இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடுவோம். ஐஸ்வரியம் என்ற சொல் முன் ஒருக்கால் எம்மால் விளக்கப்பட்டது எனினும், அது நீக்குண்டது. இது கள்ளப் புகவர்களாலோ மிகுதியாகிவிட்ட இடுகைகளைக் குறைக்க வேண்டி நேர்ந்ததாலோ இருக்கக்கூடும். பழைய இடுகையை நீங்கள் பதிவிறக்கி வைத்திருந்தால், இங்கு சொல்லும் உள்ளுறைவுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். வினாக்கள் எழுந்தால், கருத்துரைப் பகுதியில் எழுதி, எம்மிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
ஐஸ்வரியம் என்பதில் மூன்று பழந்தமிழ் உள்ளீடுகள் உள்ளன. ஆசு, வரு-தல், இயம் என்பவை அவை.
ஆசு என்பது பற்றுக்கோடு. இதை இன்று ஆதாரம் என்ற சொல்லால் குறிக்கிறோம். அதாவது பொருளாதாரம், இனி வருதல் என்பது உங்களுக்கு வரும் செல்வம், இயம் என்பது இ, அம் என்ற விகுதிகள்.
இங்கு விகுதிகட்குப் பொருள் கூறலாம். இ - இங்கு. அம் - அமைதல். சேர்க்க இயம் ஆயிற்று,
ஆதல் என்பது ஆசு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பொருள் ஆதல் என்பது ஆக்கம் எனவும் படும். ஆசு என்பது ஆதல்தான். சு என்பது ஒரு விகுதி. பெயர் வினைகளிலும் வரும். மாசு, ஏசு எனக் காண்க.
வரியம் என்று முடிதலால், பொருள் வரவே இதன் பொருள். வருவதும் செலவாவதுமாக இல்லாமல் நின்று நிலவும் பொருட்திரட்சி என அறிக.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக