இன்று அயோக்கியன் என்னும் சொல்லைக் காண்போம்.
அயோக்கியன் என்ற சொன் மக்களிடை அதிகமாக வழங்கும் சொல் என்னலாம். ஒருவனைத் திட்டும்போது அவனை அயோக்கியன் என்று சொல்வதுண்டு. இதன் பொருள் நேர்மை அற்றவன் என்பது தான், அயோக்கியத் தனம் என்பதும் பலவகை நேர்மையற்ற செயல்களையும் குறிக்கும் பொதுப்பொருண்மை வாய்ந்த சொல்லாகும். தனம் என்பது இங்கு தன்மை என்ற பொருளைத் தருவது. தன்மை என்ற சொல் தன் என்ற அடியில் தோன்றியது போலவே தனம் என்ற சொல்லும் இங்கு தன்மை என்ர பொருளில்தான் வழங்குகின்றது. ஒரு மனிதன் தனக்கென்று சேர்த்துவைத்துள்ள பொருட்களுக்கும் "தனம்" என்ற சொல் வருகிறது. அயோக்கியத் தனம் என்ற வழக்கில் வரும் தன்ம் என்பது சேர்த்துவைத்த பொருளினைக் குறிக்கவில்லை.
இதன் பொருளை அறிய யோக்கியம் என்ற சொல்லினின்று தொடங்கவேண்டும். இது நீங்கள் அறிந்ததுதான். யோக்கியம் என்ற சொல் ஓ என்று தொடங்கும் ஓங்கு என்பதிலிருந்து வருகிறது. ஓங்கு> ஓக்கு> ஓக்கிய, என்ற சொல்லில் வரும் மக்களிடைப் பாராட்டினைப் பெறத் தக்க செயல்தன்மையைக் குறிக்கிறது. ஓங்குதலாவது உயர்வாகுவது. மேனிலையை அடைவது.
ஓங்கு என்பது இயம் என்ற பின்னொட்டுச் சேர்ந்த பிறகு ஓக்கிய என்று வருவது வலித்தல் ஆகும். அதாவது வல்லெழுத்துப் பெற்று அமைவது. இந்தச் சொல் பழைய தமிழ் அகரவரிசைகளில் ஓக்கியம் என்றெ இடம்பெற்றிருந்தது. இவ்வடிவ்மே மூலம் ஆகும்.
இந்தச் சொல் எதிர்மறையாக உள்ளபடியால், சமஸ்கிருதம் என்பீரோ. அல் என்ற அல்லாமை குறிக்கும் சொல்தான், தன் இறுதி எழுத்தை இழந்து அ என்று வந்தது. ஆகவே தமிழிலக்கணப் படி இது கடைக்குறைதான். யோக்கியன் அல்லாதவன் என்பதையே முன்னொட்டு மூலம் அயோக்கியன் என்றாக்கினர்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக