செவ்வாய், 13 அக்டோபர், 2015

‘பாக்கிஸ்தான் விடுதலை இயக்கம்


‘பாக்கிஸ்தான் விடுதலை இயக்கம்  அதனால்   பாக்கிஸ்தானுக்கு இந்தியாமேல் ஐயப்பாடு. 

 பலுச்சிஸ்தானம் போய்விட்டால் என்ன காஷ்மீர் வந்துவிடாதா ?  என்று ................................................ஒரு கனவு .

Govt may soon lose all control over Balochistan’




Prince of the defunct Kalat state Prince Mohyuddin Baloch.—PPI/File
Prince of the defunct Kalat state Prince Mohyuddin Baloch.—PPI/File
KARACHI: The prince of the defunct Kalat state and chief of the Baloch Rabita Ittefaq Tehreek, Prince Mohyuddin Baloch, has warned that if the government fails to settle by the end of 2015 the Balochistan issue according to the aspirations of people, it will soon lose all control over the situation.
“We have so far managed to restrain [disgruntled] Baloch people but after Dec 31, 2015 the situation will get out of our control and our rulers will no more be in a position to do anything to reverse it. After the end of this year, we will be forced to allow Baloch people to take any path they like,” said the prince at a press conference held at a local hotel here on Thursday.
He was accompanied by his younger brother Prince Yahya Baloch of Kalat.
He said: “So far, our 5,000 children have been killed and some 10,000 people have been kidnapped, but no one should think that the resistance has been crushed. It is correct that Baloch are by nature slow, stubborn and quarrelsome, but when it comes to war no one can defeat them.”
The entire world was increasingly becoming interested in Balochistan and trying to take advantage of it because of its strategic position. All wanted to exploit its resources at the cost of Baloch people who remained deprived with little positive impact on their life, he said.
The prince who remained federal minister in military ruler Gen Ziaul Haq’s regime said: “My father Khan of Kalat had attached his autonomous state to that of Pakistan on the advice of the Quaid-i-Azam and in the hope that a big Islamic state was in the making, but after its coming into being, the Pakistan of the Quaid-i-Azam and Allama Iqbal was forgotten.
“Though we were a small state, we were content with whatever we had. Not only were we practising Islam but we also used to have a form of democracy in line with our Baloch traditions, but after joining Pakistan, we lost everything and were grossly neglected by the new state,” he said.
He recalled that a democratic government was dismissed in Balochistan in 1972 because everyone had set their sights on its resources and every ruler wanted to exploit its strategic position.
“Sometimes Baloch people were branded as traitors and foreign agents without producing any proof. But in spite of it we always talked about peace,” he said.
He said that from 1976 to 1999, the situation remained comparatively peaceful in the province but afterwards it went downhill. “Today we see use of force, mutilated bodies dumped in deserted places, even I could have got killed but let me make it clear that at present Baloch people are not at war but are staging protests and even those who have climbed to mountains tops are not engaged in fighting,” he said.
He said the objective of the protest was to draw the government’s attention and make it listen to them but, regretfully, no one was paying any heed to their cries. “If someone thinks Baloch organisations have vanished into thin air, he is mistaken. No doubt some Baloch leaders are abroad and others lie low within the country, but all resistance groups are part of Baloch nation and everyone has its sphere of influence,” he said.
In reply to a question the prince said the purpose of his press conference was to awaken the establishment in Lahore and Islamabad from their deep slumber and bring home to them the fact that Baloch people were not happy with the present situation. “Pakistan at present is passing through the worst crisis of its history. The country has not even a semblance of governance. Some say it is being ruled by people in uniform, others say people in black suits are running the affairs and yet others say people in civvies are real rulers,” he said.
He said that he did not recognise Nawaz Sharif as a true ruler because he did not have genuine authority. “He is merely a face of the establishment. In case of any change, such rulers will fly to the country where they have amassed their assets,” he remarked.
Published in Dawn, February 27th, 2015
On a mobile phone? Get the Dawn Mobile App: Apple Store |Google Play



ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஸ்ரீ நிவாஸ்

ஸ்ரீ நிவாஸ் என்ற  கூட்டுச் சொல்லைக் காண்போம்.

ஸ்ரீ =  திரு.
 நி -=  உள் சென்று;
வாஸ் =  பதி(ந்திருப்பவன்.)

ஆகவே திருப்பதி; அங்கு எழுந்தருளியிருக்கும் தேவன்.

திருப்பதி என்பதன் நேர் மொழி பெயர்ப்பு என்றே கூறத்தகும்.

தொண்டைமானால் நிறுவப் பட்டதாதலின் அவன் தமிழில் பெயரிட்டு அது பின் சங்கதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

நிவாஸ் என்பது  சங்கத அகர வரிசையில் உண்டு;  ஸ்ரீ நிவாஸ் என்பது பின் வந்த சொற்கோவை .

திருமகளை நெஞ்சில் கொண்டதால் ஸ்ரீ நிவாஸ் என்ற பெயர் எற்பட்டது என்பது ஒரு திறன்மிக்கப் பொருட்கூற்று ஆகும்.   ஸ்ரீ  = பெண் . திருமகள் 

திருவாகிய நன்மகள் பதிந்துள்ள இடமென்றும் திருமால் நெஞ்சினைக் கூறலும் ஆகும்.

பதி : பதிவு; பதிதல். 

பதி  > வதி > வசி  > வசி +  'அம்  = வாசம்;=  வாஸ்.  வாஸ .

சீர் + இனி + வாசம் >  சீரினி வாசம் >  ஸ்ரீ நி வாச

சீராக இனிய வாசம் செய்வோன்.

நி  :    நில் என்பதன் கடைக்குறை என்பதுமுண்டு.

இனி = இனித்தல் .  இனி வாசம் : இனிக்கும் வாசம். வினைத்தொகை.

இனிவாசம் >நிவாஸம் >  நிவாஸ்.

அடிப்படைச் சொற்கள் தமிழாகும்.


சாமிஒன்றாய் இருந்தாலும் வேறு பட்டோர்

மனிதருள்ளே வேற்றுமைகள் கணித்துக் கூற
மாமேதை என்போர்க்கும் இயன்றி டாதே!
புனிதரொடு பாவிகளும் புரட்டர் தாமும்
போலிகளும் புன்மையரும் ஒருபக் கத்தில்!
வனிதையர்கள் ஆடவர்கள் உருக்கு றைகள்
வளர்ந்துயர்ந்த நெட்டையர்கள்  குறளர் மற்றும்
தனியழகில் வெள்ளைமஞ்சள் கறுத்த தோலர்
தனித்தனியே பேச்சில்பல மொழிகள் கொண்டோர்

சாமிஒன்றாய் இருந்தாலும்  வேறு பட்டோர்
சாற்றுங்கால் ஒருமையுறு சாய்வு கொண்டு
பூமிஒன்றாய்ப் புகப்பெற்றுப் போற்றும் வாழ்வைப்
புதைபொருளாய் அடைந்திடவோர் புத்தி வேண்டும்;
ஆமிதுவே புதுமையெனும் புத்தி ஆகும்
ஆழ்ந்தறிந்தார் அமைவினிலே  ஆங்குத் தோன்றும்
ஏமுறவே விழைந்தாரை ஈமக் குண்டால்
இரக்கமறக் கொன்றார்க்கு இல்லை அன்றோ

Our hearts are with the peaceful marchers killed in Turkey with bombs.....

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தலை நீண்ட பதங்கள்

சொற்களுக்குள்  பொருள் பதிந்து வைக்கப்படுகிறது. அதனால் அவை:

பதி + அம்  =  பதம்   ஆகும் .  பதி  என்பதில் ஈற்றில் உள்ள இகரம் கெட்டது .  
கெட்டது  என்றால்  விடப்பட்டது.

இரும்பு முதலிய கனிமங்கள் வார்த்து   எடுக்கப்படுவது போல  சொல்லும் வார்த்துக்  கொடுக்கப் படுகின்றது . அதனால் அது வார்த்தை.
வாய்  > வார் > வார்த்தை  எனினும் ஆம்.  ர் >< ய்  மாற்றங்கள் மொழியில் உள .

இரு வழிகளில் சென்று ஓர் இடத்தில் சேரும் சாலைகள் உள்ளன. அவை பல. 

இங்கு  தலை நீண்ட பதங்களைப் பார்ப்போம்.

வினைச் சொற்கள் பெயராகும்போது  சுடு  >  சூடு என்பதில்போல முதனிலை  நீளுதல்  உண்டு .

வினை அல்லாத சொற்களும் இங்கனம் நீளும்.

பசு (மை) +  இலை  = பாசிலை. 

பசு(மை) + ஊன் =  பாசூன்.

பசு + அம்  = பாசம் . வழுக்கல் இடங்களில் காணப்பெறும் பச்சைப்  படர்ச்சி.
பசுமையான மனவுணர்வு. 

பச்சைப் புளுகன் என்ற வழக்கு அறிக.  

பச்சைப் பொய் :  an unadulterated lie or pure lie. This means that there is no element of truth or iota of truth in it.  Sometimes a lie may have or may have been set upon a truth.

You a woman were sent home by your cousin brother in his car.  He leaves thereafter. A third party saw that and twists the event saying you have some illicit relationship with one male person.

That is a lie, but based on  a  true  event occurred.

பசு + அம்  +கு  =  பாசாங்கு  (நடிப்பு  )     அம்  >ஆம் )

பசு + இ =  பாசி.

கடற் பாசி :  In Malaysia and Singapore  there is  a  Chinese drink  which is also known as grass jelly drink. A tasty drink.( vegetarian.).   


"பாசிலை வாடா வள்ளியங் காடு."  (குறுந் .216.)

பசு+ இலை =  பச்சிலை என்றும் வரும்.
பச்சை + இலை  > பச்சிலை எனினும் ஆம்,

பாச்சா  -  முழு வலிமை  பயன்படுத்திய முயற்சி.   "பச்சை முயற்சி"   a try with no element of let up.    colloquial. 

பசுமை  ​  ஆ  =  பாச்சா.   ஆ என்பது ஒரு விகுதி. 

will edit. 

செவ்வாய், 6 அக்டோபர், 2015

நெய்யும் பையும்

ஒரு சமயம் கடைக்குப் போய் ஒரு பையில் சீமையிலந்தைப் பழங்களை (ஆப்பிள்) வாங்கி  ஒரு நெகிழிப் பையில்  (பிளாஸ்டிக்) போட்டுக்கொண்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்

பை கிழிந்து, பழங்களில் ஒன்று சாலையில் உருண்டோடிற்று. வந்த மகிழுந்து அப்பழத்தைச் சப்பட்டையாக்கிவிட்டது. அதாவது பழம் நைந்து போயிற்று,

பாலைக் காய்ச்சித் தயிராக்கி , அதைக் கடைகடை என்று கடைந்து மோராக்கி வெண்ணெய் எடுக்கின்றோம். இதையெல்லாம் செய்யும்போது பால் ஒருவகையில் நைந்துதான் போகிறது. இதை உணர்ந்த நம் முன்னோர், நைந்து உருவாகிய நெய்யை நையிலிருந்தே தோற்றுவித்தனர்.

நை > நெய்.  ( ஐ >  எ )

அல்லது:

ந ய்  > நெ ய்.  (அ -  எ )

பழங்களைப்  பைக்குள் அல்லவோ பெய்து கொண்டு சென்றேன்?   பெய்தல் -  உள்ளே இடுதல்.  இப்படிப் பெய்ய உதவுவதே பை.

பாருங்கள் :

பெய்   > பை.   ( எ > ஐ )

அல்லது 

பெய் > பய் . ( எ  >    அ )

இச்சொற்களை கவனமாக ஒப்பிட்டு நுண்வேறுபாடுகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

செய்ய உதவுவது கை.

ஆனால் 

மேற்சொன்னபடி பார்த்தால்  செய்  > சை என்று வந்திருக்க வேண்டும் அன்றோ?  பழங்காலத்தில்  சையில் தொடங்குவதில்லை.  ஆகையால், அதற்கு ஒத்து நிகழும் "கை"யில்  அது மாறியமைந்தது.  பல மொழிகளில் 
ச - க-வாக மாறும்  என்பதுணர்க.  ஆகவே சை> கை.

சேரலம்  > கேரளம் என்பதுபோல

நெய்யும் பையும் .



"அனந்த சயனம்" - chayanam

சயனம் என்றால் உறக்கம்.   எப்போதும் உறக்கத்தில் இருப்போன் என்ற பொருளில் "அனந்த சயனம்" என்ற தொடரும் வழக்கில் உள்ளது.

இங்கு,   சயனம் என்ற  சொல்லைக் கவனிப்போம்.

படுக்கையில்  சாய்ந்து படுக்காமல் எப்படி நன்றாக உறங்கமுடியும்?   நின்றுகொண்டே உறங்கி வீழ்கிறவர்களுமுண்டு  என்றாலும்,  இது போல்வன இயல்பான உறக்கங்கள் அல்ல.

சாய்(தல்) என்ற வினைச்சொல்லே  சயனம் என்பதற்கு  அடிச்சொல் ஆகும்.

சாய்+அன்+அம் = சாயனம்  என்று வரும். இதில் சா என்பதைக் குறுக்கிச் சயனம் என்று அமைத்தால், சயனம் வந்துவிடுகிறது.

இஃது ஒரு மிக்க இயல்பான புனைவுதான்.

எப்படிக் குறுகும் என்று கேட்கலாம்.  தெரியாத மாணவி கேட்டால் பொறுமையாகப் பதில் சொல்வது கடன்.

சாவு+ அம் = சாவம் என்று வரும்.  அது நனறாக இல்லை. அதை இனிமையாக்க, சா என்பதைக் குறுக்குவதே  திறமைதான். பழங்காலத்தில் பயன்பட் ட திறமை.

குறுக்கவே சவம் என்ற சொல் கிடைக்கிறது.

இதைப்போல் குறுகிய சொல்தான் சயனம் என்பதும்.

சாயுங்காலம் என்பது  குறுகவில்லை.  பொழுது சாயுங்காலம்,  சாய்ங்காலமாகியது. இதைக் குறுக்கினால் சய்ங்காலம் என்றால் நன்றாக இல்லை. எனவே முன்னோர் முயலவில்லை.


வெட்டிச் சாய்ப்பது, வெட்டி முறிப்பது என்றெல்லம் பேச்சில் வரும். கிழித்துவிட்டாய், சாய்த்துவிட்டாய் என்று கிண்டல் பேசுவதுண்டு.  இதிலிருந்து வந்த சொல்தான்  "சாய்த்தியம்"  இதில் பல சொற்களில்போல யகர ஒற்றுக் குறைந்து சாத்தியம் என்பது உண்டானது. இது முன் கூறப்பட்டதுண்டு.

திங்கள், 5 அக்டோபர், 2015

Immigration Denies Slip

காண்பதிவு தேவையில்லை  கண்டுசுற்ற  வந்திடுவீர்
வீண்கழிவு  நேரம்  விளையாதென்  ---றேணுரையே
நன்றாய் வழங்கியும்  கெட்டாரே பட்டதடை
ஒன்றுபலர்  அல்லல் உற


காண்பதிவு  =  visa;    கண்டு    சுற்ற :   நாட்டைக் கண்டு சுற்றுலாச்  செல்ல.
ஏண் உரை -   உயரிய உரை  அல்லது விளக்கம்.   .




Read this interesting turn of events.Sometimes just fated.......?


https://sg.news.yahoo.com/immigration-department-denies-chi



Immigration Department denies China visa-free slip-up



na-visa-free-slip-001100894.html

சனி, 3 அக்டோபர், 2015

பொருளுக்கேற்ற சொல்லமைப்பு

தை  என்னும் பின்னொட்டு வந்த சொற்கள் சிலவற்றை  முன் இடுகையில்  கண்டு இன்புற்றோம்,

இவற்றுள் குழந்தை என்ற சொல்லும் ஒன்று ,

குழந்தை  மென்மையானது ,  குழ என்ற அடியை  தை  என்னும் விகுதியுடன்  இணைக்கும்போது  குழத்தை என்று வல்லினம் தோன்றாமல்  குழந்தை என்று மெல்லினம் தோன்றிக் குறிக்கும் பொருளுக்கேற்பச் சொல் அமைந்தது, 

சிறிய வகைப்  பு,லியைக் குறிக்கும் சிறுத்தை என்ற சொல் காணுங்கள் ,

இந்த விலங்கு கொடியது . அதற்கு மென்மை  ஒன்றும் இல்லை.  

சிறுத்தையின் கொடூரக் குணத்திற்கேறப்  தகர ஒற்று வந்து சொல் வன்மை பெற்றது.

அர் என்பது சிவப்பு என்று பொருள்படும் அடிச்சொல்.

அர என்பதுடன் தை விகுதி சேர,  அரத்தை என்று வலித்தது காண்க.

 வேறு சொற்களை ஆய்வு செய்து  இந்த  அமைப்பழகு எந்த அளவுக்குப் பின் பற்றப்பட்டுள்ளது என்று கண்டு கூறுங்கள்.

இனிமைத் தமிழ்மொழி  எமது.




Indira Gandhi assassination

வெள்ளி, 2 அக்டோபர், 2015

அகந்தை suffix: தை

அகந்தை  என்னும் சொல்  அகம் என்ற சொல்லுடன் தை என்ற விகுதி இணைந்த சொல்லாம்.

அகம் என்பது உள் என்றும் உள்ளிருக்கும் மனம் என்றும் பொருள் படுவது. அகவொழுக்கம் அகப்பொருள் என்பவை மனத்துள் நிகழ்வன  கூறுவதும் அதற்கான இலக்கணமும் என்பது  நீங்கள்  அறிந்தவை. 

சிலவிடத்து  "அகம்" என்ற சொல்லே நின்று  அகந்தை அல்லது அகம்பாவம் என்று பொருள் தருதலும் உளது.

அகம் என்பது ஒரு பெயர்ச்சொல்.  வினைபோல இதுவும் விகுதி அல்லது பின்னொட்டுப் பெற்று  அகந்தை  என்றானது.

-தை விகுதி பெற்ற வேறு சொற்கள்:

குழ >  குழந்தை.  (மற்றும்  குழ +வி  -  குழவி )
இள >  இளந்தை   (இளமை )
வரி >   வரந்தை  (வர -  வரை;  வர> வரப்பு;  வர>  வரி > வரித்தல் ).

ஊர்ப்பெயர்களிலும் வரும்:    குடம்  > குடந்தை. -=  வளைவு,    கும்பகோணம் என்னும்  நகரம் .


-----------------------------------------------------------------------------------------------------------
அகந்தை 1akantai* 1. conceit, arrogance, haughtiness; 2. conception of individuality -> akagkAram

புதன், 30 செப்டம்பர், 2015

vASthu SASthiram

வீட்டினுள் புகவும் வெளியேறவும் வசதியான ஓர் இடத்தில்தான் வாயிலை அமைப்பான், வீடு கட்டுகிறவன்.  இதில் அவன் வெற்றிகாண்பதில் உறுதி தென்படுமானால். அடுத்து  இளம்பரிதியின் காலைக் கதிர்கள் வீட்டுக்குள் வந்து இல்லத்தில் வாழ்வோரின்  மேல் படவேண்டும், அதனால் உடல் நலத்துடன் மிளிரவேண்டும் என்றேல்லாம் விரும்புவான்.  இதற்கும் அடுத்து, வாயில் எங்கு அமைந்தால் போகூழால் புண்பட்டுப் புன்மை அடையாமல், வருவதனைத்தும் நல்ல உடல் நலமும் பணவரவுமாக இருக்கவேண்டும் என்று விரும்புவான்.. வாயில் அமையும் இடம் அதற்குத் துணை செய்யும்  என்றும் எதிர்பார்ப்பான்.

இது நல்ல நம்பிக்கையா, மூட நம்பிக்கையான என்பதல்ல கேள்வி.

இதைக்கூறும் வாஸ்து சாஸ்திரத்தில் வாஸ்து என்ற சொல் எப்படி அமைந்தது என்பதே நம் ஆய்வு.

தமிழில் வாய் என்பது பல பொருளொரு சொல். இச்சொல்லின் முன்மைப் பொருள் இடம் என்பது.
இது புகுமிடத்தையும் உட்கொள்ளும் வழியையும் குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததாகும்.

வாய்+ இல் = வாயில். (இல்லுள் புகுமிடம்)
வாய் -   இடம்;  இல் =  வீடு.
வாயில் :  இல் வாய்.

திரிபுகள்:

வாயில் > வாசல்.
ய > ச திரிபுவகை.
யி என்பதில் உள்ள இகரம் மறைந்து  அங்கு ஓர் அகரம் தோன்றியது.

வாயிற்படி > வாசற்படி : >  வாசப்படி.(பேச்சு  வழக்கு).

வாய் >  வாய்த்து  (வாயிலுக்கு உரியது)

து என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.

ஒ.நோ:  வரு > வரத்து,
முன் இடுகை (அந்தஸ்து ) காண்க.

வாய்த்து > வாஸ்து. வாயிலுக்குரிய சாத்திரம்,

இக்கலை வளர வளர வாயில் மட்டுமின்றி சுவர், தரை கூரை எல்லாவற்றையும் பற்றிக்கொண்டு விரிவடைந்தது.

( the base (foundation), column, entablature, wings, roof and dome.)








நெடிது வாழ மருந்து

எப்படி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வது என்பது எல்லோரையும் எக்காலத்தும் சிந்தனையில் ஈடுபடுத்துமொரு விடயமாகும். இப்பொருள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்து இன்புறுங்கள்:



http://www.medicaldaily.com/eternal-life-russian-scientist-anatoli-brouchkov-injects-himself-35-million-year-old-354756?rel=most_shared2


Eternal Life': Russian Scientist Anatoli Brouchkov Injects Himself With 3.5-Million-Year-Old Bacteria To Boost Longevity, Immune System

Pleasant Jaunpuri raaga

இனிமையான இராகம் யோன்புரி  (ஜோன்புரி.)     பல வடஇந்தியப் பாடல்களும் தமிழிப் பாடல்களும் வந்துள்ளன.

chandrakantha.com › Fundamentals of Rag › Film Songs

http://chandrakantha.com/raga_raag/film_song_raga/jaunpuri.shtml


A Raga's Journey — Jaunty Jonpuri - The Hindu

http://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-jaunty-jonpuri/article3408214.ece

நாதகிரத்திலும் நன்றாக இருக்கும்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

அந்தஸ்து

இன்று  அந்தஸ்து என்ற சொல்லைச் சற்று பார்ப்போம்.

இது தமிழ் நூல்களில் செய்யுளில் அந்தத்து  என்றும் வந்துள்ளது/

பல தமிழ்ச் சொற்களில் வட ஒலிகள் புகுந்துள்ளன என்பதை முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  காட்டாக  குட்டம் என்ற சொல்  குஷ்டம் என்று மாறியதைக் குறிப்பிடலாம்  (see notes 2 below)/

வட ஒலிகளுக்குரிய எழுத்துக்கள் வரின் அவற்றை விலக்கவேண்டும் என்பது செய்யுளீட்டத்து விதியாகும் . " வடவெழுத்து  ஒரீஇ"  (தொல் )   என்பது  நீஙகள்  அறிந்தது ஆகும். வடவெழுத்து  விலக்கி ச்  சொல்லைப் பயன்படுத்துக " என்பது பொருள் .  அதன் காரணமாக  "ஸ் "  நீக்கப்பட்டு   "அந்தத்து" என்று வந்திருக்கலாம் ,அன்றி  முந்துவடிவமே  அந்தத்து என்பதாகவும் இருந்திருக்கலாம்,
  
(வட ஒலிக்குரிய ஆனால் அதற்குத் தமிழர் அமைத்த   எழுத்து   " வடவெழுத்து"      எனப்பட்டது.   தேவ நாகரியைக் குறிப்பிடவில்லை)  . 

  எதுவாயினும்  ஆய்வு  தொடர்வோம்

இச்சொல்லில்  முன் நிற்கும் சொல்  அம்  என்பதாகும்    இது அழகு என்று பொருள் படும் .  அம்மை  அழகு .

இனி  தத்து அல்லது தஸ்து   (see notes,  1 below).

வரு என்பது வரத்து என்று  பெயரானது.   நீர் வரத்து போக்குவரத்து என்று வருவன காண்க.

அதுபோல தகு > தகத்து எனவரும்.  அப்படியென்றால் தகுதியானது  என்று பொருள்.

மேலும் தகதக என்பதும் ஒளிவீசுதற் குறிப்பு ஆகும்.

ஆகவே அம் தகத்து எனின்  அழகிய தகுதி யுடையது, அல்லது ஒளி வீசுவது என்று ஆகும்.

தகத்து என்பது இடைக்குறைந்து தத்து ஆகும்.  அகரத்துக்கு அடுத்த ககரம் குறைவது பெரும்பான்மை,

அகங்கை என்பது அங்கை ஆகிறதல்லவா? 

த என்பதில் ஈற்றில் அகரம்.  அதுவர ககரம் மறைவு எய்தியது.

எனவே அந்தகத்து  அந்தத்து  ஆனது.

இது பின் அந்தஸ்து என்று திரிந்ததில் வியப்பில்லை.




-------------------------------------------------------------------------------------------------------------
notes:  


1     தகு   >  தகம்   >    தகத்து 
See also examples given by Tamil Lexicon:  அது ஒரு தகத்தான இடம் .    அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது?      தகத்து,  இங்கு பெருமை.

தகப்படு-தல் taka-p-paṭu-
, v. intr. < தகு- +. To be eminent, distinguished; மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80).


2  உயர்த்தி >  உசத்தி  > ஒசத்தி  >  ஒஸ்தி 

பிற திராவிட  மொழிகளிலும் இப்போக்குக்  காணப்படுகிறது.  

3   இவ்விடுகையையும் வாசிக்கவும்.    தழு என்ற சொல்லினை அடியாகக் கொண்டு இங்கு விளக்கப்பட்டுள்ளது.    தழு என்பதும் தகு என்பதற்கு  ஈடானதே     ஆகும்.      எடுத்துக்காட்டு:     தொகுதி =  தொழுதி.


http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_22.html 



will edit

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வள்ளுவரின் காலம்

வள்ளுவரின் காலம் யாது  என்ற ஆய்வு இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.  மணிமேகலைக் காப்பியத்தில் வள்ளுவரின் குறள் மேற்கோளாகக் காட்டப்பெற்றிருப்பதனால் திருக்குறள் நூல் மணிமேகலை  சிலப்பதிகாரம் முதலியவற்றுக்கு  முந்தியது என்று அறிஞர் முடிவு செய்தது சரிதான் , கண்ணகிக்குச் சிலை வைத்தபோது சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் பல கனவான்கள் கலந்துகொண்டனர்.  அவருள் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும்  இருந்தான்.  அவன் காலத்தை வைத்து வள்ளுவர் ஏறத்தாழ  ஈராயிரம் ஆண்டுகட்கு முந்தியவர் என்று அறிஞர் சிலர் முடிவுக்கு வந்தனர் 

ஆனால் இது சிலருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.  திருவள்ளுவருக்கு இரண்டாயிரம்  ஆண்டுகளா?  வேறு மொழிச் சார்பினருக்கு இதை மறு ஆய்வு செய்யத் தோன்றியது.  இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் ஒன்றுக்கு மேற்பட்ட  அரசர்கள் இருந்திருப்பதால்  அதில் கடைசியானவரை  எடுத்துக்கொண்டு வள்ளுவரை   ஆயிரம் ஆண்டுகள்   பின்தள்ளினர் .

இதில் குற்றம் ஏதும் இல்லை . ஆனால் தமிழ் இலக்கியத்தை முழுமையாக நோக்கும்போது பொருத்தமாக இல்லை


பேராசிரியர்  வையாபுரிப்பிள்ளை   , வள்ளுவர்   காலத்தைக் கண்டுபிடிக்கப்  புதிய  வழியொன்றை  மேற்கொண்டார்.  திருக்குறளில்  வந்துள்ள வடசொற்களாகக்  கருதப்பட்டவைகளை  எடுத்துக்காட்டி,  "ஆகவே   வடசொற்கள்  மலிந்துவிட்ட பிற்காலத்தவர்  வள்ளுவர் "   என்ற முடிவுக்கு வந்தார்.  அவர் சங்க காலத்தவர்  அல்லர் என்றும்  சொன்னார்.

முதற்குறளிலேயே வடசொற்றொடர் என்றார்.

ஆதி என்பது   ஆதல்  என்ற வினையடியாகப் பிறந்த சொல்.  ஆக்க காலம் என்று பொருள்.

பகவன் என்பதோ,  பகு > பகவு என்று அமைந்த  சொல்லின்  மேல் அன் என்னும் ஆண்பால் விகுதி ஏறிய சொல்.   பகவான் என்பது வேறு.

  

thirukkuRaL some verses


அரும் பிழைகள்


போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.
693.

போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

யார்க்கும் = எவருக்கும்;

அரிது= கடினமாகப் போய்விடும்

என்றவாறு.


அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.

அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
Even one such fault will be enough to destroy you!!


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல;
நாணுடைமை மாந்தர் சிறப்பு.1011



ஊண் = உணவு; உடை = ஆடை; எச்சம் =( உயிர்களுக்கு) உரிய பிற; உயிர்க்கெல்லாம் = உயிர்களுக்கெல்லாம்; வேறு அல்ல = ஒன்றேதான்;

நாணுடைமை = தகாதவை மனம், மொழி, மெய்களில் தொடர்பு படுதலை எண்ணி வெட்கி விலகுவது;

மாந்தர் = மக்கள் ஆவார்தம் ;

சிறப்பு = வேறுபடுத்திக் காட்டும் உயர்வு ஆகும்.

சில ஓலைச்சுவடிகளில் எச்சம் என்பது அச்சம் என்று உள்ளதாகக் கூறுவர் ஆய்வாளர்



20th January 2011, 02:23 PM

#463

which is its permanent residence?

ஒரு நாளைக்கு ஒன்று என்று குறளை ஓதலாம் என்றாலும், வாழ்வின் அன்றாட செயல்பாட்டு நெருக்கடிகளால், அதுகூட முடியவில்லை. ஆகவே நல்ல நூல்களை மிக முயன்று படிக்கவேண்டியுள்ளது.

இப்போது ஒரு குறளை ஓதியறிவோம். உடம்பில் உயிர் எங்கே இருக்கின்றது என்று அறிய முடிவதில்லை. நெஞ்சிலா? தலைப் பகுதியிலா? வேறு எவ்விடம்...என்று தேடிப் பார்க்கிறோம்.

உடலில் இருந்துவிட்டு, என்றாவது ஒருநாள் ஓடிவிடுகிறது...எங்கே போய் விடுகிறது?

இதையும் அறிய முடிவதில்லை.

நிலையான வீடு அமையவில்லை, உயிருக்கு!

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340.
B.I. Sivamaalaa (Ms)


28th January 2011, 03:46 PM

#464





bis_mala



Senior MemberSeasoned Hubber

Join Date Oct 2005 Location My Posts 1,790 Post Thanks / Like




How to avoid affliction, sorrow, distress, trouble, etc.....

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - 628

இன்பம் எனும் ஒன்றை விரும்ப மாட்டான்; துன்பம் என்பது என்றும் எங்கும் எவர்க்கும் வருவதுதான் என்பான்; அத்தகையவன் என்றும் துன்புறுவதில்லை.

துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்பதறிந்தால், பிறகு துன்புறுதல் இல்லையே!.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்கிறார் மணிமேகலையில், சாத்தனார். அது வேறு கருத்து அன்றோ? (just from memory....). Check the book for accuracy.

Will edit
























வியாழன், 24 செப்டம்பர், 2015

Spicy food very good



மிளகாய் மிளகுநச்  சீரகம்  மல்லி 
அழகாம் உடலுக்கே ஆமே ----  இளகா 
உரத்தோ டுலவ  உலகில்நூ  றெட்ட
நரத்துக்கு வேறில்லை நாடு,  



அழகாம் உடலுக்கு  --அழகு வேண்டும் உடம்புக்கு;
ஆமே  -  வேண்டியவை  நடக்கும்  
நரம் =  மனிதர் . நாடு =  தெரிந்துகொள் 






http://www.ba-bamail.com/content.aspx?emailid=16793

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

முக்காடு,

விகடம் என்ற பதத்தை  முன் இடுகையில் கூறியவாறு வடமொழி வழியாகக் காட்டாமல் தமிழிலேயே காட்டுவோம்:

விழு+ கடம் :  விழுகடம்>  விகடம்.

இதில் ஒரு ழு மறைந்துள்ளது.  விழு என்ற சொல்லை வி என்ற முன்னொட்டாகக் காட்டி கடம் என்று கொண்டு சேர்த்தாலும் அதன் உள்ளீடு தமிழ் என்பதை மறைக்கமுடியவில்லை

விழுகடம் என்பதில் ழு மறைவது ஓர் இடைக்குறை.

இயல்பு கடந்து விழுமியதாக நிற்பது என்று பொருள்.  வழக்கில் இது நகைச்சுவையைக் குறிக்கிறதன்றோ?

வேங்கடம்  என்ற சொல்லிலும் கடம் உள்ளது,  கடத்தல் அரிய வெம்மையான  இடம் என்பது பொருள்  கட  அம்  கடமாயிற்று,

இப்படி இடை ழுகரம் மறைந்த சொற்கள் உள ;   இன்னொன்றைப் பார்ப்போம்.

ஆடு >  ஆடை;  இங்கு ஆடை என்பது விகுதி பெற்ற தொழிற்பெயர்,

ஆடு என்பது  மட்டுமே நின்று பெயரானால் அது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும் /

முழுக்கு  ஆடு :  முழுக்காடு >  முக்காடு,  அதாவது தலை முழுவதும் மூடிய  ஆடை;   தலை முழுக்காடை.   முக்காடு என்ற சொல்லுக்கு  இறுதி  ஐ விகுதி 
தேவைப்பட வில்லை;  ஆடு என்ற தனிச்சொல் மட்டும்  ஆடையைக் குறிக்கவருமானால் பொருள் தெளிவின்றிப் போமிடங்களும்  தோன்றுதற்கு வாய்ப்பு  உண்டு . முக்காடு என்பதில் அவ இடையூறில்லை/

பிற பின் 

விகட

வடமொழி  எனப்படும் சங்கதத்தில் முன்னொட்டுக்களாம் துணைச்சொற்கள்    பல . சில முன் கண்டோம்.  

இன்னும் ஒன்று காண்போம் .

விழு-  என்னும் சொல் சிறப்பு குறிக்கும்.   விழுமியது என்றால் சிறப்பானது என்பதாம். இச்சொல்லின் முதலெழுத்து மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

விகட  :   exceeding the usual measure.  (and other meanings).

வி :  சிறப்பு.

கட  என்பது  கடந்த நிலையைக் குறிக்கிறது.

எனவே  விகட என்றது  சிறப்பாகக் கடந்தது என்று பொருள் .

இன்று காட்டப்பெற்ற சொல்லின் இரு கூறுகளும் தமிழிலிருந்து  எடுக்கப்பட்டு அமைந்தவை. ஆகும் .

இங்ஙகனம்  பல உள . 



ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

source of prefixes



தமிழில் பின்னால் கொண்டு ஒட்டப்பெறும் விகுதிகள் அல்லது பின்னொட்டுக்களே மிகுதி என்பது உங்கட்குத் தெரிந்ததே. தமிழிலும் முன்னொட்டுக்கள் உள்ளன எனினும் அவை
மிகக் குறைவே. ஏனைப் பிற்கால மொழிகளில் அவை பல்கிப் பெருகின. முன்னொட்டுக்கள்  பிற்காலப் புனைவுகள் என்று கொள்வதே சரியென்று தெரிகிறது.

கிராமம் என்ற சொல், சிற்றூர் என்று பொருள்படுவது. சிறிய ஊரைக் குறிப்பதற்குத்  தமிழில் பல சொற்கள் உள. (   ஊர்ப் பெயர்களை ஆராய்ந்தால் இது புரியும்.)  அவ்வசதி இல்லாத அல்லது குறைந்த  மொழியில் அதனை ஏற்படுத்தவே வேண்டும். எப்படி?

குறு” என்பது குறுமை அல்லது சிறியது எபதைக் குறிக்கும் சொல். இதை இன்னும் குறுக்கி. கு- என்று வைத்துன்க்கொள்ளுங்கள் .

கு + கிராமம் > குக்கிராமம்.

இதில் கு என்பது தமிழ்; கிராமம் என்பது அயல்.

அல் என்பது "அல்லாதது" என்று பொருள் படும். அல்ல, அன்று, அல்லன், அல்லள், அல்லை என்ற பல இதை அடியாகக் கொண்டவை.

இது:

அல் +திணை = அஃறிணை;
அல் + வழி = அல்வழி.

என்று முன்னொட்டாக நின்றது.

இது லகர ஒற்றை இழந்து பின் "" என்று மட்டும் நின்றது. அந்த நிலையில்:

+ நியாயம் = அநியாயம்;
+ க்ரமம் = அக்கிரமம்;
+ நீதி = அநீதி.

எனப் பல சொற்களில் முன்சேரும். அது முன்னொட்டாகி விட்டது.

unforeseen  என்பதில் அது இல்லையா?  அல் >  un

அல் என்ற தமிழ்ச்சொல் உலகிற் பல மொழிகளில் சென்று சேர்ந்துள்ளது.

இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினரே இதை முழு மூச்சாகப் பலவேறு வகைகளில் கடன்கொண்டனர்


=====================================================================

for authorls   use

note vivaram


re-edited after the appearance of  certain errors not in the original.








வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முழுச்சொற்கள் புணர்ச்சியும் சொற்புனைவுத் திரிபுகளும்

இதைப்பற்றி  ஆங்காங்கு சொல்லமைப்புக்களை விரித்துரைக்கும்போது குறிப்பிட்டிருக்கிறோம்.  என்றாலும் இங்கு மீண்டும் விளக்குவதில் தவறில்லை என்று நினைக்கிறோம்.

இப்போது "மக்கள் "  என்ற  பழந்தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் தமிழிற் பண்டை நூலாகத் திகழும் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சொல்லில்  பிரிக்குங்கால் முன் நிற்பது  மக என்ற அடிச்சொல்லே.  மக என்பது  தாய் தந்தையிலிருந்து  பிறந்தது என்று பொருள் தரும்.

மக என்பதனுடன் "கள்" என்ற  பன்மை விகுதியைக் கொண்டு சேர்க்கும் போது 

மக + கள் =  மகக்கள்  என்று வரவில்லை.

மக்கள்  என்றே வந்தது.

ஏன்  மகக்கள்  என  வந்திலது  என்று  கேட்க வேண்டும். 

கள் என்பது ஒரு விகுதியாக இல்லாமல் முழுச்சொல்லாய் இருந்தால், இரு முழுச்சொற்கள்  ( நிலைமொழியும்   வருமொழியும் ​)  புணரும் புணர்ச்சியாக  இருக்கும்.  அப்போது  "மகக்  கள் "  என்று வருவதே சரி . கள் என்பது ஒரு குடிபொருள் ஆதலின்  மகக் கள்  என்பது  பிள்ளைக்குரிய குடிக்கும் கள் என்று 
பொருள் போதரும்.

கள் என்பது விகுதியாதலின் மக​ + கள் =   மக்கள் என்றே சொல் அமைந்தது.

இதேபோல்  மக+ அன்  என்பது  மகவன் என்னாது  மகன்  என்றே வரும்.  மகவன் என்று வகர உடம்படு மெய் வராது, 
வந்தால் "மகவினை  உடையோன் "  என்று பொருள்தரும். வேறு சொல்.

இதேபோல் :

அறு +  அம் -=  அறம். (தருமம் )
அறு + அம்  =  அற்றம். (தருணம்)

விகுதிப் புணர்ச்சி நிலைமொழி வருமொழிகளின் புணர்வின் வேறுபட்டதென்று  உணர்க.




வியாழன், 17 செப்டம்பர், 2015

அட்டணம் "தளவாடம் "


அட்டணம்  இச்சொல்  தமிழில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை, சங்கதத்தில் இது போர்க் கருவிகளைக் குறிக்கிறது.

அடு+ அணம்  =  அட்டணம்    ஆகும்,

அடுதல் -  பல பொருள் உள்ள சொல்.  சமைத்தல்,  நெருப்பில் இட்டுச்  சூடேற்றுதல்   என்பவை மட்டுமின்றி,    எதிரியை வெல்லுதலும்,  வருத்துதலும்  இதன் பொருள்.

போர்த் தளவாடங்கள்  வெல்லவும் வருத்தவும் உதவும் கருவிகள் ஆதலின் அட்டணம்  இப்பொருளைப் பெற்றது.

அடுதல்  வினைச்சொல்.  அணம்  என்பது தொழிற்பெயர் விகுதி

அடுதல்  என்ற வினை   முதனிலை  நீண்டு  ஆடு என்று தொழிற்பெயராகும்

தளவாடம் :.

தளத்தில்   வைக்கப்பட்டிருக்கும்  கருவிகள் அல்லது பொருட்களுக்கு  "தளவாடம் " என்பர்.

தளம் + ஆடு+ அம்  > தளவாடம் .     வகர உடம்படுமெய்  பெற்ற சொல். முதலில்  போர்க்கருவிகள் என்று பொருள்தந்த இத்தொடர்,  இப்போது பொதுப்பொருளில்  "உதவும் பொருட்கள் "  என்று  பொருள் விரிவு கண்டுள்ளது..


புதன், 16 செப்டம்பர், 2015