murugan adi
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர் மிசை = மலர்க்குன்று எனினும் ஆம்.
TWD19082006@@14#
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இப்போது மேற்கண்ட குறளுக்கு வேறொன்று உரையாகக் கூறுகிறேன்:
மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப் பொருளில்).
மிசை = குன்றில் (அல்லது மலையில்). மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்).
ஏகினான் = ஏறியவன் , = முருகன்;
மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார்.
நிலமிசை - உலகில்,
நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி.
முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் ("கடம்பமர் செல்வன்") பொருநராற்றுப் படையிலும் ("கடம்பமர் நெடுவேள்") என்று வருவதனால்., அவன் "மலர்மிசை ஏகினான்" என்று திருக்குறளில் குறிக்கப்படுகின்றான் என்பது ஒப்பு நோக்கின் தெளிவாகிறது.
அமர்ந்தான் எனில் அது மேலிருந்தான் என்று பொருள்படுவதாம். இதற்குச் சூடினான் என்று பொருள் கூறுவது பொருத்தமாயின், "மிசை ஏகினான்" என்ற திருக்குறள் தொடருக்கும் "சூடினான்" என்றெ பொருளுரைத்தலில் இழுக்கொன்றுமில்லை.