புதன், 14 மே, 2014

காலாடி

கைப்பொருள் உள்ள /காரணத்தினால் வாங்கித் தின்னும் கூ ட்டாளிகள்  அதிகமாகி  வீணே ஊர் சுற்றிக் காலம் கழிப்பவனைக்  "காலாடி"  என்று சொல்வர் .   நேரம் இருப்பதனால் வீண் சண்டைகளிலும் ஈடுபடுவான் .

" காலாடு போழ்தில் கழிகிளைஞர்  வானத்து
மேலாடு மீனிற் பலராவர் "

என்ற நாலடியாரில் வரும் பாட்டினால் "கைப்பொருள் உள்ளவனையே "  இச்சொல் குறித்த தென்பதை அறியலாகும்.

காலாடுதல்  =  கையில் காசு உள்ளவனாய் .இருத்தல்.

இப்பொருள் இழிந்து இப்போது "rowdy person"  என்று பொருள் தருவதாய் உள்ளது.  கைப்பொருள் பற்றிய பொருண்மை மறைந்து விட்டது ..  

உருவம்

உருவம் என்பது ரூபம் என்று மாறி.   இறுதியில் ரூப என்றானது.

அ, இ,உ என்று முச்சுட்டுக்களில், என்பது முன் தோன்றுதலையும் குறிக்கும். பிற அர்த்தங்களும் உளவெனினும் அவை இப்போது கிடக்கட்டும்.

உருத்தல் ‍ : ‍  முன்  தோன்றுதல்.


"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"
( சிலப்பதிகாரம் ).

உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.

வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி,  ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.

பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.

இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!

செவ்வாய், 13 மே, 2014

மாரீசன்

மாரீசன் மான் ரூபம் எடுக்கிறான்.  அதாவது மானுருக் கொள்கிறான். மான் மரை என்பன உங்களுக்குத் தெரியும்.

மரை + ஈசன் =  மாரீசன்.

மரைப்பெயர் கொண்டோன்.

இறைவன்  >  இ ஷ் வர்  > ஷ்வர்.  றையை எடுத்துவிட்டு, ஷ் போட்டுவிட்டால், வேறுலகத்தில் போய்விட்டதுபோன்ற‌ உணர்வு,

ஈஷ்வர் > ஈஸ்வர் >  ஈசர் > ஈசன்.

மரை+  ஈசன் =  மரையீசன் என்று வரவேண்டும் என்பார்  தமிழ்வாத்தியார்.
இந்த வாத்தியாரை வேலைக்கு வைத்தால்  புதுமொழியையும் புதுச்சொல்லையும் எப்படி அமைப்பது?

ஆக வான்மீகியாரே  சொந்தமாகப் படைத்துக்கொண்டார் வேண்டிய சொற்களை.

மகிழ்ச்சிக்குரிய செய்தி ........