வெள்ளி, 1 ஏப்ரல், 2016

தபால்.

பிற்காலத்தில் புதிய சொற்கள் பல தமிழில் பயன்பாடு கண்டன.அவற்றுள் தபால், தந்தி என்பன நன்கு ஆட்சி பெற்றவை. நல்ல தமிழ் எழுதவேண்டுமென்பார் இவற்றை  விரும்பாமைக்குக் காரணம் இவை தெற்கணி (தெக்கணி, தக்கணி, தக்காணி) மொழிச்சொற்கள் என்று எண்ணியதே காரணம். அதற்கியையத்  தமிழில்போல  தக்கணியிலும் இவை வழங்கின.

ஒரு கடிதத்தையோ அல்லது எழுதப்பட்ட காகிதத்தையோ அன்றிப் பொருளையோ தன் பால் கொண்டு சேர்ப்பதைத்  த‍ன்‍+பால் >   தன்பால்>  தபால்  என்று குறித்தனர்.  பால் என்பது பக்கம் என்றும் பொருள்தரும் சொல்லாகும் ,  பெரும்பாலும் இலக்கிய வழக்குடைய சொல்லாதலின்,  இதைப் புனைந்து புழக்கத்தில் விட்டவர் தமிழ் அறிந்த வாத்தியாராகவோ வேறு தொழிலுடையாராகவோ  இருந்திருப்பார். இத்துணைக்காலமும் இத்துணைபேரையும் மருட்டிய இச்சொல்லைப் புனைந்தவரை நாம்
அறிந்திருந்தால் அவருக்குப் பரிசு வழங்கியிருக்கலாம்.

இடைவந்த  னகர ஒற்றைக் களைந்து சொல் அமைத்தது ஒரு வழியாகும். இன்னோர் எடுத்துக்காட்டு:

நண்பர்  ( நட்புடையவர் )  > நபர்.  ( நட்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் )  ‍சிறிய பொருள் மாற்றம்.

தன்பால் >  தபால்.  மேற்படி சொல்லமைப்புமுறை பயன்பட்டது.

ஓர் எழுத்தை எடுத்துவிட்டாலே கண்டுபிடிப்பது கட்டமாகிவிடுகிறது.

தந்தி பிறகு காண்போம்.

சான்றுகள் இல்லா வழக்குகள்

சான்றுகள்  இல்லா  வழக்குகள் ஒட்டினும் 
ஈன்றது கட்டி,   குழந்தையோ  அன்றெனல்போல் 
உற்ற நிலைதான் ஒருசிலர் கொள்பிடியால் 
பெற்றது யாதோ பயன்.

போதிய சாட்சியங்கள் இல்லாத வழக்கு நடத்திப் பயனில்லை; 
இவற்றை நடத்தும் படி பிடியாய் நிற்பதும் வீண். 

எதுகை மோனையுடன் அமைத்தாலே இன்புறு கவியென்பர் ஆதலால் இப்போது இதனை இப்படியாக மாற்றியமைப்போம்:

சான்றுகள் இல்லாத சாய்வழக் கோட்டினும் 
ஈன்ற திழிகட்டி இன்குழந்தை அன்மைபோல்
உற்ற நிலைதான் ஒருசிலர் கொள்பிடியால்
பெற்ற தியாதோ பயன\


இதையும் சுவையுங்கள்:

உள்ளீ   டிலாத (து) ஒழிவழக் காயிடிலோ
அள்ளு கருக்கட்டி அன்புக் குழந்தையன்றே
தெள்ளு நிலையிலர் தேடித்தம் கொள்பிடியால்
உள்ளுவ‌ தியாதோ பயன்.

An error keeps surfacing in this post and even after numerous \\
attempts the formatting still does not fall in line with our edit.
Hence we would desist from editing this any further. We have 
no idea how the display in your computer or other device would
 present itself. \



செவ்வாய், 29 மார்ச், 2016

புலவர் பெற்ற அதிகாலைச் செய்தி (புற நானூறு.....).

முடியுடை மூவேந்தர்களில் ஒருவரல்லாத  குறு நில மன்னர்களில் ஒருவன் எவ்வி.  வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் என்னும் புலவர் பாடிய பாடல் இதுவாகும்.  புறப்பொருளில் இது பொதுவியல் துறை. கையறு நிலைத் துறை. அதாவது அவனுக்கு மரணமாகிய துன்பம் நேர்ந்தது எனக் கேட்டு அது பற்றிப் பாடிய துயரப் பாடல்.

எவ்வி பாணர்கள் கூட்டத்துக்குப் பெரிய நண்பன்.  அவர்களின் தலைவன் என்று கொண்டாடத் தக்க புகழுடன் வாழ்ந்தவன். இரும்பாண் ஒக்கல் தலைவன் என்று பாடல் அவனைப் புகழ்கின்றது.  அவனுடைய படை, வியக்கத் தக்க ஆயுதங்கள் பூண்ட, போரில் பகைவனைத் தண்டிக்கத் தகுதியுடைய படை.
பாடல் பாடிய போது,  அவன் மார்பில் போரில் விழுப்புண்கள் பல ஏற்பட்டு வீழ்ந்தான் என்று அதிகாலையில் புலவர் கேள்விப்படுகிறார். அச் செய்தி அவருக்குச் சொல்லொணாத் துயரை விளைத்தது. "இந்தக் குரலில் எனக்குக் கிடைத்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா...."  என்று அவர் மனம் கவல்கின்றது.

யானை நடக்கும்போது அளவிட்டதுபோல கால்களை வைத்து நடக்கின்றது.  இது பாவடி என்று குறிக்கப்பெறுகிறது. பகு அடி ‍  பகுத்து ப் பகுத்து வைப்பது போலும்  காலடி  பாவடி. அத்தகைய யானைகளைப் பரிசிலர்கட்கு (பாணர்களுக்கும் புலவர் பெருமக்கட்கும்) தருகின்ற சீர் சான்ற வேள் ‍இந்த எவ்வி. அவனை எதிர்த்துப் போரிட்ட அகுதை ஏவிய இரும்பு ஆயுதங்கள் பொருந்திய திகிரி பாய்ந்தது என்று சொல்வ‌து பொய்யாய்ப் போகட்டும் என்கிறது பாடல்.

இத் திகிரி வட்டமான ஓர் ஆயுதம்.  சக்கரம் அல்லது ஆழி எனவும் படும்.
பொன் புனை திகிரி என்றதனால்  அந்த வட்டக்     கருவியுடன்  வேறு
இரும்பு ஆயுதமும் பூட்டப்பெற்று விடப்பட்டது என்று அறிகிறோம்.  தமிழர்கள் போரிட்ட ஆயுதங்களின் மாதிரிகள் ஏதும் இதுபோது எங்கும் காட்சிக்குக் கிடைக்கவில்லை. கிட்டினால் அவற்றை எட்டுங்கள்.  பொன் என்பது இரும்பை.  தங்கம் எனப்படும் பொன்னினும் பெரிது இரும்பு. அதானால் அதற்கு இரும் பொன் (பெரும்பொன்) என்ற பெயர் வந்தது.
இதுபின் இரும்பு என்று இறுதி குறுகிற்று என்பது அறிக.   இரு  - ‍ பெரிய‌

 இது புற நானூற்றுப் பாடல் 233.  பாடல் இப்போது:

பொய்யாகியரோ பொய்யாகியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள்  அகுதைகண் தோன்றிய‌
பொன்புனை திகிரியின் பொய்யாகியரோ
இரும்பாண்  ஒக்கல் தலைவன்  பெரும்பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என‌
வைகுறு விடியல் இயம்பிய குரலே


திகிரி விடப்பட்டால் சுற்றிக்கொண்டு போய் எதிரியைத் தாக்கும். அதில் வேறு பொன் (இரும்பு) புனையப்பட்டால் அது சுற்றுவதற்கு ஏற்றபடி அமையவேண்டும். சிறு கோவைகளாக எடையைச் சீராக்கிப் பொருத்தினாலே சுற்றும். "திகிரியின் பொய்யாகியரோ" என்றதனால், இந்தப் பொய் போல, எவ்வியின் ,மறைவுச் செய்தியும்   பொய்யே ஆகுக  என்பார் புலவர். " திகிரியின்" என்பதற்கு இது பொருளாகும்.


திகிரி பற்றிய கூற்று பொய்யானது போல எவ்வியின் மறைவும் பொய்யாகுக‌

 An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss   

cannot edit. will do later.