புதன், 25 நவம்பர், 2015

RSS

மாட்டைக் காக்கப் போனதனால் 
கோட்டை பறிபோய் விட்டாலோ 
நாட்டை நடத்தத் தகுதிதரும்
சீட்டைப்  பெறல்பின் எளிதாமோ?    

செவ்வாய், 24 நவம்பர், 2015

போட்ட குப்பையிலே.....

நீங்கள் போட்ட குப்பையிலே
நெளிகிற பூச்சி  புழுக்களையே
நீங்கள் வெறுத்த போதிலுமே
உங்களை வந்தே சேர்ந்திடுமே.

மழையின்  நீரும் ஓடாமல்
வெள்ளப் பெருக்கால் கேடாமே!
உளையும் சகதியும் மிதமிஞ்சி
ஊர்க்குள் உயிர்கள் வதமாமே

ஏரியுள் கழிவுகள்  சேராவேல்
என்றும்,குடிக்க  நீராமே
மாரியும் உம்மைக் காப்பாளே
மாய்க்கும் நோய்களைத் தீர்ப்பாளே!

ஏரியுள் கூளம் எறிந்தாலோ
எடுத்திடச் செலவு  தெரிந்தாலோ.
காரியம் நல்லது கைக்கொள்வீர்
கடமை இதுவென மெய்சொல்வீர்.:

சிவனும் சிவப்பாலமும்

இந்த சிவப்பாலம் என்பது  சிங்கப்பூரில் கம்போங் ஜாவா சாலையில்  (road)  இருந்த ஒரு பாலம்.   சிவ எனும்  அடைமொழி பெற்றிருந்ததால் அங்கு சிவன் இருப்பார் என்றோ சிவன் கோயில் இருக்குமென்றோ  நினைக்காதீர் .  அது ஒரு சிவப்புச்  பூசிய பாலமாக இருந்ததுதான் காரணம்.  மலாய் மக்கள் அதை  Jambatan Merah என்று  கூறினதால், அதை மொழி பெயர்த்து  சிவப்புப் பாலம் என்றனர் தமிழர் .   அப்புறம்  அது  சிவப்பாலம்  என்று  குறுகி  அமைந்தது.  (மரூஉ )  jambatan  பாலம்    merah  சிவப்பு.

மலாய்க் கம்பங்கள்  அல்லது சிற்றூர்கள்  அருகிலிருந்தன.  இப்போது  இவைகள் அங்கில்லை.   பாலத்துக்கு வேறு  சாயம்  பூசியவுடன்  அங்கிருந்த merah puteh gang ( a secret society)  செங்கருமைக்  குண்டர்  கோட்டியினர்  எங்கு போயினர்  என்பதை யாரும் அறிந்திலர்.  குண்டர்கள்  தங்கள்  மண்டர் தகுதியை இழந்தனர் போலும். ( மண்டர்  {தமிழ் }-  champions.     திவாகர நிகண்டு காண்க.)

ஏன் வேறு சாயம் பூசினார்கள்?   ஒன்றுமில்லை;    இருந்த சாயங்களைப் பூசி
இனிமை  காண்பதற்கே.  கட்டுக் கிடையாய்க் கிடக்கும் சாயங்கள் கெட்டுப் போகும். பூசி மகிழ்க .

பாலம்  இருக்கிறது;  (மேம்படுத்தப் பட்டு).
பாடை  மறைகிறது.  பார்வை  மாறுகிறது.