மனிதமுகம் தன்னுடனோர் ஆட்டுக் குட்டி
மனிதர்தமை வியப்புறுத்திப் பிறந்தி றக்க
அணுக்களுக்குள் ஆளைப்போல் அரத்த சாரம்
அதற்குண்டோ அறிவியலார் அதனை ஆய
கணக்குகளில் சாரமிதோ வேறொன் றென்று
கண்டறிந்து கழறினரே கருத்துக் கொண்டு;
தணிவிலதாம் தார்வினியத் தெரிவி யல்காண்
தான்மீண்டும் வன்புடனே நிமிர்ந்த தன்றே!
ஆளைப்போல் - மனிதனைப்போல்
அரத்த சாரம் - இரத்தத்தின் சாரம் (DNA) அர்த்தம் = இரத்தம் .
கணக்குகளில் - in their DNA calculations
தணிவிலதாம் - பாதிக்கப் படாததாம்
தார்வினியம் - Darwinism
வன்புடனே - பலமாக
தெரிவியல் -theory
விரிவாகத் தெரிந்துகொள்ள:
No human DNA found in kid with human-like features, says Vet Department
https://sg.news.yahoo.com/no-human-dna-found-kid-110219079.html?nhp=1