தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள ஆக்கப்பட்ட சொற்களில் உருவாக்கல் நிலையில் காணப்படும் கருத்தொற்றுமைகளை ஆங்காங்கு சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவேளைகளில் வெளிப்படையாகக் காரணம் கூறவில்லை. வேறுசில இடங்களில் கூறியுள்ளோம். இப்போது இன்னொரு முறை இங்குக் கூறுகிறோம். சொல்லாக்கத்தில் கருத்தொற்றுமை என்று ஒரு நூலே எழுதலாம். எழுதிவைத்ததைப் படித்து அறிவு பெறுதலோ அல்லது எதிர்த்து நிற்றலோ பலரும் ஈடுபடாத ஒரு துறையாகும். சில கட்டங்களிலும் பொருட்களிலும் எதிர்த்து நிற்றல் முதலியவை, தாமே உருவாகி வந்தவை அல்ல.
பரப்புடரைகளினால் கவரப்பட்டவர்கள் உள்ளுந்துலால மேற்கொண்ட நடவடிக்கைகளே ஆகும்.
அகப்பட்டுக்கொள்வது அகவை. வயப்பட்டு மூப்பதும் மாய்வதும் வயது. அகவை என்பதில் வை என்பதும் விகுதி. அகம் என்பது உள்ளமைவு குறிக்கும் பகுதி அல்லது பகவு ஆகும். இந்த இரு கருத்துக்களிலும் ஒற்றுமை காணப்படுகிறேதே! இவ்வாறு ஒன்றிரண்டு ஒன்ற்றுமைகள் மட்டும் இருந்திருந்தால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தில் தோன்றியவை என்று கூறமுடியாது. ஆனால் பலகாலும் இவ்வொறறுமை மேலெழுந்து வருகிறது என்றால் இரண்டு மொழிகளும் ஒரு களத்தினரால் உருவாக்கப்பட்டவை என்று முடிபு கொள்ளுதல் எளிதானதே.
நீங்கள் இங்குக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தாக்கி, இதை ( ஒற்றுமைக் காட்சியை ) வெளிக்கொண்டு வந்து மக்கள் பயனுறச் செய்யலாம்.
வயப்பட்டவன் அவன் வயப்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். வயது அப்படிப்பட்டதுதான். காலக் கடப்பில் நாம் மாட்டிக்கொள்கிறோம். வயதை வென்றவனும் அகவையை வென்றவனும் எவனும் உலகில் இல்லை. எல்லோரும் நேரம் வரும்போது காலமாகி மறைந்துவிடுகிறார்கள்.
அகவையும் வயதும் எல்லா உயிரற்றவைக்கும் உயிருள்ளவைக்கும் பொதுவான கருத்துக்களன் ஆகும்
நம் முடிபு தமிழும் சமஸ்கிருதமும் ஒரு களத்தில் தோன்றியவை ஆகும்.
இதனை ஒரு மொழிநூற் கருத்தாகவும் சொன்னூல் ஆய்வாகவும் முன் வைக்கிறோம்.
அறிக மகி
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக