செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

அகுஸ்த > அகஸ்த. A

ஓர் உகரச் சொல் அகரச் சொல்லாக மாறும் என்று கழறுவோம்.

என்ன ஆதாரம் என்று  நீங்கள் கடாவலாம்.

விடை காணமுடியாக் கடாவன்று இது.

ஐரோப்பிய மொழிகளிலும் இத்தகு மாற்றங்களைக் காணலாம்.

ஆங்கிலத்தில் பாருங்கள்: உப்பர் என்று எழுதிக்கொண்டு அப்பர் என்றன்றோ  வாயிக்கின்றனர்!  ( வாசிக்கின்றனர்:  ய~ ச திரிபு). upper.
இதிலிருந்து யாது தெரிகின்றது?   உகரத் தொடக்கம் அகர மாகும்.
உண்டர் என்றே எழுதிக்கொண்டு அண்டர் என்கின்றனரே!  under.

அதேபோல்தான் குட்டை என்பதும் கட்டை என்றும் வரும்.

குட்டையன் >  கட்டையன்.  க்+ உ =  கு;  க்+ அ =  க.

அகத்தியர் என்பார் குள்ளமுனி.

அகத்தியரை அகஸ்தியர் என்பார் புலவர் சிலரேனும்.

அகஸ்தஸ்  (அகத்தர்,  அகத்தியர்)

குட்டை >  கட்டை; குஸ்த > கஸ்த.

அகுஸ்த > அகஸ்த. AUGUST

ஐரோப்பிய மொழிகளில் இவை இரண்டுமே augustus  ........  என்று
வரவில்லையோ?

குஸ்த என்றால் குட்டை; கட்டை.

அவர்தான் குள்ளமுனி.    குட்டை = குள்ளம்.

குளம்பி அருந்திக் கிளம்புங்கள் வேலைக்கு.

குள்ளமுனி புகழோ மிக்க விரிவுடைத்தே.  அகஸ்த என்ற சொல்லுக்கே மிக்க மதிப்புக்குரிய என்ற பொருளும் உளதன்றோ.


அகஸ்திய :  அகஸ்டஸ்(இலத்தீன்):  அந்தக் குட்டையன்.
அ=  அந்த;   கஸ்த=  கட்டை(யன்).

குட்டை> கட்டை; குஸ்த > கஸ்த‌.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுந்தரி > சுந்தரன்

அரி என்றால் அழகு. இந்தச் சொல்  எப்படி அமைந்தது?

எல்லாம் கண்ணுக்கு அழகாய் இருப்பதில்லை. பல, இயல்பாகவே உள்ளன. ஆனால், பத்தில் ஒன்றிரண்டு மிக்க அழகுடையவாக‌
உள்ளன. இவை அரியவை.  அருமையானவை.

அரு>  அரி.  (அரு+ இ).

அழகில் மனிதனை உந்திவிடும் அழகும் உண்டு. கவர்ந்திழுக்கும்  அழகும் உண்டு. பருகும் பான்மையிலான அழகும் உண்டு  ----  என்று   பலர்
வரணனை செய்வர்.

உந்தும் அழகு:  உந்து + அரி.  இது உந்தரி  என்றாகும்.

உந்தரி >  சுந்தரி.  (   அகர  வருக்கம் சகர  வருக்கமாதல் )
சுந்தரி :  அழகி.
சுந்தரம் : அழகாகிய தன்மை.

சுந்தரி > சுந்தரன். (ஆண்பால்).

சில சொற்களுக்கு ஆண்பால் இல்லை. ஊர்வசி >  ஊர்வசன் என்று
காணமுடியவில்லை. அப்படி ஒருவன் கதைகளில் வரின் காண்க.




உக என்பது சுக > சுகம்

குணக்கி லிருந்துவரு கொண்டலே
தடவினை நீ என்னை,
உடலினில் சுகம் எத்துணை

என்று ஏதாவது ஒரு கவி எழுதலாம் என்று பார்த்தேன்.  என் சாளரத்தில் நின்று நோக்கின் இனிய கிழக்குக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இப்படி
எழுதினால், பலருக்குப் புரியவில்லை. அவர்களுக்காக எளிய சொற்களையே போட்டு எழுதினால் நாம் சொல்வதை எளிதில் அறிந்து
இன்புறுவார்கள்.. ஆனால் புதிய சொற்களைத் தெரிந்தின்புற வழியில்லை.

குணக்கு :  கிழக்கு
கொண்டல் : கிழக்குக் காற்று,

கொண்டல் என்பதே கிழக்குக்காற்று.  ஆக குணக்கிலிருந்து வரு
என்ற சொற்கள் தேவையற்றவை என்று சொல்லலாம்;  கொண்டல்  ~
சொற்பொருள் விளக்கத்திற்காக வேண்டுமானால் அப்படி எழுதலாம்

நான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு வேறு யாதோ மொழிந்துகொண்டுள்ளேன்.  ஆம்: உகத்தல் எனில் விரும்புதல்..
உக என்பது சுக >  சுகம் ஆகி விரும்பும் நிலையைக் குறிக்கும்.
அடு > அட்டி > சட்டி போல. அடுதலாவது சுடுதல். எனவே சட்டி
சுடவைக்கும் பாத்திரம். அகர முதலான சொல் சகர முதலானது.
அகர முதல் வருக்கமனைத்துக்கும் இது பொருந்துவது.  ஆக,
உகந்த நிலை  குறிக்கும் உக > சுக > சுகம்.        உகந்த >  சுகந்த,
சுகந்த சிருங்கார் என்ற ஒரு பத்தி இருந்ததாகக் கேள்வி.

will edit