ஐஞ்சீர் விருத்தம்
இந்தப் படத்தில் அம்மன் இயல்பாக உள்ளார்
நீயே பணிந்தேன் சிரித்தாய் இன்றேன் கவலைமுகம்,
தாயே எளியேன் எதுவும் செய்தேன் ஏலாததோ
வாயே திறக்கத் துணிவே இல்லேன் நாலுதிசை
ஆயும் கணங்கள் பதிகால் வீழ்வேன் பின்சரணே.
பணிந்தேன், நீ சிரித்தாய் --- முன்னர் பணிந்தக்கால் நீ சிரித்தாய்.
இன்றேன் கவலைமுகம் - இன்றைக்கு ஏன் கவலை தோய்ந்த முகத்துடன்
இருக்கின்றாய்;
வாயே - உன்னை வாழ்த்துவதற்கு வாய்.
திறக்கத் துணிவே இல்லேன் - பயன்படுத்தவும் துணிச்சல் இல்லாதவன் ஆனேன்;
நாலுதிசை ஆயும் கணங்கள் பதி - நான் கு திசையும் ஆட்சிசெய்யும் கணங்களின் அதிபதி,
கால் வீழ்வேன் - அடிகளைப் பணிவேன்,
பின் சரணே - பின் தாயாகிய உன்னிடம் சரண் புகுவேன்
இது துர்க்கை அம்மனை நோக்கிப் பாடிய பாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக