திங்கள், 30 செப்டம்பர், 2024

சாமி என்பது சுவாமி என்பதன் திரிபா?

 சாமி என்பது சுவாமி என்பதன் திரிபா என்பது ஒரு கேள்வியாகும்.  

சுயம் என்ற சொல்லுக்கும் சொந்தம் என்பதில் உள்ள சொ(சொம்) என்ற அடியே தோற்றுவாய் ஆகும்.  சொ என்றால் சொந்தமாகவே தோன்றியது என்றும் பொருள் . இறைவன் அல்லது கடவுள் என்பவர் தானே தோன்றியவர் ஆவார். அதாவது அவர் கருவில் வளர்ந்து காலம் நிறைவாகிப் பிறந்தவர் அல்லர்.

தானாகத் தோன்றினாலும் இவ்வாறு கூறுகையில் அதற்கும் ஒரு தோற்றமுண்டு என்று புரிந்துகொள்ளப் படக் கூடும். அப்படியானால், ஒரு தொடக்கம் உண்டு.  என்றுமிருப்பது என்றால் தோற்றம்கூட இல்லாமை. ஆதி பாரா சக்தி என்று சொல்லப்படுவது இத்தகைய தெய்வம் என்பது இந்தப் பெயரிலிருந்து தெரிகிறது.  ஆதி பரா சக்தி என்றால் தொடக்கமற்ற பரம் பொருள். பரம் என்றால் பரந்து எங்குமிருப்பது. பரம்பொருள் என்றும் கூறுவர். காலம் இடம் என்ற இரண்டும் பரம்பொருட்கு இல, இவை இருந்தால் அவர் அவற்றுள் இயங்குவாரல்லர்.

சொ என்பது அடியாதலால். சொ+ அம் > சொயம் (.>சுயம்)  ஆகிறது. சொ திரிந்து சுகரம் ஆகி, சு+  அம் + பு  ஆகி,  சுயம்பு என்றாம்.  இவ்வாறே  சு+  ஆகும்+ இ. ஆகும் என்பது குகரம் கெட்டு அல்லது நீங்கி,  சு+ ஆம் + இ >  சுவாமி ஆகும். இங்கு வரும் வ என்பது வகர உடம்படு மெய்யுடன் அகரம் வந்த இயைபு ஆகும்.  வ்+ அ.

இல்லங்களில் சொந்தம்  ( சொ) என்றிருந்தது கும்பிடுமிடங்களில் சு என்று திரிந்து,  அதனுடன் அமைப்பு குறிக்கும் அம் இணைந்தது.  சு+ அம் > சு+ ய்+ அம்> சுயம் ஆகும். இவற்றிலெல்லாம் ஐரோப்பியக் கலப்பு ஒன்றுமில்லை. வீட்டில் சொ என்றது கோவிலில் சு என்று வழங்கியது. யாரும் வெளியிலிருந்து கொண்டுவரவில்லை.  இந்தச் சொற்களும் அங்கு இல்லை. அப்புறம் எவன் கொண்டுவந்திருப்பான்?


சொ என்பது சு என்று திரிந்ததற்கு ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பயணம் தேவை இல்லை.  வெளியிலிருந்து வருகிறவன், அவனது அன்றாடச் சொற்களையே கொண்டுவந்திருப்பான்.

ஆகவே சாமி என்பது சாமிகும்பிடுதல் என்ற தொடரிலிருந்து பிரிந்து தனியானதாகவே உள்ளது.  சாய்> சாய்மி> சாமி.   சாய்மி> சாமிகும்பிடுதல். தலைசாய்ந்து கும்பிடுதல்.

சுவாமி என்பது சுயாமாய் ஆனது என்று பொருள்படும் இன்னொரு சொல். சு = சுயமாய்,  ஆம்=  ஆகும்,  இ - இது.  சு ஆம் இ > சுவாமி  ஆகும். படைக்கப்படாத ஒன்று. என்றுமுள்ளது.

இருவேறு சொற்களாய்ப் பொருட்சிறப்புடைய சொற்கள்.

சமஸ்கிருதம் தொழுகை இடங்களில் உருவாகிய மொழி. வெளிமொழி அன்று.

வீட்டு மொழி தொழுகைத் தலங்களில் திரிந்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்,



-------------------------------------------------------------------------


பரமண்ணர் > பரமணர் > பிராமணர் பொருள்: பரமனோடு நெருங்கியவர்.

அண்  அண்மை நெருக்கம்.

பிராமணர் தரைத்தேவர் என்ற கருத்துடன் இஃது ஒத்தியல்கிறது.

பரம் அன்னர் > பரமன்னர்>  பிராமணர்.  பொருள்:  கடவுள் போன்றவர்.

அன்ன -  போன்ற.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

காலை வருக மாலை வருக

 காலை போயின்

மாலை ஏகின்

அன்பும் மாறுமோ ---- வளர்

பண்பும் தீருமோ.


காலை வணக்கம்

கருதும் காலம்

கோலமாகுமே இன்ப

மாலை போலுமே.


தேன் கலந்த 

திங்கள் காலை

வானில் நிலவுபோல் நெஞ்சின்

வசமும்  ஆனதே


அன்பு தந்த

ஆசைப் பேச்சும்

உண்மை லஞ்சமோ பெற்று

நெஞ்சம் கொஞ்சுமோ?




வந்து பார்த்த 

உன்றன் கண்கள்

என்றன் சொந்தமே----வேண்டும்

கொண்ட பந்தமே.


நினைத்தென் கண்கள்

இணைத்த நேரம்

கருத்தில் கலந்ததே --- தென்றல்

காற்றும்  மலர்ந்ததே


பந்தம் எதுவும் இல்லை.  சும்மா வணக்கங்களை தெரிவித்துக்கொண்டோம்.

அனபர் ஒருவருக்கு -   காலை வணக்கம் மாலை வணக்கம் என்று எழுதிக்கொண்டிருந்த பொழுது சில அழகிய வார்த்தைகள் எழுத்தில் வடிந்துகொண்டிருந்தன.  அவற்றை எல்லாம்  பொறுக்கி எடுத்து ஒரு கவிதைபோல் எழுதியுள்ளோம் இதனை நேயர்கள் திறனாய்வு செய்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.. நன்றி.  சிவமாலா.

சனி, 28 செப்டம்பர், 2024

அரசு என்ற சொல் அமைவு

 அரசு என்ற சொல்லின் ஆய்வு இப்போது நிகழ்த்துவோம்.

அரசு என்பது மக்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு அல்லது அருகிலிருந்து பாதுகாப்பு வழங்கும்  ஒரு தலையுறுப்பாகவே அறியப்பட்டது ஆகும். இந்தப் பொருளை அரசு என்ற சொல்லினின்றே எடுத்தறிவோம். பண்டு மக்கள் கூட்டமாக ஓரிடத்தில் வாழத் தொடங்கிய காலத்து,  அவர்களுக்குத் தலைமை தாங்கிய ஒருவரோ அல்லது குழுவாரோ  மக்களிருந்த இடத்திலே தான் இருந்தனர். இந்த வரலாற்றை  அரசு என்ற சொல்லே தெரிவிக்கிறது. அதாவது காவல் தருவோர் காவல் பெறுவோரின் அருகில் இருந்தனர். 

அருகில் என்றால் இடம்  அருகில் என்று மட்டும் பொருளன்று, "ஆட்சி அடைவுகள் சென்று, பெறும் மக்களைக் கட்டுகின்ற,  இறுக்கம் செய்கின்ற அளவில்" என்றும் பொருளாகும். இத்தகு திறன், ஆட்சிக்குழுவின் தன்மைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப வேறுபடுவது ஆகும்.  இடத் தொலைவு அல்லது அஃது அன்மை, மாற்றமில்லாது இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். There are two factors we have enumerated, one  constant and the other variable according to prevailing circumstances.

இதை விளக்கும்போது:  "இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் வரம்பு"  என்பார் தொல்காப்பியர். உரியியற்குக் கூறினாரெனினும் சொல்லியலுக்கும் ஏற்றதிதுவாகும்.

இப்போது அரசு என்ற சொல்லைக் கவனிப்போம்.

அரு  + அ + சு,  இவற்றைச் சந்திப்படுத்த,  அரசு என்ற சொல் வந்துவிடுகிறது.

அரு என்பது  ஒருபால் தொலைவின்மையைக் குறிக்கிறது.  அரு > அருகு(தல்) :  பக்கத்தில். அரு என்ற ;பகவு, அதிகாரம்  தொலைவு என்ற இரண்டினுக்கும் பொதுவானது ஆகும், அர் என்பது அருகு, அரட்டு என்ற இரண்டினுக்கும் பொதுவான பகவு ஆகும்..

அ  என்பது சுட்டுச்சொல். இங்கிருந்து என்பது சொல்லாமலே விளங்குவது.  அ என்பது இடத்தொலைவும் கடந்து ஓரிடத்து முடிவதைக் காட்டுகிறது.  ஆட்சி அதிகாரம் என்பதைக் கருத்தில் கொண்டால் அதன்பொருள், எங்கு முடிகிறதோ அவ்விடம் குறிப்பது தான்.   அ என்னும் இது சுட்டுச்சொல், மறக்காதீர்.

சு என்பது அருமையான ஒரு விகுதி.  ஏனென்றால் ஒரு விகுதியாக இருத்தல் மட்டுமின்றி  அது தொலைவுச்சுருக்கத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது.

சு -  சுருக்கம்.

உகரத்தில் முடியும் சு விகுதி சேர்க்கும் சிறப்பு ,  எல்லை 'முடிவிடமானது,' 'முன்னுள்ளது' என்பதையும் குறிப்பால் உணர்த்தவல்லது.

ஒரு சொல்லுக்கு ஒரு விகுதி இணைப்பதென்றால் இப்படியன்றோ அமைக்கவேண்டும்.    தமிழை ஆழ்ந்து கற்கவேண்டும்.  பக்கத்துக் குப்பைக் கருத்துக்களைக் கொண்டுவந்து பொருண்மை அற்றவற்றை இணைத்துக் கூறலாகாது.  இதையறிய வரலாறு செய்யும் உதவி --- இல்லை அல்லது சிறிதாகவே இருக்கலாம்.

ஆகவே  ஆள்வோர் இடம், காவலுறுவோர் இடம்,  ஆட்சி எல்லை எல்லாம் அரசு என்ற சொல்லுக்குள் அடங்கிவிட்டது. அரசு நடைபெறுவித்தல் என்பதற்கு இவையெல்லாம் கூறுபாடுகள்.  மீண்டும் படித்துத் தெரிந்துகொள்ளவும்.

The ruler, the ruled, the space or area under that rule, the boundary all are indicated in the word itself.

நேரம் கிட்டுங்கால்,  அங்கம் என்ற சொல்லையும் விளக்குவோம். இணைந்திருங்கள்.

அரசு என்ற சொல் உலக முழுமைக்கும் சுற்றிவந்து எந்தெந்த வடிவம் கொண்டாலும்,  ராஜ், ராஜா, ராவ், ராவுட் என்று எப்படித் திரிந்தாலும் இந்தப் பொருண்மை திரிபுச்சொற்களில் கிட்டாது என்று உணர்ந்துகொள்க.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் ஒல்காப் பெரும்புகழ்த்  தொல்காப்பிய முனி.  தொல்காப்பியம், உரியியல், 96


இயன்ற மருங்கின் இனைத்து என அறியும்

வரம்பு தமக்கு இன்மையின் வழி நனி கடைப்பிடித்து

ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான்

பாங்குற உணர்தல் என்மனார் புலவர். தொல்  உரி  98

இவ்வளவும் தமிழால் உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.