புதன், 5 மார்ச், 2014

பக்கொடா !!

உளுந்துவடை ("உளுந்தவடை") அல்லது மெதுவடை என்பது நம் வடை வகைகளுள் ஒன்று. குளம்பி நீர் (coffee) அல்லது கொழுந்து நீர் (tea)  குடிக்கும்போது கடிக்க மிக்கச் சுவையாய் இருக்கும். இந்த மெது வடைக்குப் பக்கத்தில் கடித்துச்  சுவைக்கும் பொருட்டு கடின "வடை" ஒன்று வைக்கப்பட்டது.  அதைப் பக்கவடை என்றனர்.  பார்ப்பதற்கு வடைபோன்று  இல்லாமலும் ஓருருவில் இல்லாமலும் இருக்கும் பலகாரம் அது.

பக்கவடை > பக்கவடா > பக்கொடா  !!
(வடைக்குப் பக்கத்தில் வைப்பதற்குரிய பலகாரம் )

இப்போது யாரும்  பக்கவடை என்று சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.. பக்கொடா, பக்கடா என்றுதான் சொல்கிறார்கள்.

வடு >  வட்டம்  (டகரம்  இரட்டித்தது.)   வடு+அம் .
வடு >  வடை    (டகரம்  இரட்டிக்கவில்லை)  வடு+ ஐ .

சொல்லமைப்பில் இருவகையிலும்  இயலும்.

Please read through my various posts in the past where I have adverted to this in word-building.  Make a list for yourselves for your own reference.

வேங்கடம் : இங்கு  கடம் என்ற சொல் (கடு+அம்  ) -  இரட்டிக்கவில்லை.(  கட+ அம் என்பர் சிலர்.)

பஞ்ச - ஐந்து தொடர்பு

ஐந்து என்ற சொல் நூல் வழக்கில் உள்ள நல்ல தமிழ்.  பேசும்போது இந்தச் சொல்லை யாரும்  இயல்பாகப் பயன்படுத்துவதில்லை.   "அஞ்சு "  என்ற பேச்சு வழக்குச் சொல்தான் நம் நாவில் தவழ்வது.  இது  அச்சமுறுதலைக் குறிக்கும் "அஞ்சு " என்ற சொல்லுடன் மயங்கி எத்தகைய பொருள்தடையும் முளைப்பதில்லை. அதற்குக் காரணம்  நாம் "பயப்படு "  என்பதைப்  புழங்குகிறோம். ஆனால் திரைப்பாடலில் அல்லது திரை தரும் உரையாடல்களில் வரும்போது அதை சுவைக்கத் தொல்லையேதும் குறுக்கிடுவதில்லை.

"அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்"  (கண்ணதாசன் )

என்று பாடலில் வந்தால் நன்கு சுவைத்து மகிழ்வோம்.    அஞ்சிலிருந்து எட்டுவரை அதில் அமைந்துள்ளபடியால்.

ஐந்து என்பதிலிருந்து அஞ்சு வந்ததா அல்லது அஞ்சு என்ற வாய்மொழிச் சொல்தான்  ஐந்து என்று இலக்கிய வழக்காகத் திரிந்ததா /  திருத்தப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில், திட்ட வட்டமாகத் தெரியவில்லை எனபதாகவே இருக்கும்.  எழுத்து மொழியினும் பேச்சு மொழியே முந்தியது என்றால் அஞ்சு என்பதுதான் முந்தியது என்று கூறவேண்டும்.  ஆனால் :

மூல வடிவம்  "ஐ"  என்று தெரிகிறது.  பழந்தமிழர் (கல்தோன்றி மண் தோன்றி தமிழர்  தோன்றி ) ஓரசை மொழியைப் பேசியகாலை "ஐ" என்றிருப்பர். பின் அது "ஐஞ்சி" "அய்ஞ்சி"  "அஞ்சு" என்றெல்லாம் திரிந்திருக்கலாம்.  தொல்காப்பியனார்  போன்ற பழம்பெரும் பேராசிரியன்மார் அதை மாற்றி "ஐந்து" என்ற "து" இறுதிகொண்ட  சொல்லைப்  படைத்திருக்கலாம். ஐந்து என்பது புலவர் புனைவாகையினால் இதுவரை அது பேச்சு  வழக்கில் வரவில்லை.

அஞ்சு என்பதற்கும் பஞ்சு என்பதற்கும் உள்ள வேறுபாடு ஒரு பகர ஒற்றுதான்.
ப்  + அ  = ப . இந்த ஒரு புள்ளியிட்ட எழுத்தே வேறுபடுகின்ற பஞ்ச் என்ற சொல்  அஞ்சு என்பதன் தலைத் திரிபே ஆகும். பஞ்ச் என்பதிலிருந்து பல சொற்கள் புனைவு பெற்றன.  பஞ்சாமிர்தம்  பஞ்சாயத்து, பஞ்சகபாலம்,   ,பஞ்சதாரை. பஞ்சதீதீ ,    இன்ன பிற   (இத்யாதி இத்யாதி )

அஞ்சு என்ற பேச்சு வழக்கின் திரிபே பஞ்ச் என்பது  . மூலச் சொல் "ஐ " ஆகும். 

 

     

ஞாயிறு, 2 மார்ச், 2014

காலம்

காலே இல்லாத காலமே ---  உனக்குக்
கால்முளைத்து நீண்ட தெப்போது?
காலில் உருளை மாட்டிகொண்டாய் -  நீ
கனவே கமாக ஓடுகின்றாய்!

நேரமே நகராமல் நிற்கின்றாய் --- நீ
நிகரில் உளைச்சலை விற்கின்றாய் ,
ஊரைச்  சுற்றிடப்   போம்போது    ----- மட்டும்
ஓட்டமெடுப்பது உறு முறையோ!


பல்லிக்குப் பல் இல்லாததுபோல் காலத்துக்குக் கால் இல்லை,  அது கால் என்ற சொல்லினடிப் பிறந்ததென்றாலும் .

நேரம் நிற்பதாவது " நேரமே போகமாட்டேன்" என்கிறது  என்று   சொல்லும் நிலை.Such person is obviously bored.  She or he might be depressed too. If this person goes for a tour or travel.  she might feel better. At that point,  the time begins to run..