புதன், 11 நவம்பர், 2015

மரா மரா மரம் தமிழென்று,,,,,,,,,,,

வான்மீகியார் தம் இராம காதையைத்  தொடங்கும்போது  ராமர் ஆண்ட நகராக  எந்த நகரைக் கூறுவதென்பது ஒரு தீர்வுக்குரிய பொருளாக வந்து முன்னின்றது.  ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் எந்த எந்த நகரங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் எது ராமரின் நகர் என்பதும் சிந்திக்க வேண்டியவாயின, .

முனிவர் வான்மீகி வாழ்ந்த நகருக்கு  அல்லது காட்டுக்கு  அது  அயல்  ஆயிற்று  ஆகவே அயல் என்பதை வைத்துக்கொண்டார் முன் இராமர் ஆண்டதாகக் கொள்ளப்படும் எந்த நகருக்கும்  அது அயலே ஆகும்.  ஆனால் அந்த நகர் அவர்  கதைக்கு ஒத்து வரவேண்டும்  ஆகவே    ஒத்து என்ற  சொல் தேர்வு செய்யப்பட்டது. 

 அய(ல்) +ஒத்து  + இ  -  அயோத்தி  என்ற சொல் பிறந்தது.

இராமனின்  நாடு  நகரம் முதலானவற்றுக்கு  அயலானதும்  ஆனால்  ஏனை  எல்லா  முறையிலும்   அவற்றை  ஒத்துமிருக்கும்  இடம் என்று பொருள்,  இறுதி  இ விகுதி   சொல்லிறுதியாகவும்  இடம் என்றும் பொருள் தரும்,

நாட்டை விட்டுக்   காடு சென்றோனுக்கு  நாடு அயல் என்பதும் குறிப்பு,  அவனில்லாத போதும் அவன் இருப்பதை ஒத்த  ஆட்சி  என்பது  "ஒத்து"  என்பதன்  அடுத்துவரு  குறிப்பு.   

அயல் என்பதை அய என்று  வெட்டியது சரிதான்.   பயல்  பய என்றும் வயல் வய என்றும்  தமிழ்ப் பேச்சில் வருதலால்  அய என்ற வடிவத்தையே மேற்கொண்டு சொல்லைப் படைத்து ஒரு நகர்ப் பெயர் ஆக்கினார். நிகழ்வுக்கு  அயலான  நகராயினும்   இராமகாதைக்குரிய  அசலிடத்துக்கு  முற்றும்  ஒத்த நகரம் .  

வால்மீகி ஒரு தமிழன் தான்.   வால் என்றால் தூய்மை;  மிகு +  இ    = மிகி  ஆயிற்று. தூய்மை மிக்கோன் என்பது பொருள். இவர்  ஒரு  சங்கப் புலவர்.

வால் மிகி   என்பதைத் தமிழில்  பொருளுரைத்தால்  ஓர் உன்னதப் பொருள்  கிடைக்கிறது.   சரி,  கிருதத்தில்  பிரித்துப் பார்த்தாலும்  " வளர்ந்த புற்றில்  அமர்ந்த  மேதை "  என்று  உயர்ந்த பொருள்தானே வருகிறது  என்று  வாதம் செய்யலாம்.   கதைப்படி  அவர் பிறந்தது  "பால்மிக்கி"   ( வால்மிக்கி)   என்ற  முன்னரே  அந்தப் பெயருடன் விளங்கிய ஒரு காட்டுச் சாதியில்.   அவர்களுக்கு எப்படி அந்தப்பெயர் கிட்டியது?  அவர்கள் எல்லோருமா  புற்றில் கிடந்து  அந்தப் பெயர் பெற்றார்கள்?   பின்புதான் சாதிப்பெயர் என்றால்  இத்தகைய ஓர்   உலகப் புலவனைத் தந்த கூட்டத்திற்கு  வால்மிகி   என்ற காட்டுச் சாதி  என்ற தகுதிதானா பரிசு ?   காட்டில் அவர் படித்ததாக  புலமை பெற்றதாக  எந்தச் செய்தியுமில்லை. கடவுள் அருளால் எழுதினார் என்பது  நம்பிக்கையாகலாம்  ஆனால்  வரலாற்றுச் செய்தியாவது எப்படி   -----  என்றெல்லாம்  கேள்விகள் எழலாம்  

வட இந்தியாவில் பால்மிக்கி என்றொரு காட்டுவாசிக் கூட்டம் வாழ்ந்து வந்தனர்.   இவரை அந்தக் கூட்டத்துடன் தொடர்புபடுத்திக் கதை புனையப்பட்டது.   அவருடைய  நூலிலும்  இடைச்செருகல்களைச் செய்தனர்.

மரா மரா என்றால் ராம ராம என்று வந்துவிடும் என்றனர்.
மரம் என்பதே தமிழென்று தெரியவில்லை?


முதலில் அது தமிழில் எழுந்து பின் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.  தமிழ் மூலம் அழிந்தது.அப்போது எழுத்துள்ள மொழி தமிழ்மட்டுமே.

சீதையைக் கடத்த அண்மையில் உள்ள தமிழ் நாடே மிக ப்
பொருத்தமான இடம். புட்பக விமானம் எல்லாம் கதை.

சீர் >  சீ>  சீதை.

பின் சீதை  >  ஸ்ரீ தை  >  ஸ்ரீதா.

இராமாயணத்துப் பெயர்கள் பலவும் காரணப்பெயர்கள்.

http://sivamaalaa.blogspot.sg/2015/11/valmiki-and-his-mother-tongue.html

செவ்வாய், 10 நவம்பர், 2015

vAlmiki and his mother tongue,

இந்தப் பெயர்களைப் பாருங்கள்:

இர்  >  இராமர் >  ராமர்.
இர் >   இரா வண்ணன் > இராவணன் >  ராவணன்.
விழு + பீடு + அணன் >  வி + பீடணன் = விபீடணன்.>  விபீஷணன் 
கை கேசம் இ  > கைகேசி >< கைகேயி.
ஆழ்ந்த நேயம் >  ஆழ்ந்தநேயர் >  ஆஞ்சனேயா
ஆய்ந்த நேயர் > ஆஞ்ச நேயர்  என்றும் வரும்,  
ஆய்ந்த =  தேர்ந்தெடுத்த;  "  ஆய்மயில் கொல்லோ?":  குறள். 
மரை  ​+ ஈசன் =  மரையீசன் >  மாரீசன்   ;  மரை -  என்பது மான்  தமிழ்.
இறைவர் >  இஷ்வர் > ஈஷ்வர் > ஈசர் /  ஈசன் 

காட்டு வாசியான வால்மீகி  பிராமணர் அல்லர் .  பால்மீகி >  வால்மீகி  என்பது  ஒரு  தாழ்ந்த சாதியின் பெயர்,   அன்று உயர்வானவர்களாய்  இருந்தனர்!?  இதில்  நமக்குக் கவலை இல்லை.  அவர் என்ன மொழி பேசினார்?   சமஸ்கிருதம்  பேசினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  சமஸ்கிருதத்தை  அவர்தம் காட்டுவாசிக் குடும்பம் பேசியதா?

அண்மைக் காலம்வரை பல்வேறு  திராவிட மொழிகள் வட இந்தியாவில் வழங்கி  வந்தன.  இவை பலுச்சிஸ்தானம் வரை நீண்டு வழங்கின.  எழுத்து  இல்லாத மொழிகள்.  அவற்றுள் பல அழிந்தன.  1970ல் வழங்கின  சில 
இப்போது  இல்லாதொழிந்தன .

இந்த ஆதிப்புலவர் எந்த மொழியில் எழுதினார்?   சம்ஸ்கிருதத்துக்கு அப்போது  எழுத்துக்கள் இல்லையே!.

ஏன் தமிழில் பிரிக்க,  பொருள் கிடைக்கிறது?

இவற்றைக்  கண்டு  தெரிவிக்கவும்.    
   

வேசி சொல்லமைப்பு

வேசி என்ற சொல் ஓர் இழிவழக்கு என்று சொல்லத் தக்கதாகும்.தமிழரிடைச் சிற்றூர்களில் இன்னும் வழக்கில் உள்ள பதம் ஆகும்.  பொருள் பதிந்தது  பதம். பதி + அம்  =  பதம். பதிதல் -  உள்புகுந்து இருத்தல். 

முன் இடுகைகளில் யகரம்  சகரமாகத் திரியும் என்று கண்டோம்.  மயக்கு > மயக்கை>  மசக்கை  என்பது  முன் இடுகைகளில் நீங்கள் கண்டவற்றுடன் கூடுதல் ஒன்றாக வைத்துக்கொள்க.

வேய்தல் என்றால்  மேல்  போடுதல் ;   மேல்  அணிதல் .  மேலிட்டுக்கொள்ளல்.  .  கூரை வேய்தல் ஓர்  எடுத்துக்காட்டு.   பொது மகளிர் தங்கள் மேனியில்  வாசனைப் பொருள்களைப்  பூசிக்கொள்வதும்,  அழகிய ஆடைகளை  அணிந்துகொள்வதும் மை இன்மணக் குழம்புகள் முதலியவை பூசிக்கொள்வதும் ஆகியன செய்வர்,  தலையிலும்  கழுத்திலும் மார்பிலும்  கைகளிலும் அணிகள் கூடுதலாகத்  தரிப்பர்   இதனால் இவர்கள் வேய்ந்து கொள்பவர்கள் .  மைவிழியார் மனையகல் என்றாள்  ஔவைப்பாட்டி,

கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி 
எங்கும் இசையுடன்  முழங்க ----  கால்கள் 
தகதிமி தகதிமி தகதிமி தகவென தாளம் போட 
மைவிழி  கைவளை யாட 
மரகத மணி வளை ஆட 
உம்முடன் ஆடுவேன் 
புதுமலர்  சூடுவேன் 
புலவி மன மகிழக் குலவி  அனுதினமும்
புதுமலரணைதனில்  கூடிடுவேன் 

என்பது  கவிஞர்  சந்தானம்  வரைந்த பாடல்.   தேவரடியாள்  தன்    வாடிக்கையாளனிடம்  மலர்க்கணை தொடுப்பவள் என்கிறார்  கவி பாப நாசம்  சிவன் .

ஆகவே :

வேய்தல் >(  வேயி  ) >  வேசி    

என்றமைந்ததே  வரைவின்மகளிரை ( வரம்பு கடந்த மகளிரை ),  பரந்து  ஒழுகும்  பரத்தையரைக்  குறிக்க வந்த  குறைதரம் உடைய சொல்.

வேய்ந்து  மயக்கும் வேயியரை  வேசியர் என்று கண்டுகொள்க .  

இப்போது  மேல் யாம் குறித்த "வரைவின்மகளிர் " என்ற தமிழ்ச்சொல்லை, சமஸ்கிருதத்தில்  எதிர்கொண்டு  மகிழ்ச்சி கொள்வோம்,    வரைவு  =  வரம்பு,  வரையறை.  இல் = இல்லாத,  மகளிர் =  பெண்கள்.  வரைவின்மகளிர் என்பது தமிழில் அமைந்த ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்,  இதை vAravanitA  "வாரவனிதா " என்று   கிருதமொழி  எடுத்துக்கொள்கிறது. இல் என்ற நடுச்சொல்  இல்லையானதுடன், மகளிர் என்பதுக்குப் பதிலாக "வனிதா " என்ற அழகிய சொல் கூட்டப்பெறுகிறது,  வனிதா என்பதும் வனப்பு என்ற தமிழுடன் தொடர்பு உள்ள சொல்.  வாரவனிதா ஈரானிய மொழியில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.

 வேசி  என்ற தமிழ்ச்சொல்லும்  கிருதத்தில் சென்று  பொருதுகின்றது,  இதனால் கிருதவளம்  பெருகுவதாயிற்று,  வேசி  குறிக்க   27  சொற்கள்  கிருதத்தில்        உள்ளன ,
  ஷுண்டா  என்ற கிருதமொழிச் சொல் மலாய் மொழியில் "ஸுண்டால் "  (பொருள்  வேசி )   என்று திரிந்து வழங்கும்.   "பெரெம்புஅன்  சுண்டால் "
என்பர்

ய  -  ச  திரிபு:    கூடுதல்   எடுத்துக்காட்டுகள் 
http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html 

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html