வெள்ளி, 28 மார்ச், 2014

சிலேடை

ஒரு பதம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருமானால் அது  சிலேடை என்று கொள்வோம்.
பொருள்தரும் இயல்பு பதத்திற்கு உண்டு.  பொருளானது பதத்தில் பதிந்து உள்ளது.   பதி >  பதம் . பதி + அம்  =  பதம்.  இது இகரம்  கெட்டுப்  புணர்ந்த சொல் . (கெடுதல் -  எழுத்து  அல்லது ஒலி மறைவது.)
இதுபோன்று வினைப் பகுதியின் ஈற்றில் நின்ற உயிர் கெடுதல் மொழி முழுவதிலும் காணப்படுவது.  அறு+அம்  =  அறம்  அறு என்பதன் ஈற்றில் நின்ற உகரம் கெடவில்லை?  அதுபோலத்தான். வித + அம்  = விதம் ,  வித என்பதில் அகரம் கெட்டது. விதந்து ஓதுதல் என்று பழ நூல்களில் வரும்போது just make a note of it.  Vitham :  there is no vitham unless  it is different from another in some special way.

அது  நிற்க.

 சில் > சில . இதில் இறுதியில் வந்த "அ "  பலவின் பால்  விகுதி . வந்தன போயின என்பவற்றில் வரும் அதே அஃ றிணைப் பன்மைதான்.  பல் > பல  என்பனவும்  ஒப்பிடுக .

சில்+எடு +ஐ = (சிலெடை) >  சிலேடை. (ஒரு பதத்திலிருந்து சில பொருள்களை  எடுப்பது  என்பது.) . சிலெடை என்பது சிலேடை என்று திரிந்தது வாயொலிக்க எளிமை .தரல்பொருட்டு .

எடு + ஐ = ஏடை .என்றுமாகும்.   எடு+ஐ  - எடை (வேறொரு சொல் )  என்றும் வரும். இவற்றுள் ஏடை  என்பது முதனிலை திரிந்தது.  அதாவது எகரம் ஏகாரமாய் நீண்டது.  **

ஒப்பீடு:   படு  >  பாடை .  படு+ ஐ என்பதில்  ப > பா என்று நீண்டது.  பிணம் படுக்கவைக்க (கிடத்திவைக்க) உள்ள விரிகட்டு.  படு > படை என்பதில் பகரம் நீளவில்லை. படு படை, படர்  என்பவற்றைப்  பின் காண்போம்.

மொழிக்குச்  சொற்கள் பல வேண்டுமெனில் இந்தத்  தந்திரங்களைக் கையாளவேண்டும்.  We admire those who coined these terms long long ago.

சில் +(எடு + ஐ )=  சில் + ( ஏடை )=  சிலேடை என்று திரிபு இன்றியும் (இரண்டாம் சொல்லில் முதனிலை நீண்டது தவிர ) வரும்.   இதை இயல்பாகக் காட்டலாம்.  எனில் லகர ஒற்று இரட்டிக்கவில்லை.

சிலேடை :   சில பொருள்கள் தரும் பதம் என்பது.  சில = இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட எனற்பொருட்டு)

இது போதும் என்று .நினைக்கிறேன் . Just enjoy the analysis.


**  vishEsham

double click above link.

விசேஷம்  என்ற சொல்லின் முன்னோடியான  விழேடம் என்பதிலும் "எடு "  > ஏடு வந்து,  பின் "அம் "  விகுதியும் பெற்றுச்  சொல் அமைந்துள்ளது.  அங்குக் காண்க.

Notes:

Some typos rectified:  17/2//2019
We have to make such rectifications when data charges are nil or less.


வியாழன், 27 மார்ச், 2014

Traffic Accidents

மனிதனாய்ப் பிறந்துவிட்டால் 
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;

தனியளாய் உந்துதனைத் 
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி 

இனியவா  னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை 

கனிவிழைந்த  வாயிலொரு 
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்! 

நேர்ந்துவிட்ட விபத்தினைச்ச 
மாளிக்க ஒருதிறமை 
வேண்டும்வேண்டும்!

ஊர்ந்துவந்த   வீதியில்கைப்  
பேசிகளில் படமெடுப்பார் 
நடிகை யாமே !

பேர்ந்துவிடும் முகரை எனப் 
பேச்சிலொரு மிரட்டலினை 
விடுப்பார் கேட்டுச் 

சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால் 
சோமனருள் அன்றியொரு 
காவலுண்டோ?   

----    சிவமாலா 

பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .

குறைகள் :  கோபம்,  தேவையற்ற வாய்ப்பேச்சு,  அச்சம்,  ஆயுதமெடுத்தல் 
போன்ற  குறைகள் .  உந்து  -  (கார்),     தக -  நன்றாக;  செலுத்தி-  வண்டியை  ஓட்டி ;   நடிகை  யாமே -   யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால்,  எ ம்மைப்  பட மெடுப்பவர்கள்     camera crew ;    I then become the actress!  !    யாமே நடிகையானோம் என்றபடி.


நீங்கள்  படித்தின்புற  சாலையில்  நடப்பவை  பற்றிய  ஒரு கட்டுரை:

Anger, Social Media and Singaporeans

http://theindependent.sg/anger-social-media-and-singaporeans/ 


(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை;  சிங்கப்பூரில் மட்டுமன்று,   எங்கும்  நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம்   கடைப்பிடிக்கவேண்டும்....  அந்த நாள் வரவேண்டும்.   )                                                                                                                

கண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


(அறுசீர் விருத்தம் )

தண்ணீரில் மிதந்து சென்று 
காற்றொடு மழையில் சிக்கி 
கண்ணீரில் விளைத்த வாழ்வில் 
கால்வயி  றுண்ட மக்கள்
உண்ணீரும் இன்றி வாடி 
உற்றாரை இழந்து கண்கள் 
செந் நீரைச் சிந்தச் செய்தாய் 
சேய்க்கிது தாயின் தொண்டோ?

அமைதியும் வாழ்வும் இன்றி 
அலைந்திட்ட மீன  வர்க்கே 
அமிழ்ந்துயிர் எடுத்துக் கொள்ளும் 
அலைகளோ  பரிசு தந்தாய்?
"இமிழ்கடல் எங்கள் அன்னை"
இருந்தனர் இவ்வா றெண்ணி 
உமிழ்ந்தனை பேர லைகள்  
உயிர்களைக் குடித்தாய் அந்தோ !


இவை சுனாமி சமயத்தில் எழுதியவை .  அப்போது வெளியிடவில்லை, அப்போது கவிதைகள்  பல வெளிவந்தன. துயரை மிகுதிப் படுத்தலாகாது என்று  வெளியிடாமை மேற்கொண்டேன். ஒன்று வெளியிடவேண்டும் அல்லது எறிந்துவிடவேண்டும்  என்ற நிலையில் இப்போது  உள்ளபடியால் இதோ  அவற்றில் .சில...........பிற பின்பு!.