செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

விசுவ நாதன்

.

விசு > விசும்பு  (ஆகாயம்)

விசு என்பதே அடிச்சொல்.

விசு எப்படி அமைந்தது என்பதைக் கூறுகிறேன்.  பின்பு.

நுணுகி ஆய்ந்தால், விசும்பு  என்ற வெட்டவெளியில் உலகம் உள்ளது. பல கோடி யண்டங்களும் உள.

விசு என்ற அடிச்சொல்லை எடுத்து உலகம் என்பதற்கு ஒரு சொல்லை உண்டாக்கியதும் அறிவுடைமையே ஆகும்.

விசு > விசு + அம் >  விசுவம். விசுவம் > விஸ்வ(ம்).

மனத்தில் இருப்பவன் கடவுள். மனத்திலேயே இருந்துவிட்டால் எப்படி? நாவில் வெளிப்படுகிறவன். இயல்பாகவே அதுதான் நடக்கும். கண்ணில், காதில் வெளிப்பாடு  காண்பானோ? மக்களிடையே அவன் நாவில் வெளிப்படுவான்.
மாய ஆற்றல்களை உடையோனிடம் மற்ற இடங்களில் வெளிப்படுவானேல், அது  இயற்கையை மிஞ்சியதாகும். நாம் அதைப்பற்றிப் பேசவில்லை.

தன் நாவில் வெளிப்படுவான்:  தன் + நா ( முறைமாற்றி )  நா+தன் = நாதன்.
நாவில் வருவது அடிப்படை நாதம்.  மற்ற நாத வெளிப்பாடுகளை அறிவு முற்றிய நிலையில் மனிதன் அறிந்தான்.
நாவினின்றும் (கூப்பிடுவதே)  நாமம் ஆகும்.

விசுவ நாதன் என்றால்,  விசும்பிலும் உலகிலும் உள்ளான், உங்கள் நாவில்  வெளிப்பாடு காண்கிறான் என்பது.

நாதன் நாமம் நமச்சிவாயவே . ஒரு பேரும் ஓர்  ஊருமில்லாதவன் அவனை நாமத்தால் நாவினால் கூவி அறிகிறோம்.   

தஞ்சைப் பெரிய கோவில் பெருவுடையார்

அரசர்க்கரசனான இராஜராஜன் கட்டியது தஞ்சைப் பெரிய கோவில். அது பின் பெருவுடையார் கோவில் எனப்பட்டது.  இது பெரிய கோவிலென்பதை வேறு  சொற்களால் புனைந்தமையாகும்.

பெருமை + உடையார் > பெரு+ உடையார் > பேருடையார் என்று இலக்கணப் படி சென்றால், வேண்டியவாறு சொல் அமையவில்லை. மேலும் பெயர் என்ற சொல்லும் பேர் என்று திரிவதால், இலக்கணம் இங்கு உதவவில்லை.

பெரு என்பதை பேர் என்று திரிக்காமல், பெரு என்றே நிறுத்தி  உடையார் என்பதற்கு வகர உடம்படு மெய் கொடுத்து அமைத்தது ஒரு சொல்லாக்கத் திறம்தான். இச்சொல் அமைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்.

பெருவு > பெருவுதல் என்றோரு சொல் உண்டு. பெருவுதல் என்றால் உறக்கத்தில் பேசுதல். பெருவுடையார் என்பதில் வரும் பெரு வேறு, பெருவு வேறு.

இராமேஸ்வரம்

ஈஸ்வரன்  என்ற சொல் அமைந்த விதம் எளிமையானதே.

இறைவர் என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து, "றை"க்குப் பதில் ஷ்  அல்லது  ஸ் போடுங்கள்.  இகரத்தை ஈகாரம் ஆக்குங்கள்.

இறைவர் >  ஈஷ்வர் அல்லது ஈஸ்வர்.

இங்கு பலர்பால் அர் விகுதி  இருப்பது காணலாம்.

ஒருமை அன் விகுதியின் மேல் பணிவுப் பன்மையாகிய பலர்பால் அர் சேர்வது
பரவலாகக் காணப்படுவதொன்று. எ‍ டு:

இறையன் > இறையனார்.

இங்கே மாற்றமாக, அர் மேல் அன் சேர்ந்து ஈஸ்வரன் என்ற சொல் அமைகிறது.

இங்ஙனம்  "ஈஸ்வரன்" என்பதமைந்தது.1

அர் விகுதியின்மேல் அம் விகுதியும் சேரும்.

இராமேஸ்வர் > இராமேஸ்வரம்.