துவசம் ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும். ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது.
காற்று வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர். துவளுதல் என்பது வளைதற்கருத்து.
கொடிகள் பலவகை. வெற்றியின்போது ஏற்றப்படுவது வெற்றிக்கொடி. அன்ன சத்திரத்தில் ஏற்றி அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது அன்னக்கொடி ஆகும். பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.
அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு , துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு. சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால் ''சலவை'' என்பதுண்டு. சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது. சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல். சலக்கிரீடை ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான், ஜலக்கு = ஜலத்திற்கு. ( ஜலம்+ கு = ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும். பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம். தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம், இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.
கிரீடம் என்பது ஒரு METANALYSIS. பிறழ்பிரிப்பு. இச்சொல் பின் தனிச்சொல் ஆனது. மொழி இப்படியும் வளரும். இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.
துவளும் இயல்பினதான கொடி, துவசம் என்றே வழங்கியது. பின்னர் அது துவஜம் ஆயிற்று. துணி என்ற சொல், அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர். துணித்தல் என்றால் வெட்டுதல். வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே. முதனிலைத் திரிபு.
துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின், காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம். அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல. பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு. வரு+ இ+ சு> வாரிசு. இது ஒன்றும் உருது அல்ல.. உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது. மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை. வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை. வரு> வாரீர் என்று அமைவது காண்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக