ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சபதம்

சபதம் என்பதைக் குறிக்கப் பல சொற்கள் சங்கதத்தில் உள. இவற்றுள் பல, "வ்ரத" என்ற இறுதிபெற்று முடியும். வெறுமனே வ்ரத என்றாலும் சங்கதத்தில் சபதம்தான். சபதம் என்பது அங்குக் காணப்படவில்லை. நீங்களும் தேடிப்பார்த்து, இருந்தால் தெரிவியுங்கள்.

சகரம் மொழிக்கு முதலில் வராது என்று தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா காணப்படுகிறது. இது ஆராய்ச்சி அற்ற‌ ஆசிரியர் எவரோ ஒருவரின் இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை.

சமைத்தல் என்பது சமஸ்கிருதம் அன்று.  சண்டை என்பதும்  அப்படியே. இங்ஙனம் எத்தனையோ சொற்கள்!  உதைப்பது என்று பொருள்படும் சவட்டு என்னும் மலையாளச் சொல்லைப் பாருங்கள்.   இந்த நூற்பா பிற்பட்ட காலத்திய இடைச்செருகல்,  இது  நன்றாகவே புரியும்.

சபதம் தொடக்கத்தில் "இன்னதைத் தடுக்காமல் விடமாட்டேன்" என்பதுபோன்ற உறுதிச்சொல்  வெளிப்பாட்டைக்  குறித்தது. இங்ஙனம்  தடுக்கப்பட்ட நிகழ்வு கெட்டுவிடும் அன்றோ? எனவே  கெடுத்தல்  கருத்தினடிப்படையில்  சபதம் அமைந்துள்ளது.

அவம்  >    அவதம்  >  ச‌வதம்.>   ச‌பதம்.

அவம் = கெடுதல்,  கெடுத்தல்.

அமைதல்  - சமைதல்   போன்றது  இது.  அ -ச திரிபு.


சபதக் கதைகள் பல நமக்குக் கிடைக்கின்றன. மங்கம்மா  சபதம், சரசு  வதி  சபதம்  எனத் தொடங்கிப் பலவாம் அவை .  சபதம் மேற்கொண்டவர் வெற்றி, மற்றவருக்குத் தோல்வி.தோல்வியிலும் நன்மை இருக்கலாம் எனினும் இத்தகு வெவ்வேறு  நிலைகளை அவ்வக் கதைகளில் கண்டுகொள்ளுங்கள்.

இனி இன்னொரு அ > ச திரிபைக் காட்டுகி ேன்.

அமர்  > சமர்.

அமர் என்ாலும் போர்;  சமர் என்றாலும் போர்.தான்.  இந்தத் திரிபில் பொருள்
மாறவில்லை.

எனவே அவதம்  எனற்பாலது சவதம் > சபதம் ஆனதென்பதை அறியலாம் .

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பி தா

தந்தையைக் குறிக்க சங்கதமொழியில் உள்ள சொற்கள் மிகப்பல. தந்தை யென்ற சொல்லும் அங்குள்ளது. இன்னும் பல. ஏக தந்தாய நம!  என்று இறைவணக்கத் தொடரில் வருகின்றதன்றோ?

ஆனால் இங்கு ஒரு சொல்லை மட்டும் சிந்தித்து அறிவோம்.

பின் என்ற சொல், சில சொற்சேர்க்கைகளில் பி‍ என்று குறையும்.   எடுத்துக்காட்டு:

தம்+ பின்   =   தம்பின்.>  தம்பி. ( தமக்குப் பின் பிறந்தவன்  தம்பி.)

தாய்க்குப் பின்  நாமறிந்துகொண்ட தெய்வம் பிதா.

பின்  + தாய்  =  பி(ன்) +  தா(ய்).=   பி தா.

சில சொற்கள்   முன் பின்னாய் அமையும் என்பதைப்  பல இடுகைகளில் எடுத்துக்காட்டி யுள்ளேன்

அப்பா எனபதில் உள்ள "பா"  பி   என்று திரிந்தது என்று  கொள்வாரும்  உளர் . அங்ஙனம் ஆயின் -தா என்பது பின்னொட்டு  எனல் வேண்டும்.
"பிதா" என்பதைப் பிரிக்கலாகாது என்று சிலர் வாதிடுவர்.  இலத்தீன் மொழியில் -பா என்றே சொல் தொடங்குகிறது..
"பா பா "  =  போப்பாண்டவர்.
ஆகவே பி(ன்) + தா(ய் ) என்பது .பொருத்தமானது .

மாதா -  பிதா - குரு  தெய்வம்  என்ற நிரலில் மாதாவிற்கு அடுத்து நிற்பவர் பிதா. தாய்க்குப் பின் தாரம் என்பது ஆண்மகனைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட  குடும்பவியல்  பழமொழி.  இங்கு மாறுபாடு எதுவுமில்லை..

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

derivations of words meaning mother

இப்போது  ஆத்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஆய் என்றால் அம்மா என்று பொருள், இது யாவரும் அறிந்ததே.

தாய் என்பதும் அதே பொருளுடைய சொல்.

ஆய் + தாய் =  ஆ+ தா = ஆத்தா.   இச்சேர்க்கை இரு சொற்களிலும் உள்ள யகர ஒற்று மறைந்து புணர்ந்தது. இது உலக வழக்கில் அல்லது பேச்சு வழக்கில் விளைந்தது. (தாத்தா என்பது வேறு).

பல பெண்டிரின் பெயர்கள்  ‍‍தா என்ற பின்னொட்டுப் பெற்று முடியும்.  இவற்றிலும் தாய் என்ற சொல் யகர ஒற்றை இழந்து பெயர்ப் பின்னொட்டாக நிற்கின்றது.

நந்திதா, வேதிதா,.... என்பவெல்லாம்  நீங்கள் அறிந்தவை.

ஆகவே தாய் > தா. (கொடு என்னும் தா வேறு.)


மாதா என்பது (அம்)மா + தா(ய் ) =  மா + தா.  முழுமையானது  " அம்மா தாயி"   என்பது போன்றது.

தாய்  >  தா  > தாதி

தி என்பது பெண்பால்  பின்னொட்டு.