திங்கள், 14 ஏப்ரல், 2014

சிலை

இனிச்  சிலை என்னும் சொல்.

மனிதன் கல்லைச் செதுக்கிச் சிலைகள்  செய்யத் தொடங்கிய காலை அவை சிறியவையாய் இருந்தன. நன்கு திறன் மற்றும் செய்பொருட்கள் பெற்ற பின்பே பெருஞ் சிலைகள்  உருவாகின.

பெரிய சிலைக்குப் பெரிய கல் வேண்டும். தூக்க  ஆள் வேண்டும்.   தூக்குவோரையும் சாப்பாடு  போட்டுக் கவனித்துக்கொள்ளவேண்டும். செதுக்கப் பலர் வேண்டும் . சிறியதில் தொடங்கியதே "இயற்கை".யானது  மாமன்னர்கள் துணையின்றி  எப்படிப் பெருங்கற்களை, மற்றும்   பாறைகளைக்  கொணர்வது?

கண்ணகி சிலை  சமைக்க ஒரு பெரும்படையே போயல்லவா கல் கொண்டு வந்தது?

சில்  என்ற சொல்  சிறுமை குறித்தது  கண்டோம்.

ஆகவே  சில்   + ஐ  = சிலை   ஆனது.

பின் அது பெரிதையும் குறித்தது.

----------------------------------------------------------------------

குறிப்பு:-  சிலை என்பதற்கு வேறு  பொருள்களும் உள.



ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மக்களை ஏய்த்துவிட்டு....

மன்னரை வீழ்த்திவிட்டு
இன்னரும் மக்களை ஏய்த்துவிட்டு
படைத்தலைவர்  பாராண்ட  கதை
புவி எங்கும் புலப்படுகின்றது!
அன்று நடந்தது
இன்று  நடவாதென்று
கூறுவரோ யாரேனும்!
நாட்டுக்கொரு தலைவிதி உண்டோ?
இருந்தால்
நடந்தே  தீரும் அதன்படி
விதி என்றொன்று இல்லை என்றாலும்
நடப்பது நடக்கும்
நடந்த பின் நல்லோர் வந்து
புலனாய்வு பலசெய்து
சட்டத்தை மீறிய சண்டாளனை
தண்டிக்க  முயல்வதுண்டு!

நல்லதே நான் செய்தேன்!
நானா சண்டாளன்?
நானெப்படிக்  குற்றவாளி ??

சட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதுதான்
ஒரு கலையாயிற்றே!

மன்னர் ஆட்சி ஆயின் என்ன?
 மக்கள் ஆட்சி ஆயின் என்ன?

ஓட்டை இல்லாத சட்டம்
உலகில் இல்லையே!\\

https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#allposts

சீனி

சீனி என்ற தமிழ்ச்சொல் தமிழ் நாட்டில்  மெதுவாக மறைந்துவருகிறது போலும்.  தமிழகத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் sugar என்கிறார்கள்.  இனிப்பு  நோயாளிகளும் sugar ஏறி விட்டதென்று சொல்வர்.

சீனி என்ற சொல் எப்படி வந்தது  அறிந்தால்,  ஒருவேளை அச்சொல்லை மிக  விரும்பிப்   பயன்படுத்துவரோ என்னவோ`!

எதற்கும் நாம் அதை அறிந்துகொள்வோம்.

கற்கண்டு சற்று பெரிய கட்டிகளாக வருகின்றது.  சீனி  தூள் செய்யப்பட்ட கற்கண்டு தான். ஆகவே அது சிறு துகள்களாக இருப்பது.

இதுவும் சில்  அடிச்சொல்லிலிருந்து வருகிறது என்பர். Pl see chinthu and chillaRai , previous posts.

சில் >  சின் >  சீன் > சீனி .

சின்னவன் சின்னப்பன் முதலிய சொற்களில் சில் > சின் என்று திரிகிறது.

சின்  > சீனி   {முதனிலை நீண்டது.).

இதுபோன்று முதலெழுத்து நீண்ட சொற்களைப் பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள்.

இங்ஙனம்  அன்றி ,  தமிழறிஞர் க. ப  மகிழ்நன் (    K.P. Santhosh )  (1948)    இது  சீனாவிலிருந்து வந்தமையால்  சீனி என்று பெயர் பெற்றது என்கிறார். இந்தப் பிற்கால ஆய்வினை அவர் அறிந்திருக்கவில்லை.

இரண்டு வகையிலும் பொருத்தமாய் அமைந்தது இச்சொல்.  சில வகைக் காய்கறிகள், சிறிய உருவில் இருப்பதால் சீனி என்ற அடைமொழி பெற்று குறிக்கப்பட்டன.  ஆனால், சீன வெடி, சீனாக் கற்கண்டு, சீனத்துக் கிளி
என்ற சுட்டுகைகளையும் கவனிக்கவேண்டும்.

Neither is wrong.