விஞ்ஞானம் என்ற சொல், வி + ஞானம் என்று அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். சொல்லைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது. ஞானம் என்ற ஒரு தனிச்சொல்லும் இருப்பதால் வி என்று சிறப்புக் குறிக்கும் சொல்லின் முதலெழுத்துடன் தொடங்குவது எளிதாகிறது. ஞானம் என்றால் அறிவு என்பது பலரும் அறிந்திருப்பதால், இதிலெதுவும் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை!
விஞ்ஞானம் என்ற சொல்லின் முன்னோடியாய் இருந்தது விண்ணானம் என்ற சொல். இது விண்ணானம் என்றும் குற்றாலக் குறவஞ்ச்சி என்னும் நூலிலும் வந்துள்ளது.
விண்ணாணம் என்பதன் பொருளாவன:
1. இடம்பகம், சாதுரியம்
2 சாதுரியம்
3 அறிவு\
4 நாகரிகம்
5 சாலக்கு, பாவனை
6 பகட்டு, வெளியிற் காட்டிக்கொள்ளுதல்
7 நாணம் ( யாழ் அகராதி )
ஏறத்தாழ இச்சொலின் பொருள் இவை என்று அற்கிறோம்.
இது விள்+ நாணம் என்று பிரிக்கப்பட்டுக் காட்டப்பெறும். ஆயினும் இவ்வ்வாறு காட்டுதல் யாழ் அகராதிக்குரியதாக இருக்கலாம். விஞ்ஞானம் என்பதற்கு இப்பிரிப்பு உதவவில்லை.
விண்ணாணம் என்பதில் வரும் நாணம், வெட்கம் குறிக்கும் நாணம் அன்று. இது வேறு சொல். நண்ணுதல் என்ற வினை, நண்ணு + அம் > நாணம் என்று முதனிலை நீண்ட சொல்லால் அமைந்தது. நண்ணுதல் என்பது அணூகி ஆராய்தலுக்கு உதவும் சொல்.விணை ஆராய்தல் என்பது பழங்காலத்திலிருந்தே தமிழர்களுக்கு ஒரு கலையாக இருந்துள்ளது. இதிலிருந்தே விஞ்ஞானம் என்ற சொல்லும் திரிந்திருக்க வாய்ப்புள்ளது. வானநூல் என்பது ஒரு அறிவியலும் முதல் ஆய்வுமாக இருந்திருத்தல் பொருந்துவதே ஆகும்,
விண்ணாணம் என்ற சொல்லைக் கண்டு அதைப் பின்பற்றி விஞ்ஞானம் என்ற் சொல்லை அமைத்தனர் என்பது தெரிகிறது.
அறிக மகிழ்க\
மெய்ப்பு பின்
.f you enter compose mode please do not make changes.
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்த சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக