ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

தத்து

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.

தன் + அது =  தனது.

ஒரு குழந்தையைத் தனது ஆக்கிக் கொண்டனர் அந்தத் தம்பதியர்.

ஒரு குழந்தையைத்  தனதாய் எடுத்துக்கொண்டனர்.  ""     "" .


இந்த வாக்கியத்திலிருந்து  ஆய்வைத் தொடங்குவோம்.

தன்  + அது
தன்  +  து.
த      + து.   =  தத்து.

தத்து  என்ற  சொல்லில்   னகர ஒற்றும் அ எனும் எழுத்தும்   மறைந்தன.

அகரச் கட்டு  மறைவது பல சொற்களில் உண்டு.

உடையது  :    உடைத்து.

"அன்பும் அறனும் உடைத்தாயின் ......."  குறள்.  உடைத்து என்பது இலக்கியத்தில் காணப்பெறும் வழக்கு.

அது என்பதில் அ ,  சுட்டு, து என்பது அஃறிணை ஒன்றன்பால் விகுதி.

தத்து என்ற சொல்லமைப்பில் சுட்டு தேவையில்லை.  இங்கு எதையும்  சுட்டி  அடையாளம் காட்டவில்லை.  It has been rightly discarded.

தன்  என்பது   "தற்"   என்று  புணர்ச்சியில் திரிதல்.  எ-டு   :  தற்காலிகம்,   தற்காலம், தற்போது,  தற்பவம், தற்சமம்   எனப்பல. எனவே,  தற்,  >  தத்  என்ற ஒலியுடன் தமிழ்ப் பேசுவோர் ஒத்துப் போகக் கூடியவர்கள்.

தன்  து  >  தற்- து  >  தத்து. இலக்கணம் ஒத்துப் போகாவிட்டாலும்  இந்த ஒலிமாற்றத்துடன் தமிழர் செல்வதில் ஏதும் தடை இருக்காது.

தத்து என்பது பேச்சு வழக்கில் வந்த திரிசொல் ஆகும்,

continued in the  next post.


குறிப்பு:  21.11.2019-ல் காணப்பட்ட மாற்றங்கள் சில
திருத்திச் செப்பம் செய்யப்பட்டன.

"அபராதம்"


இப்போது  "அபராதம்"  என்பதைக்  கவனிப்போம்

அவம் என்பது  அவ > அப  என்று   நின்றது.  அவமாவது கெடுதல் பொருள் தருவதொரு சொல்.

இனி ராதம் எனற்பாலது.

இறுத்தல்  -  "காசு கட்டுதல் "  அல்லது  பணம் கட்டுதல்.

இறு +  அது + அம்  = இறதம்  >  றதம் >  ரதம் > ராதம் .

அது என்பது   சொல்லாக்க இடை நிலையாக  வருமென்பது   பருவதம் (< பரு ), ,   காவதம்  (<கா )  என்பனவற்றில் காண்க. ( இது என்பதும் கொள்க     சுரோணிதம்(<சுர ) கணிதம் (<கணி, கணித்தல் )   )

அப +  ராதம் = அபராதம்  (தண்டம் )  ஆகும். Having to pay a fine is bad for your purse. It is naturally "avam". That's why this word started with "apa-"

இஃது தமிழ் மூலங்களையுடைய ஒரு சொல்.

அவமாகப்  பணம் இறுத்தல் என்பது.

நன்கு   திரித்துப்    புனையப்பட்ட  சொல்.

அவி + அம்  = அவம்  -    முன் இடுகைகளில் காண்க

"அவ இறதம்"  எனில் அஃது ஒரு சொன்னீர்மைப் படாமை அறிக.  "அவவிறதம்"  எனில்  இன்னா ஓசை தரும் .  இவையெல்லாம்  நல்லிசைப்  புலவன்மார் புனைதக்க வல்ல.









சனி, 5 ஏப்ரல், 2014

சாவடி

இப்போது இந்தியத் தேர்தல் வெகு விரைவாக வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லையாவது நாம் ஆராயவேண்டாமா?

அதற்காக நாம் இன்று நுணுகி நோக்கப்போவது  "சாவடி " என்னும் சொல்.  எங்ஙனம் அமைந்தது என்று அச்சமின்றி நோக்குவோம். காரணம் வைப்புத்தோகையை நாமொன்றும்   இழந்துவிட  மாட்டோம்.

சாவடி என்பது தலை போன சொல். அது  கல்வெட்டுக்களில் "உசாவடி "  என்று வந்துள்ளது.  உசாவுதலாவது  கேட்டறிதல்.  அடி என்பது  யாரையும் தாக்கச் சொல்வதன்று .   அடு +  இ =  அடி.  அடுத்துச் சென்று (கேட்டறி)  என்பதாம். அடுத்தல் -  அருகிற் செல்லுதல்.

இதை  முன் ஓர்  இணைய தளத்தில் ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்.  அது இப்போது கைவசம் இல்லை.  இருப்பினும் இதுதான் சொல்லவிழைந்தது ஆகும்.

சாவடி நல்ல தமிழ்ச் சொல்  ஆகும்.

சாவடி என்பது வேறு.  "சாகடி" என்பது வேறு.