டி. ஆர். மகாலிங்கம் டி. ஆர். ராஜகுமாரி. (இதய கீதம்).
======================================================
இவர்கள் பாடிய ஒரு பழைய பாட்டு மிக்க இனிமையாய் இன்னும் விரும்பப் படுவதாய் உள்ளது. அந்தப் பாடலைக் கம்பதாசன் என்னும் புகழ்பெற்ற கவிஞர் எழுதியிருந்தார். பாடல் வருமாறு:
X :வானுலாவும் தாரை நீஎன் இதய கீதமே.
Y :ஆனந்தமே என் ஜீவனாகும் இதய கீதம் நீயே.
X:அழகாய் அலைமோதும் கடலின் அமுதமாகும் உன் மொழியே.
Y:ஆசை ஜோதி வீசும் அருணோதயம் உன் விழியே.
X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.
X: வீசும் தென்றல் காற்றினிலே
விந்தை மேகம் போலே!
Y: நீல வாவி மீதே
நீந்து மனம் போலே.
X: காதல் நாடும் வண்டின்
கான இன்பம் போலே
X & Y: ஆனந்தமாக நாமே அன்பாகப் பாடுவோமே.
வாழ்விலே நம் ஜீவ பாக்கியம் இதய கீதமே.
இதிலுள்ள கருத்துகள் ஆழ்பின்னலாக இல்லாமல் எளிமையாகவே உள்ளன.
திரைப்பாடலுக்குரிய தெளிவுடன் உள்ளது. இந்தப் பாடல் கிட்டினால் கேட்டு மகிழுங்கள்.
இதில் பிழைகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றியுடன் திருத்திக்கொள்வேன்.