் .   முகம் ஆகும் திறம்.