சாமர்த்தியம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காண்போம்.
முன்னர் கண்ட முடிபு இன்னும் உள்ளது. சுருங்கக் கூறின், அது சா என்பதற்குச் சாதல் என்ற பொருள்கொண்டு அதனின்று தப்பிக்கத் திரம்படச் செயல்பட்டு அந்த இடுக்கணிலிருந்து வெற்றியுடன் விடுபடுதல் என்ற பொருள்பதிவுறு மாரு சொல்லப்பட்டது.
இப்போது சா என்பது சார் என்பதன் கடைக்குறையாகக் கொண்டு பொருளுரைக்கப்படுகிறது. இடுக்கண் வந்துற்ற காலை, சார்பு கொள்ளத்தக்க நிலையை மேற்கொண்டு, மருவி - அதாவது கடைப்பிடித்து, அவ்விடுக்கணிலிருந்து தப்பி வாழ்தல் என்று பொருள்கொள்ளப் படுகிறது.
சார்தல் - வினைச்சொல்.
சார் > சா - இது கடைக்குறை வினைச்சொல்.
சார் + மரு + து + இ + அம்
சா+ மார் + து + இயம்
> சாமார்த்தியம் ஆகும்.
மரு என்பது மார் என்று திரியும். இன்னொரு உதாரணம்: தரு > தார். தருவான், தாரான் என்பது காண்க. தாரம் என்ற சொல்லிலும் தரு என்பது தார் என்று திரிந்தது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
முடிபு என்பது ஆய்வின் முடிபு என்று பொருள்படும். இது தொல்காப்பியம் முதலிய நூல்களிலும் காணப்படும் சொல்.
YOUR ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக