புதன், 25 மார்ச், 2026

கற்சிதைவில் உண்டான சொற்சிதைவுகள்.--கச்சிதம் என்பது ஒன்று.

 கல் சிதைவு என்றால் கல் உடைந்து சிறியதாகி அல்லது தேய்ந்து  சிறியதாகி பிற கற்கருவிகளை உண்டாக்கிக்கொள்வது என்பதுதான்.  இது கற்காலத்திலிருந்த நம்மிடையே நடைபெற்று வருவதாக இருந்தாலும், எல்லாச் சொற்சிதைவுகளையும் ஒரே இடுகையில் கவனித்துவிட முடியாது. நேரம் என்பது தேவைப்படும்.

இத்தகைய சொற்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து ஒரு நூலாகவும் எழுதலாம். நீங்கள் எழுதி ஒரு சேவையைச் செய்யலாம்,

இந்தத் தஅலிப்பு எமக்கு பிடித்துப்போய்விட்ட படியால் இதை மாற்றாமல் வைத்துக்கொண்டு இங்கு சில் கூறுவேம்.

கல் உடைந்து சிறிதாகிவிட்டால், அதையும் சில கருவிகட்கோ பொருட்களுக்கோ பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம்.. கற்காலத்தில் இதைச் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.

இன்று கச்சிதம் என்ற சொல்லை மட்டும் கவனிப்போம்.

முதலில் சிதைவு என்ற சொல் கவனிப்போம்.  சில்> சிறு> சிறிது > சிது> சிதை> சிதைவு  என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு திரிகையில், சில முழுச்சொற்கள் போல் தோன்றும்.  சிது என்பது சிறிது என்பது நடுகெட்டு அல்லது இடைமறைந்து,  அவ்வாறு வந்தது.  அதிலிருந்து இன்னொரு சொல் வந்ததைக் கண்டுகொள்வீர்.

கல் சிதை>  கல் சிதம்>  கச்சிதம்.   ஒரு கல் சிதைந்து நன்றாக அமைந்துவிட்டால் மனிதன் அதை எடுத்து, கொஞ்சம் சரிசெய்து கருவியாக்கிக் கொளல். மிக்கச் சரியாக அமைந்தது என்று பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


சனி, 21 மார்ச், 2026

சில் என்ற அடிச்சொல். சின் என்று மாறுகிறது.

 சில் என்ற அடிச்சொல், ஒன்றுக்கு மேற்பட்டன என்று பொருள்படும். மணல்போல் நுண்மையாக இல்லாமல், சற்று பெரியனவாய் ஆனால் ஒரு பெரிய துண்டிலிருந்து பிரிந்து விழுந்து இருப்பனவைக் குறிக்கும்.

லகர மெய்யீறு,  னகர மெய்யீறாகத் திரியும்.  சில்> சின்> சின்ன > சின்னது என்பன காண்க.

சின்>  சினை  ( விலங்குகளின் கரு முட்டைகள்). சினைகளில் முட்டைகள் பலவாய் இருக்கும்.  எ-டு: மீன் சினை.  பசு சினைப்பட்டிருந்தால், கன்றுபட்டிருக்கின்றது என்பர். (கருவுற்று என்ற எச்சவினை, மாடு முதலியவற்றிற்குச் சொல்லலாகாது.) 

சின்னம் என்பது.   சின் என்றது அடிச்சொல்.  அம் என்பது அமைப்பு என்பதைக் குறிக்கும் அடிச்சொல்,  இங்கு ஒரு விகுதியாக வருகிறது.  அம்> அமைப்பு என்ற பொருளைக் குறிக்கும்  தமிழ் அடிச்சொல்.  இந்த அம் வந்த ஒரு சொல்லை எடுத்துக்க்காட்ட வேண்டின், நிறம் என்பதைக் காட்டுக.  நிறு+ அம் >  நிறம். நிறு என்றால்  மாறிவிடாமல் நிற்கச் செய்வது என்பதே பொருள்.

நிறு > நிறுத்து.   ( வினைச்சொல் பகுதியில் உண்டாகிறது.  இங்கு து என்பது வினையாக்க விகுதி.).  பொரு> பொருத்து என்ற சொல்லில் பொரு என்பது வினையடியாகவும் து என்பது வினையாக்க விகுதியாகவும் இருத்தலை  உணர்ந்துகொள்வீர்   நிறு என்ற அடிச்சொல் எப்படி உண்டானது என்றால்,  நில்> நின்று ( வினை எச்சமாகி),  பின் ன் என்பது இடைக்குறைந்து, நிறு என்றாகி இங்கு மீண்டும் வினையாகிற்று.   நிறு என்பது முன்வடிவில் நின்று என்று எச்சமாகி இடைக்குறைந்து நிறு என்றானது என்பதைக் கூறுவதில்லை. இங்கு இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

நில் > நிறு என்று வந்ததுபோலுமே  சில் என்பதும் சிறு என்று திரியும். சில்லிடுதல் என்ற வினை, இடு என்ற துணைவினை பெற்று வரும். 

சில்லுதல், சின்னுதல் என்ற வினைவடிவங்கள் கிடைக்கவில்லை.

சிறுத்தல் என்ற வினை வழங்கியுள்ளது. சிறுப்பனவாதல் என்பதும் ஒக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


செவ்வாய், 17 மார்ச், 2026

நீர் என்பது

 நீரின் தன்மை  குளிர்ச்சியாகவும் இருக்கலாம்,  வெப்பமாகவும் இருக்கலாம்.  வெந்நீர்க் குளங்களும் இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளில் காணலாம்.  பிற நாடுகளிலும் உள.

நீர் என்பது பள்ளங்களில்  தன்னை நிறுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தமையால் ஏற்பட்ட பெயர்.

நில்> நிறு> நிறுத்து.

நில்> நிறு > நீர்.. இதன் முதனிலையாகிய நி என்பது நீ என்று நீண்டுவிட்டால், று என்பது ஏலாமையால், ர் என்பதே வந்து ஈற்றில் நின்று பெயராகும்.  நீறு என்பது நீரின் வேறுபட்ட சாம்பற் பொருள்.

நில்> நிறு> நீறு> நீற்றல்  என்ற வினை அமைகிறது.  இது சாம்பலாகிவிடுதல் என்று பொருள்படுகிறது. மேலாகச் சாம்பல் பூத்திருத்தல்.

நீர் உள்ளதாவது நீர்த்தல் என்ற வினையினால் சுட்டப்படுகிறது. நீர்ப்பு என்பதும் அமையும். 

நீர் என்பது இணைமொழியாகிய  சமஸ்கிருதத்திலும் வரும். அது தமிழினோடு வந்த மொழி. அது இந்தோ ஐரோப்பியம்  ஆனது அதிலிருந்து கடன் கொண்டு ஐரோப்பிய மொழிகள் தம்மை வளப்படுத்திக் கொண்டதால்  அவர்கள் அவ்வாறு கொண்டனர்.  இக்கருத்துக்கு (  இந்தோ ஐரோப்பியம் என்பதற்கு)  தேவநேயப் பாவாணரும் உடன்படுவார். என்றாலும், சமஸ்கிருதம் என்பது தென்மொழியின் வழிப்பட்டது என்று தம் ''முதல்தாய்மொழி'' என்னும் நூலில் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை




சனி, 14 மார்ச், 2026

சிற்பம், சிற்பி, சிலை முதலியவை

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவும் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

-----------------------------------------------------------------------------------------------------------------------------

The following draft is temporarily retained by the Editing staff for reference.  Please do not read.  Will be discarded later when no longer required

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவ்ம் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 11 மார்ச், 2026

மூத்திரம் ( மீத்ததை இருத்தல்)

இது ஒரு திரிபுச் சொல். இதை இவ்வாறு அறிந்துகொள்க.

உடலில் மிகுத்த நீரை, நம் உடல் வெளியேற்றிவிடுகிறது.  நீர்க்கழிவுகள் வெளியேறுவதால் உடல் நலத்துடன் வாழ்கிறது என்பது நீங்கள் அறிந்ததாகும்.

பகுதி என்ற சொல், பாதி என்று திரிந்து வழங்குகிறது. பகு>பா,  அதுபோல மிகு > மீ என்று திரிகிறது.

மிகுதி> மீதி,  மீதி+ அம் >  மீதம்.  தி என்பதில் உள்ள இறுதி இகரம் வீழ்கிறது.  மீத்+ அம்> மீதம்.  மிகுத்து அமை> மீத் அமை>மீத் அம்> மீதம் என்றும் காட்டலாம். எல்லாம் எப்படி விளக்கினால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கும் என்பதே நாம் காண விழைவது ஆகும்.

அஞ்சு > அச்சம் என்பதுபோல் மிஞ்சு > மிச்சம் ஆகிறது.

பகுத்துண்ணுதல் என்பது பகுத்துண்> பாத்தூண் என்று திரிதலைத் தெரிந்துகொள்க. பகு> பா.   அதுபோல்,  மிகுத்திரு> மீத்திரு> மூத்திரு+ அம் > மூத்திரம் ஆகிறது.  இது பேச்சுவழக்கில் விளைந்த ஒரு சொல்.

இதை வேறு விதமாகவும் ஆசிரியர்கள் விளக்குதலால், இது பல பிறப்பி  ஆகும். பலரும் கூறியவை அறிந்துகொண்டு இங்கு கூறுவதால்,  இதுவே சிறந்த விளக்கம் என்று உணர்க.

மிகுத்தது > மீத்தது.  'இருத்தல்'  இது பேச்சு வழக்கில் ''கழித்தல்''.  இருத்தல் என்பது கழித்தலைக் குறிக்கும் ஓர் இடக்கர் அடக்கல்  -  பேச்சு வழக்கு என்பதை உணரவும். இறுதியில் இன்றைய வழக்கு மூத்திரம் ஆகும்.  மீத்து இருத்தல் > மீத்திரு >  மூத்திரு> மூத்திரம்.

உடலும் அதிக நீரைப் பயன்படுத்துகிறது.  அதுபோக மீதமிருப்பதும் வேண்டாததும்  ஆவது.  மீத்தது > மூத்தது. பயன்பெறாமல் இருந்ததும்  ஒரு மூத்ததே ஆகும்.   அறிக.

மீத்தது, மிகுத்தது, மூத்தது,  என இவை முல் என்ற மூல அடியிலிருந்து பிறந்த தமிழ்ச் சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 9 மார்ச், 2026

கம்பி என்னும் சொல்.

 கம்பி என்ற சொல், முதனிலைத் தொழிற்பெயர்.  இரும்பினால் ஆன அசையும் தடிகளையும் குறித்தபடியால், பொருட்பெயருமாகும்.

கம்பித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே ஆகும். கம்புபோல் நீளமாக  இழுக்கப்பட்டு  வளைக்கவும் அசைக்கவும் படும் நிலையினதாகையால்,  கம்பு> கம்பி  என்று இகர இறுதியுடன் முடிந்த சொல்லாகும்.

கம்பு என்பதும் தமிழ்ச் சொல்லே. கடுமை உடையது என்ற பொருளில் கடு> கடும்பு  என்று  புகர விகுதி பெற்று இச்சொல் முடிகிறது. பின்னர் டுகர இடைக்குறைந்து, கம்பு என்றாகி வர,  முன்னிருந்த சொல் கடும்பு, சற்று வழக்கிறந்துவிட்டது.

தொடக்கத்தில் வரும்பால் கடும்பால் என்றது,  கடும்பு என்று கடைக்குறைந்தது. இதில் பு விகுதி எனக்கொண்டு,  கடுமை> கடும்பு எனினும் இதனால் இச்சொல் ஏதும் இழுக்குறாது நிற்கும்.  இதனால் கடும்பு என்ற குச்சியைக் குறிக்கும் சொல் வேறானது என்று உணர்ந்துகொள்க.

பிடிப்பதற்குக் கடுமையாக இருப்பதால், கடும்பிடி என்பது  கம்பி என்று குறைந்தது எனினும் ஒக்குமெங்க.   ஆகவே இது ஒரு பலபிறப்பிச் சொல் என்று கொள்க.  

கம்பித்தல் என்பது கற்பித்தல் போலுமொரு சொல் எனலாம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 6 மார்ச், 2026

ரசம் என்பது

 சாப்பிடும் போதெல்லாம்  ரசம் என்பதை மறந்துவிடல் ஆகாது.  இது ஓர் இன்றயமையாத தேறலாக இப்போது இடம்பிடித்துள்ளது.

பலவித மருந்துக் குச்சிகள், இலைகள், இணுக்குகள், கொழுந்துகள், வேர்கள் இன்னும் இவை போல்வனவற்றை வேகவைத்து, இவற்றை இறுத்து, வரும் ரசத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்தும் நீர்க்கலவைக்கு   ''இறசம்'' என்று சொல்வோம்; எனினும் இது ரசம் என்றே வழங்குகிறது.  எழுத்தில் வேண்டுமாயின் இரசம் என்று எழுதலாம்.  இதை இறசம் என்று எழுதினால் இது இறுத்துக் குடித்தலுக்கு ஏற்ற பெயராக  அமைகிறது.

இவ்வாறின்றி,  போட்ட குச்சி முதலியவற்றை நீக்க மீதமாக இருக்கும் நீரின் காரணமாக,  இரு+ சு+ அம் >  இரசம் > ரசம் என்றும் கூறினாலும் பொருந்துவதாகவே தெரிகிறது.

அரைத்து நீருடன் கொதிக்கவைத்து இறக்குவதால்,  அரை+ சு+ அம் >  அரைசம்> அரசம்> ரசம் எனினும் பொருத்தமே  ஆகும்.

அரிய மருந்துப் பொருள்களை வேவித்து இறக்குவதால்  அரு+ சு+ அம்> அரசம் > ரசம் எனினும் பொருத்தமே.

உரைத்து வழித்து நீரிலிட்டுக் கொதிப்பித்து இறக்கி,  அதைக் குடித்தாலும்,உரை+ சு+ அம்>  உரசம்  ( ரை என்பது ர என்றானது ஐகாரக் குறுக்கம்)  உகரம் அகரமான திரிபு வழியாக  ரசம் என்றே  ஆகும்.   உகரம் இகரமாக ஆகும் என்பதை முன்பு நிறுவியுள்ளோம்.  பழைய இடுகைகளில் கண்டு தெளிக.

உரிய மருத்துவம் என்ற பொருளில்,  உரி+ சு+ அம் >  உரிசம்>  உரசம் > ரசம் என்றும்  ஆகும்.

இன்னும் பலவிதமாக வரலாம்.  ஆகவே இதைப்  பல்பிறப்பிச் சொல் என்று முடிக்கவேண்டும்.

நாவில் சற்று உறுத்தலான சுவையுடன் வருவதால்,   உறு+ சு+ அம் > உறசம்>  ரசம் என்றுமாகும்.

உடன் உருப்பட வேண்டின் குடிக்கவேண்டும் என்ற பொருளில்,  உரு+ அ+ சு+ அம் > உரசம் > ரசம் என்றுமாகும்.

சம/ஸ்கிருதம் என்பது தமிழின் இணைமொழியாக வளர்ந்ததே ஆதலின்,  ஆரிய மொழி என்னும்  அயலார் மொழி அன்று.   ஆர் என்ற பணிவுச் சொல் உடையோரான பெரியோர்க்கு உரிய மொழி என்ற கருத்தில்  ஆரிய மொழியாகலாம். இங்கு அனைத்தும் தமிழ் மூலமாகவே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது


புதன், 4 மார்ச், 2026

அருமை என்பதன் உணர்ச்சி எப்போது வந்தது: அருமை, அரு> ஆர்

அருமை என்னும் உணர்வு:

 மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால்,  அது  அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை.  அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம்.  ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு-  அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான்.  எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை.  ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.  

அரு என்பது ஆர் என்று திரிதல்:

இப்போது அரு> ஆர் என்று திரிந்து,  வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது.  நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது.  வந்தார்.  (ஆர்).

இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால்,  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று.  கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும்.  மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்).  கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில்,   ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது..  ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க.  வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).

அருணவம்  ( அரு, அண், அவம்).

அருகும்  தொலைவும்

அருணவம்:  அருமை,  அது அருகில் இருந்தாலும்,  (அண்> அண்மை);  அவம் -  அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும்.  ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று  அறிக.  அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.

தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


திங்கள், 2 மார்ச், 2026

பாரியா என்பது

பாரியா என்பது மனைவி என்று பொருள்படும் சொல்.  தமிழில் பெருவழக்கு உடைய சொல்லன்று. அருகியே எழுத்துலகில் பயன்பாடுடையது ஆகும்.

ஆடவனை மணந்துகொண்ட பெண்ணின் உடன்வாழ்வு, கணவனின் உயிர்வாழ்வு முழுவதும்  தொடர்தல் மட்டுமின்றி,  அவனிறந்த பின்னும் தொடர்வதாகும். பிள்ளைகளையும் வளர்த்து மணம் செய்வித்து,  சிறப்புச் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் உடையவளாகிறாள்.

மணப்பெண் பெரும்பாலும் ஆடவற்கு வயது குறைந்தவளாய் இருப்பாள். அவன் உயிர்வாழ்க்கை முழுவதும் அவனுடன் ''பரவி'' நிற்பதுடன் அவள் கடமைகள் பின்னும் தொடர்வதால்,  ''பர(த்தல்)''  என்ற முதற்பகவு பொருந்துகிறது.  பர(த்தல்) என்பது பார் என்று முதனிலை நீண்டு அமைகிறது.

அவன் வாழ்விடம் இயைந்து செல்வதால்,   இயை - இயா என்ற இரண்டாவது பகவும் மிகப் பொருத்தமுடைய தாகிறது.

இச்சொல் ''பாரியாள்''  என்றும்   -ஆள்  பெண்பால் விகுதி  பெற்றும் வரும்.

பாரியா, பாரியாள், பாரியை என்ற மூன்று வடிவங்களும் ஏற்புடையனவே எனினும்,  பாரியை என்பது சிறந்த சொல்வடிவம் என்பது எம் கருத்தாகும்.

இது மலையாள மொழியில் நல்ல பயன்பாடு காண்கிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 1 மார்ச், 2026

அலங்காரம்

 அலம் புரிதல்  ( அலம்புரிதல்)  என்றால்  அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே  அழகு செய்தல் தான்.  அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால்,  அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது,  மிகுதி செய்தல் ஆகிறது.  அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம்.  அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு  ஆகிவிடக்கூடும்.

இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும்.  அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள்.  ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.  

ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.

அல் -   அழகு அன்மை.

கு  -  கூட்டிச் சேர்த்தல்.   இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.

ஆர்(தல்)  -  நிறைதல். நிறைத்தலுமாம்.

அமை(தல்):   இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.

அலம்+ கு+ ஆர் + அம் =  அலங்காரம் ஆகிறது.   இதன் பொருள்:  அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை  அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து,  அமைவுறுத்துதல்.

தமிழில்,  அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன.  எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி,  ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர்.   இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே  ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது.  கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும். 

அலம்+ கு+ ஆரம்  என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது.  அதுதான் அழகுறுத்துதல்.  இச்சொல் அலம்+கு+ அரண்+ அம்  > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.

பழ > பல என்பதுபோல்,  அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க.  இதை இங்கு விரிக்கவில்லை.  வேறு இடுகையில் இதை விளக்கலாம்.

புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை