வெள்ளி, 29 மே, 2015

இது என்ன குழப்படி

இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே  நேரம்  தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்

http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301



மண்டை  குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்

இப்பாடலின் பொருள்: 

மசியாத  வாசிப்பால்  -    வாசித்துப் பொருள் விளங்காமையினால் ; 
மண்டை குழம்ப  -   ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு   அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் -   வாசித்து  முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு --  அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம்  -  அப்பொருள் அறிந்தமையினால்  அஃது இனிமை  உடையதாகும் ;
பண்டு  போருட்கல்வி பற்றினார்  -  முன்பே  பொருளியலைப் பயின்றவர்  ;
பார்த்து உரைத்தால் -   இக்கட்டுரையைப் படித்து  நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு  செரித்தாராய்  நாம் ---  உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம்  நாம்.
என்றபடி. 







வியாழன், 28 மே, 2015

vil, villA and village.

வில்லேஜ் என்ற ஆங்கிலச் சொல்  எப்படி ஏற்பட்டது என்பதை அறிஞர்கள் கூறுவதிலிருந்து  அறிந்துள்ளோம்.

villaticus "   (having to do with a farmstead or villa," from villa "country house" )   என்ற  இலத்தீன் மொழிச்சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுவர்.

வில்லா என்பது பெரும்பாலும் ஒரு  குன்றுபோலும் மேடான பகுதியில்  வளைவாகக் கட்டப்பட்டது,  இதன் நடுப்பகுதி உள்வளைவாகவும்
கடைக்கோடிகள்  பிறைபோலும் வடிவிலும் கட்டப்பட்டதாகத் தெரிகிகிறது.இதனைக் கவிழ்பிறைக் கோட்டினால் காட்டுதல் கூடுமென்று  நினைக்கின்றேன்.

வில்லா என்பது தமிழின் வில் என்ற சொல்லினின்று வருவது என்று  இலங்கை  கலாநிதி    (Dr) பரமு புட்பரத்தினம்  ஆய்ந்து கூறுகிறார்.   இங்கு வில்லா என்றது உரோமன் வில்லாவைக் குறிக்கும்.

இதிலிருந்து ஆங்கில "வில்லேஜ்" வந்ததென்பர்.    

வில்லா வளைவாகக் கட்டப்பெற்றது, படையெடுப்பு தாக்குதல் முதலியவற்றை நோக்கியே. '
 பாதுகாப்புதான்  முன்மைக் காரணமாய் இருந்துள்ளது.


notes:

வளை >  வளாகம் ;  வளை = வளைவு .  ஆய்வுக்குரியது.

villaticus "having to do with a farmstead or villa," from villa "country house"   Etymological dictionary.

செவ்வாய், 26 மே, 2015

எழுத்தில் வரும் விலங்கு.

Ref:

http://sivamaalaa.blogspot.sg/2015/05/handcuffs.html


விலங்கு என்பது வளைவு குறித்தது என்பது முன் இடுகையில் விளக்கப்பட்டது.கைவிலங்கு,ஒரு வளைவான பொருள். இது உருவினால் வந்த பெயர்.

இப்போது  "கி"என்ற எழுத்தைப் பாருங்கள்.  க-விலிருந்து கி-யை வேறு படுத்திக் காட்ட  மேல் ஒரு வளை கோடு இடப்பட்டது. இந்த வளை கோட்டுக்கு "மேல் விலங்கு"  என்பர்.   அதேபோல் "கு" என்ற எழுத்துக்கு கீழ் வளை கோடு உள்ளது.  அதற்குக் கீழ்விலங்கு உள்ளது.

ககரத்தினின்று விலக்கி  கிகரம், குகரம் முதலிய உணர்த்துதலால்  விலங்கு  என்றனர் எனினும்  ஆகும்.