பதாகை என்னும் சொல்லை அறிவோம்.
பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல் பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.
விருதுக்கொடி, பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது.
நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.
பதி + ஆகு + ஐ > பதாகை. பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று. த்+ஆ> தா ஆகிவிடும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக