ஞாயிறு, 22 மார்ச், 2015

வனதரையர் ( வல்லெழுத்து மிகாமை)



வனதரையர்  என்பது பழந்தமிழ் நாட்டில்  ஓர்  ஆட்சி அலுவலரின் பெயர்.  இதன்  நிலை மொழியானது (first component in the compound word)  "வனம் " என்பது. இதற்குக் காடு, மரங்கள் செடிகள் முதலியன அடர்ந்த நிலப்பகுதி  என்பது பொருள் -   இது நீங்கள் அறிந்ததாகும்.   இதில் வருமொழி (இணைந்த சொல் )  அரையர்,  அல்லது தரையர்.

அரையர்  : அரசர்  அல்லது  அவரின் கீழ்  ஆட்சியாளர் ,
தரையர் : தரை அல்லது நிலம் உடையவ ர்   நிலத்தை ஆள்பவர்   


வனம் + அரையர் = வனவரையர்  ( This is correct outcome but the compound word that comes down to us is not in this form). 

வனம் + அரையர் =  வனத்தரையர் .   இதில் அத்துச் சாரியை உள்ளது.  ஆனால்  வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம். (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ).

வனம் + தரையர் =  வனத்தரையர் >  வனதரையர்  (வல்லெழுத்து  மிகுவதால்,  அதைத் தொகுத்து,  வனதரையர்  என்று கொள்ளலாம்.) (கல்வெட்டுக்களில்  இங்ஙனம்  ஒற்றுக்கள்  விட்டு  வருவதுண்டு ). Saving space and labour  in  making stone tablets.)

This term is South Indian and from Tamil  country.  Not Skrt.

வன திரையர் என்று கொண்டாலும்  இத்தொடர்  வலிமிகாதே  பேச்சிலும்  எழுத்திலும்  தோன்றுகிறது.  The same problem manifests itself and the explanations here will apply

திரை என்பது  கடலலையையும்  ஆகுபெயராய்க் கடலையும் குறிக்கும் என்ப .  ஆகையால்   திரையர் என்போர்,  1. கடலாட்சி செலுத்தியோர் என்றோ,  2. கடலுக்கு  அப்பாலிருந்து தென்னிந்தியா / தமிழ் நாட்டுக்குள்  குடியேறியோர்  என்றோ பொருள் படுமென்று  வேறுபடக் கூறுவர்.  நாகரென்று சிலர் ஐயுறுவர்.   இதனுள் யாம் செல்லவில்லை.  வலி மிகுமா  மிகாதா  என்பதும்  மிகுமாயின்  ஏன் சொல்லில் தோன்றவில்லை என்பதுமே இங்கு ஆயப்பட்டது. 

லகரம்   னகரமாய்த்  திரியும்;   இதற்குப் பல எடுத்துக்காட்டுகள்  உள;  ஒன்று:  மேல  > மேன .  தொல்காப்பியச் சொல்.   வலம் என்பதே வனமென்று திரிந்ததென்று கொள்ளலாம்     அங்ஙனமாயின்  போரில் வலிமை காட்டிய என்று பொருள் படலாம் .]\

வெள்ளி, 20 மார்ச், 2015

நேர்ந்துகொண்டு கிடை த்த வெற்றி

சிங்கப்பூர்க்  கெல்லாம் சிறப்பாய் முடிந்ததுவே 
தங்கநிகர்  இத்தீவைத்  தானையர்மேற்  கொண்டதிலை;
தேர்ந்தெடுத்த  ஆட்சியே  தேற்றமாய்  நிற்கவெற்றி 
நேர்ந்துடுத்த காப்பாய் நிலை


கடவுளிடம் வெற்றிக்கு  நேர்ந்துகொண்டு கட்டிக்கொண்ட காப்புக்கு  வெற்றி   கிட்டியது போல் ,   யாவும் நிலைபெற்றது.

தனையர்  -   படைத்தலைவர்.   (இராணுவ  ஆட்சியைக் குறிக்கிறது  ) .   

நேர்ந்துகொண்டு  கிடை த்த வெற்றி , 

லீ குவான் யூவிற்கு முந்திய சிங்கப்பூர்

நகரத்தில் உள்ள  கல் கட்டிடங்களில்  தண்ணிர்ப் பகிர்வு முறை இருந்தது  வீட்டிற்குக் குழாய்களின் மூலம் தண்ணிர்  தரப்பட்டது.  இவ்வீடுகளில் பெரும்பாலும் ஒரு கிணறும் இருக்கும்/    மக்கள் இரண்டையும் பயன் படுத்தினர் என்று சொல்கிறார்கள். பின்பு என்ன  ஆயிற்று என்று தெரியவில்லை.  கிணறுகள் மறைந்து குழாய் தரும் நீர் மட்டுமே பயன்பாடு கண்டது,

தண்ணிர் அடைப்பு திறப்புக் கருவிக்கு பீலி என்று சொல்வார்களாம்.  இது என்ன சொல் என்று தெரியவில்லை.  பொதுக் குழாயடிகளும் இருந்தன.  லீ வந்தபின் இந்தப் பொதுக் குழாய்களில்  தண்ணிர் இலவசமாகப் பெறும் முறை மறைந்து விட்டது ,

கழிவறைகளில் தண்ணீர் இழுக்கும் தூய்மையுறுத்து  முறை பலவிடங்களில் இருந்தது.  இதனை "இழுப்புக் கக்கூஸ்"  (flush toilets)  என்பர்.  ஆயினும் எடுப்பு முறையும் இருந்தது (  எடுத்து அப்புறப்படுத்தும் முறை. ) சிற்றூர்ப் புறங்களில் (kampongs or villages) பெரும்பாலும் எடுப்பு முறைதான்.

கழிவு வாயுவில்  (coal gas with methane ) எரியும் தெருவிளக்குகள் இருந்தன. மின் தெரு விளக்குகளும் இருந்தன.போக்கு வரத்து விளக்குகளும் இருந்தன   காவலர் கையசைவுகளால் வண்டிகளுக்கு வழிகாட்டும் முறையும் இருந்தது.

லீ ஆட்சி அமையுமுன்பே சிங்கை,  நகரம் என்னும் தகுதியைப் பெற்றிருந்தது. ஒரு  நகர அவையும் அவைத்தலைவரும் (mayor) இருந்தனர்.  நகர உள்ளாட்சி   (local government) முறை இருந்தது.

But there were not many flats in Singapore as you see today.

சிங்கப்பூர்  நகரத்திற்கு எல்லைகள் வைத்திருந்தார்கள்.  அந்த எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளை Outside city limits
என்று  குறிப்பிட்டார்கள். உதாரணமாக தெம்பெனிஸ்  வட்டாரம் நகர எல்லைகளுக்கு அப்பாற் பட்ட பகுதியாகும்.  இவ்வெளிப் பகுதிகள்  மாவட்ட அவைகளினால் (district councils)  ஆளப்பட்டன.  நகரப் பகுதிகளை  நகர அவை (municipal or later city council ) பார்த்துக்கொண்டது.  நகர  அவைஞர்கள் ( கமிஷனர்கள் பின்னர் ) city councilors  எனப்பட்டனர்.  உள்ளாட்சிக்கு ஒரு மந்திரி இருந்தார்.