மகன், மகள், மக்கள் என்று ஒருமை (ஆண்)- ஒருமை (பெண்) - பன்மை ( இரு பாலாரும்) என இருந்தாலும் புதல்வன், புதல்வி ,புதல்வர் என ஆண்பால் பெண் பால் பலர்பாலாகவே இந்த அமைவுகள் வருகின்ற -ன. குழந்தை, பிள்ளை மதலை, மழலை முதலிய சொற்கள் ஐ விகுதி பெற்று முடிகின்றன. பொதுப்பால் என்ற பகுப்பினை நூல்களில் காணா விட்டாலும் இவை வெவ்வேறு கூ றுபாடுகள் உடைய பொதுச்சொற்கள் தாம். இவற்றிடையே பகவொற்றுமை ( uniformity) காணலாம்.
புதிய வரவாக வந்த குழந்தைதான் புதல் வன் அல்லது புதல்வி எனப்பட்டது. புதுமை குறிக்க புது என்ற சொல் இருப்பதைக் கண்டுகொள்க.
அல் எனல் அது இடம் எனலே.
இன்னொரு முறையில் கூறுவதானால் இல் எ ன்பது இந்த இடம், அல் என்பது அந்த இடம். இடம் இது என்பது இல். இடம் அது என்பது அல். இடம் முன் என்பது உல்.
ஆகவே இல் என்பது இது என்று சுருக்கிக் கூ றலாம். இல் - வீடு மற் றொரு பொருள்
புதல்வன் என்ற சொல்லை புது + அல் +வு + அன் என்று பிரிக்க வேண்டும். புது அல் வு இ என்பதும் இதனாலே பெறப்படும். புதல்வர் - அர் விகுதி. இதன் அடி "புது" என்பதறிந்தீர்.
புகு என்னும் சொல்லும் புது என்பதுடன் தொடர்புடையதே என்க. புதியன புகுதல் என்னும் வழக்கினையும் காண்க
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்ந்துகொள்க. வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக