புதன், 16 ஏப்ரல், 2014

உத்தரவு

 இச்சொல் தமிழன்று என்று சொல்வாருமுண்டு.  

இச்சொல் வேற்று மொழி அகராதிகளிலும் இடம் பெற்றிருந்திருக்கக் காணப்பட்டமை ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு சொல் எங்கு தோன்றியிருப்பினும் அது வழங்கும் மொழிக்குரியதாக எடுத்துக்கொள்வதும் ஒரு வழியாம். எ - டு   காவல் என்பது தமிழ் ஆயினும் அது மலாய் மொழியிலும் தனியாகவும் முன்னொட்டு பின்னொட்டுகளுடனும் வலம்  வருகிறது. வழக்கின் காரணமாய் அதுவும் மலாய்ச் சொல் ஆகும். மற்றும் அது தமிழ்ச் சொல்லும் ஆகும். தமிழில் தோன்றி வழங்கியும் வருகிறது.  இப்படி  முறைப்படுத்துவதில் தவறில்லை.  இது  நிற்க.

அ ,  இ, உ  என்பன தமிழ்ச்     சுட்டுகள்.  இவற்றுள் உ என்பது முன்னிலை குறிப்பது.

தரவு  =  தரப்படுவது.  தரு+ வு  = தரவு  ஆகும்.  ஒப்பீடு: வரு + வு > வரவு.

 ,முன்னிலையாய் உள்ளவர் தருவதே உத்தரவு ஆகும்.

இது தமிழன்று என்பதற்கு காரணம் ஒன்றுமில்லை. கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் இல்லாமல் இருக்கலாம். அது சரியான காரணமன்று.
இப்படியான இலக்கியங்கள்  உலகின் பல மொழிகளில் இல்லை.

வந்தனை

வினைப் பகுதியிலிருந்து தொழிற் பெயர்களை அமைத்தலே தமிழ் முறையாம். ஆனால் பிற மொழிகளில் எச்ச வினைகளிலிருந்தும் (1)  பெயர்ச் சொற்களை அமைப்பதுண்டு. இப்படித் தமிழில் அமைந்தவை ஒரு சிலவே ஆம். இதை நாம் முன்பே அறிந்துள்ளோம்.

ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார் என்றால், "வா'ங்க வா'ங்க" என்போம். செய்யுள் நடையில் "வந்திடுவீர், வந்திடுவீர் "  என்றோ "வருக வருக"   என்றோ சொல்லும் பழக்கம் பெரும்பாலும் நம்மிடம்  இல்லை எனலாம்.
 எங்ஙனமாயினும் வந்தவரை  வணக்கத்துடன் அழைக்கும் பண்புடையார்  தமிழரெனின் மிகையன்று.

 இப்பண்பு பிறரிடத்து இல்லையென்பது பொருளன்று .

இப்போது விடையத்திற்கு வருவோம்.

வந்திடுக என்பதே "வந்தித்தல்" ஆகும். வருமாறு வணங்கி ஏற்றுக்கொள்ளல்.

வந்திடு > வந்தி > வந்தித்தல்.
அல்லது  வந்து > வந்தி > வந்தித்தல்.

இரண்டும் ஒன்றுதான். வந்து என்பது எச்ச வினை. (1)

வந்தி + அன்+ ஐ  =  வந்தனை.
வந்தி + அன்+ அம்  = வந்தனம்.

 அடிச்சொல்  "வா" என்பதே.

"யாம் வந்தோம்" என்பதை "யாம் வந்தனம்" என்று சொல்லலாம். நீவிர்  வந்தீர்  என்பதை "நீவிர்  வந்தனிர் " எனலாம். ஈண்டு வந்தனம் வந்தனிர்  என்பன வினை முற்றுக்கள். இவை அன் சாரியை பெற்றன.

வந்தனம் என்பது அமைந்த விதமே இங்கு கூறப்பட்டது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.  ---- பாரதி.


மிதம். meaning moderation, medium

மிதம் என்ற தமிழ்ச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய பிறவற்றையும் காண்போம்.

மிதத்தல் என்பது கனமற்ற  பொருள்கள் நீரில் மிதப்பதை குறிக்கும்

.குறிக்கவே,  அதன்கணிருந்து  தோன்றிய மிதமென்பது,  கனம் குறைவானது, என்பதைக் குறித்து, பின்பு கூடுதலாக இல்லாத எதையும்  குறிப்பதாக விரிவடைந்தது. அதன்பின், கூடுதலுமில்லை,  குறைவுமில்லை, நடுத்தரமென்று கணிக்கத் தக்கது என்னும் பொருளை இறுதிவிளக்கமாய் வந்தடைந்தது.

மித + அம் = மிதம்.

மித  என்ற சொல்லில்  இறுதியில்  அகர உயிர் நிற்கின்றது.  மி+ த்  + அ.
அம் என்ற விகுதியில்   "அ" இருக்கிறது.
ஆகவே, ஓர்  உயிர்எழுத்து (அ) தவிர்க்கப்ப‌டும்.


மிதமாகவே உண்டால் நீச்சலின் போது நன்கு மிதக்கலாம்.

சில சொற்கள் தங்கள் அடிச்சொல்லின் பொருளினின்று சற்று    விரிவு அடையும்.

எடுத்துக்காட்டாக ஜாதி என்ற சமஸ்கிருத வடிவச் சொல்லைப பாருங்களேன்.  சமஸ்கிருதப் பண்டிதன்மார்  ஜா - பிற  be born  என்ற அடியில் தி விகுதி சேர்ந்து சொல்லமைநதது  என்கிறார்கள்.  அப்படியானால் அது பிறப்பு  என்று மட்டும் பொருள்படவேண்டுமே!   A group of people of a certain occupational  class, who became members of that class by birth and who are not allowed to change their membership of that class during their lifetime  என்று பொருள்  அழகுடன் .விரியவில்லையா  .........இதைத்தான் பொருள்விரி என்கிறோம்.

will revise. text editor too slow.