வியாழன், 12 மே, 2016

சரித்திரம் - சொற்பொருள்

சரித்திரம் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இதற்குத் தமிழில் " வரலாறு " என்று சொல்கிறோம். வரலாறு என்பதை "நடை பெற்றதைச் சொல்வது " என்று சொல்லலாம். சரித்திரம் என்பதும் அதையே குறிக்கிறது என்றாலும் அச்சொல்லில் மற்றொரு பொருளும் உள்ளது.. அது யாது?  

சரித்திரம் -  சொற்பொருள் :

நடைபெற்றதைச் சரியாகவும் திறம்படவும் உரைக்கும் கலையே சரித்திரம். சரி + திறம் = சரித்திறம் > சரித்திரம் ஆனது. திறம் - திரம் என்ற முன்னொட்டாய் ஆனதைப் பல இடுக்கைகளில் முன் குறித்துள்ளேன்.

ஆனாலும் சில எடுத்துக்காட்டுகள்: 


என்று வெகுண்டு எழுந்து திறமாக ஒன்றை எதிர்கொள்வது ஆத்திரம். இது வெகுண்டோன் நடக்கும் விதத்தைக் கவனித்தமைந்த வழக்குச் சொல் ஆகும். இங்கு திறம் என்பது
திரமானது -   அதாவது  ‍ ஒரு பின்னொட்டு ஆனது.

வேண்டுதல்கள் பலித்து நிலைபெற ஓதப்படுவது மந்திரம் 2   . மன்னும் ( நிலைபெறும்) திறத்தை வழங்கும் வலிமை உடையது என்னும் நம்பிக்கைப் பொருளது. மன்(னு) + திறம் = மன் திறம் > மந்திரம். ஆனது இது முன்னும் ( thinking, meditating) திறம்; பின் மன்+திறம் > மந்திரம். ஆயது எனறு பொருள் கூறினும் ஒக்கும். எப்படியாயினும் தமிழே. 1

இதிகாசம் என்ற சொல்லை அடுத்து அறிவோம்.

குறி ப்புகள் 

ஐந்திறம்  என்பதே  ஐந்திரம்  ஆகிவிட்டது .   இது  இந்திரன் எழுதிய  இலக்கணத்தைக்   குறிக்கும் என்று  கூறப்படுகிறது.  உண்மையில்  எழுத்து. சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தியலே  ஐந்திரம்.  தமிழிற் சொற்கள் சில  றகர ரகர வேறுபாடு இன்றி வழங்கும். 
அறிஞர்  கா  சு  பிள்ளையும்  இங்ஙனமே   கருதினார் .

2 தொல்காப்பியம் கூறும்பொருள்  இதுவன்று.
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491)




புதன், 11 மே, 2016

very good rain வந்தமழையில் பசுமை

தூங்கிப் போன இலைகள் சோர்வு நீங்கிப் போனவே
வான்கறுத்து  வந்தமழையில் பசுமை காணவே.

சாலை பெற்ற பொழிவில்  தரையில் ஆவி மேவுமே
ஏழைத் தவளை எழுந்து கத்தி உயரத் தாவுமே

காயும் புல்லில் திவலை துள்ளக் கட்டெ   றும்புகள்
மேய எண்ணி வரிகளூரும் உணவு நம்புமே.

தண்மை அறையில் தங்கிச் சோர்ந்த கவின்கு மாரிகள்
உண்மை தானோ என்றுவானை வாழ்த்திக் கூறினார்.

ஆறு குளங்கள்  சேறு நீங்கி  நீரின் பெருக்கிலே
யாரும் நோக்கி மகிழும் வண்ணம் நடை  சிறக்கவே.



போனவே -  போயினவே   (யிகரம்  தொக்கது).
காயும்  -  மழையின்றிக் காயும். 
 திவலை - பின் வந்த மழையினால்  நீர்த்துளிகள் 
வரிகள் ஊரும் - வரிசைகளாய்  ஊரும் 
உணவு நம்புமே  - உணவு வரும் என்று நம்புமே.
தண்மை airconditioned   -  referred,
நடை - நீரின் ஓட்டம் .(நீரின் பெருக்கால் ஏற்பட்ட நடை )


செவ்வாய், 10 மே, 2016

இராமன் ஆண்டாலென்ன‌ இராவணன் ஆண்டாலென்ன;

இராமன் ஆண்டாலென்ன‌
இராவணன் ஆண்டாலென்ன;
வராதது ஒன்றும் வரப்போவதில்லை;
வருவது என்றும்  வந்தே தீரும்.

\எனவே பலர் சொன்னபோதிலும்
மனமோ அதைக் கேட்கவில்லையே!

பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல்  அதைக்
களிப்போடல்லவோ கவனித்துக்கொண்டிருக்கிறோம்!
பலிப்பவை இனித் தேர்தல் வாக்குறுதிகள் ஆம்,

வளரும் பொருளியல் உலகிற்கு\
ஹிலரி கிளின்டன் ஏற்ற தலைவரென்று
மலராவோ எம் தோட்டத்துப் பூக்கள் இனி?\\\

அந்தக் கவலையும் கூட எனது
சொந்தக் கவலையாகிவிட்டதே மனத்தில்.

போனால் போகட்டும் போடா என்றனர்
போனது போகட்டுமே
வருவது வரட்டுமே
பிறங்கொளி மேனிப்  பூமியின் மன்றில்
உறங்கிடு    வோம் ஒரு கவலையு மின்றி.

அனைத்தும் வாழ்க....