வியாழன், 14 ஏப்ரல், 2016

இடையில் யகர ஒற்றுக் கெடுதல்

இதனையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாதி தாதிமார் என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது?

தாதி என்ற சொல்லின் முந்து வடிவம் தாய் என்பதே.  அது தி என்ற சொல்லாக்க விகுதி புணர்த்தப்பட்டுள்ளது.

தாய் + தி =  தாய்தி  >  தாதி.

எனவே யகர ஒற்று மறைந்தது.

சொற் புனைவில் இது இயல்பு.   எடுத்துக்காட்டாக:

வாய்+ தி >  வாய்த்தி  > வாத்தி
வாய் பாடம் படித்துக் கொடுப்பவர் .

பணிவுப் பன்மை ஆர் விகுதி பெற்று:

வாத்தியார்  ஆகிறது.

உப + அத்தியாயி  =  உபாத்தியாயி , உபாத்தியாய  என்ற சமஸ்கிருதம்
வேறு  என்பதை முன் விளக்கியதுண்டு.  ஆங்குக் காண்க.

தேய்+கு +அம்  = தேய்கம் >  தேகம்  ( அழிதலை உடைய உடல் )

உய்த்தல்
உய் + த் + இ =  உய்த்தி  > உத்தி  >  (யுக்தி )  உய்த்துணரப்படுவது .


continue reading next relevant post:
  http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html

சீர்ச்செய் சிகிச்சை

சிகிச்சை  என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்.  ஒரு மருத்துவரிடமோ வைத்தியரிடமோ சென்று உங்கள் நோயையோ வலியையோ போக்க அல்லது குறைக்க‌ அவர் செய்வன  ‍  சிகிச்சை எனப்படும். நீங்களும் அதில் பங்குகொண்டு அவர் சொன்னபடி மருந்துண்ணவோ தைலம் தேய்க்கவோ   (etc etc)  வேண்டி வரலாம்.

அதாவது அவரும் நீங்களும் இணைந்து உடலைச் சீர்செய்யச் செயல்படுகிறீர்கள்.

சீர் செய் > (இங்கு செய் ‍ வினைச்சொல்லாய் வருகிறது, ஏவல்.)
சீர்ச்செய் >  இங்கு செய் என்பது முதனிலைத் தொழிற்பெயராய் சகர ஒற்று தோன்றுகிறது.

சிகிச்சை : இங்கு சீர் என்பது சிகு>  சிகி   என்று மாறுகிறது.

வேறு எடுத்துக்காட்டுகள்:

பகு > பா.  பகுதி > பாதி,
திகை:   திகைதி > திகதி > தேதி.
மக > மகன் > மான். (தொண்டைமான், நெடுமான், அதிகமான் )

ககரம் அடுத்து வந்தால் முதனிலை நீளும். ககரம் மறையும்.

இந்த விதியை மடக்கிப் போடால்   reverse,  பா> பகு என்று வருமன்றோ.

எனவே,

சீர் > சீ > சிகு ஆகிறது.
சீர் . சீ > சிகி என்றும் ஆகும்.

மா (பெரிது) > மகி > மகிமை என்றும் வரல் அறிக.

சீ> சிகி.
மா> மகி.

சிகுச்சை /  சிகிக்சை    உ - இ மாற்றமும் இயல்பே. But we can go to  சிகிக்சை without having to wade through  சிகுச்சை,

செய் என்பது சைஎன்றும்  திரியும்.  செய்கை> சைகை.  நன்செய்> நஞ்சை. மொழி முதல் இடை கடையிலும் வந்துழிக் காண்க.

சிகிச் செய் >  சிகிச்சை  ஆகிறது.

ஆகவே சீர்செய் > சீர்ச்செய் > சிகிச்சை : மெய்ப்பிக்கப்பட்டது.

கணக்குப்போல் போட்டுத்தான் சொற்களைக் கட்டியுள்ளனர் என்பது
காண்க‌.

மொழி பொருள் காரணம் விழிப்பத் தோன்றா என்று பாடிய தொல்காப்பியனாரைப் பாராட்டின் தகும். மொழி முற்றுணர் அறிஞர் அவர்.










புதன், 13 ஏப்ரல், 2016

நல்லிசைப் புலவர் கல்லாடனார்:


continue from  http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_91.html


கல்லாடனார்:  அவர் ஒரு  நல்லிசைப் புலவர்.  சொல்லில் நாகரிகம் மிக்கவர் என்று நன்கு பாராட்டலாம்.  ஏன்?

"அத்தான் வருவாக" என்ற இடுகையில், தரப்பட்ட குறுந்தொகைப் பாடலில்  தொண்டைமான்கள் பரம்பரை என்பதை "தொண்டையர்" என்ற சொல்லால் புலவர் குறிப்பிடுகிறார். சொல்லானது பன்மையில் ஆளப்பட்டுள்ளது காணலாம்.

போரில் பல வெற்றிகள் ஈட்டிய அவர்களின் யானைகள் "அண்ணல் யானைகள் " ஆகின.  அண்ணல் உயர்ந்தோன் என்றும் பொருள்படும். இது
தொண்டைமான்களின் சிறப்பை யானகள் மேலேற்றிக் கூறுதல் ஆகும்.
அவை தின்பது பகைவரின் விளைச்சல்களை.

தொண்டைமான்கள் வீரர்கள். பகைவர் உணவை உண்ணார்.  உண்பவை
யானைகள். சொந்த உணவு இல்லாதவர்களா தொண்டைமான்கள்?.

புலவரின் பாடலில் இதுவும் ஒரு சிறப்பு ஆகும்.