சனி, 21 மே, 2016

அன்னையின் இன்பத் தாலாட்டு


நள்ளிரவில்  வாழ்த்தியம் 
நாட்டு வெப்பம் தணித்திட‌த் 
தம்மனை  அனுப்பிய தண்ணருள்.
நானுறங்கப் பார்த்தும்
நல்லிரு விழிகள் மூடவில்லை;
மழை  சொரியக் 
குழைந்தன என் இமைகள்!
கூடுதல் வேகத்தில்
மூடிக்கொள்ள முனைந்தன.
குளிரூட்டிய அறையில்
தளிராகப் படுத்திருந்தேன்

மழைதந்த குளிரால்
விளைந்த ஊதியமென்ன?

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை

பின் ஏன் உறக்கம் இப்போது
முன்வந்து எனையணைக்க 
முயல்கின்றது.?

அந்தச் சலசல ஒலி
கூரைகளின் மேலே தடதட...
விழுந்தும வழிந்தும் ஓடியும்
என் தாயின் தாலாட்டினை
செவிக்குள் செலுத்தின,

சலசல தடதட வரவர‌ தரதர  

இயற்கை அன்னையின்
இன்பத் தாலாட்டு.

ஊழல் புரிந்தோர்

ஊழல் புரிந்தோர் ஓளிவதோ  எங்கேபோய்?\
ஆழ்கடல் தாண்டவும் ஆகாதே === வீழ்ந்தோரும் 
கூழே குடித்துக் குறுக்குற்ற கம்பிகள்பின்
பாழே அடைந்தனர் வாழ்வு. 


https://sg.news.yahoo.com/tai

 

Taiwan's ex-president Ma faces lawsuits as immunity ends





Coin a new word for our astrology

கணியம் என்னும் சோதிடக் கலை தமிழருடைய தன்று என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறுவார். அவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் பணபரம், ஆபோக்லீபம் முதலிய பதங்கள்  கிரேக்க மொழியினுடையவையாக இருந்தமைதான். சில அயற்சொற்களிருப்பதனாலேயே  எல்லாம் கடன் வாங்கியனவாக இருக்கும் என்ற முடிவு  ஏற்புடைத்தன்று.   ஒரு முடிவை நிலைநிறுத்த ஆதரவான  வேறு காரணங்களும்  தேவைப்படும். கோணுகோப்பிய என்ற கிரேக்கச் சொல்  கோண(ல்)  + கோப்பை என்ற தமிழ்ச்சொற்களின் இணைப்பில் உருவானதாகத் தெரியவில்லையோ? இஞ்சிவேர்  என்பது ஜிஞ்சர் வரை செல்லவில்லையா? அது நிற்க.

நிற்க  ஒரு  கலை என்றால்  அதற்கே சிறப்பாக உரிய சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. சோதிடம் என்பதும் ஒரு கலை அன்றோ? இராசி என்ற சொல் பற்றாக இருக்குமிடம் என்று பொருள்படும் ராசி1 என்ற சொல்லுக்கு வழிவகுத்தது. இரு + ஆசு+ இ = இராசி ஆகிறது.  இராகு என்ற கோளின் பெயரைப் படைக்கையில்  இர் என்ற அடிச்சொல் முன் நிற்பது தெரிகிறது.   இர் >  இருள் ;  இர் + ஆகு =  இராகு.  இருளான அல்லது நிழற் கோள் என்பது பொருள்.   மதுரை என்பது மடுரை என்று ஆங்கிலத்தில் அழுத்தப் படுவதுபோல  கேடு  என்பது கேது ஆயிற்று.(a reverse corruption).  இதற்குக் காரணம் கேதுவும் ஒளி கெட்ட கோள்தான். கணியர் சிலர் 7 கோள்களையே வைத்து எதிர்காலம் கூறினர்.  சரியாகச் சொல்வதற்கு இன்னும்  இரண்டு கோள்கள் கணக்கில் வராமை கண்டவர்கள்,  அந்தக் கோள்களை வருவித்துகொண்டனர்.  ஆகவே ராகு கேது நிழற் கிரகங்கள் என்பர்.

இப்படிச் சொற்களைப் படைத்துக்கொண்டமை நோக்குங்கால், கணியம் தமிழரின் சொந்தக் கலையாகவே உறுதிப்படுகிறது.  இக்கலையில் சில மேற்பூச்சுகள் வெளிவரவாக  இருக்கக் கூடும்.

சரி,  இப்போது, ஒரு பயிற்சி செய்வோம்.

ஆடு என்பது தமிழ்ச் சொல்.  அதுகூட சமஸ்கிருதத்தில் ஆஜ என்று மாற்றமடைந்து வழங்குகிறது.

ஆடு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதற்குப் பதிலாக  வேறு  ஒரு சொல் உருவாக்க வேண்டும்.   எப்படி?

ஆடு மே மே என்று கத்துகிறது.  ஆகவே மே என்பதைத் தலை எழுத்தாக்கிக் கொள்வோம்.
மே,   அப்புறம்  ஆடு என்பதில் உள்ள டு என்பதை எடுத்துக்கொள்வோம்.

மே+  டு =  மேடு ஆகிறது.

மேடு வேறு;  ஆடு வேறு ,மேடு இருக்குமிடத்தில் ஆடு  மேய்ந்தாலும்  இது மேலும் கவனிக்க வேண்டியதாகிறது.  தொடர்வோம்.

 இப்போது  அம் என்ற விகுதி சேர்ப்போம்.

மே+  டு+  அம் =  மேடம் ஆகிறது.

மேட இராசி என்பது பொருத்தமாக வந்துவிட்டது.

ஓர் எழுத்தை மாற்றினால்,.....

மேஷம் ஆக்கிவிடுவோம்.

ஆகவே ஓர் இராசிக்கு ஒரு சொல் கிடைத்துவிட்டது.

மகிழ்ச்சியாக ஆடுவோம்.  வெறும் ஆட்டை விட்ட நேரம்  மே மே என்று கத்தும்  ஆட்டைக்   கைக்கொண்டிருக்கிறோமே. அதற்காக!


edited.  will review.