இப்போது சீக்கிரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று சொல்லப்படினும் இதன் அடிச்சொற்கள் தமிழாக உள்ளன.
சீ என்பது சீர் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை, ரகர ஒற்று இறுதியில் நின்றால் அது பேச்சு வழக்கில் மறைந்துபோவது பெருவழக்காதலின் அதை இப்போது விரிக்கவில்லை.
கிறங்குதல் என்பது அசைதல் என்ற பொருள் உடையது, இதன் அடிச்சொல் கிறு என்பது. கிற்புறுதல் கிற்றல் என்பனவும் கில் > கிறு என்ற அடியில் தோன்றியனவே ஆகும். கில் > கிரு எனினுமாம் .
கிறு+ அம் = கிறம் ஆகிறது. இதன் றுகரம் ருகரமானால் கிறு> கிரு+ அம் = கிரம் ஆகும்.
சீ + கிரம் = சீக்கிரம் ஆகும்>
இது சீராக அசைதல், எதிர்பார்ப்புக்கு ஏற்ப அசைதல் இயங்குதல் என்று பொருள்பெறுகிறது.
உண்மையில் இது சீர்க்கிறம் பின்னர் திரிந்து சீக்கிரம் என்று இதன் அடிச்சொற்கள் யாவை என்று அறியாத நிலையில் வாத்தியார்களால் எழுதப்பட்டுத் தமிழன்று என்று கருதப்பட்டுள்ளது. பின் பிறமொழிகட்குப் பரவியிருக்கின்றது,
இப்போது இது விரைவு குறிக்கிறது. எதிர்பார்க்கும் வேகக் கூடுதலே சீக்கிரம்